இந்த 3 பேருல ஒருத்தங்க வயசு 63 - முடிஞ்சா கண்டுபிடிங்க!

Posted By:
Subscribe to Boldsky

இன்டர்நெட்டை தங்கள் அழகால் மயக்கும் அம்மா, மகள்கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அம்மாவிற்கு 63 வயது, மகள்கள் மூவருக்கு முறையே 36, 40, 41 வயதாகிறது. இவர்களில் யார் அம்மா, யாவர் மகள்கள் என கண்டுபிடிக்க ஒரு மாஸ்டர் கேம் கண்டுபிடிக்க வேண்டும் போல.

Can You Believe She Is 63 And Her Daughters Are 41, 40 And 36 Years Old?

இந்த குடும்பத்தை " The Family of Frozen Ages" என இணையத்தில் குறிப்பிட்டு வருகின்றனர். இவர்கள் வயதாவதை தடுத்து நிறுத்திவிட்டார்கள் போல.

உலகே வியக்கும் அதிசயம்!

லியூர் ஹ்சூ, 41 வயது. இன்டீரியர் டிசைனர் மற்றும் ஒரு ஃபேஷன் ப்ளாக் எழுத்தாளர் இவரது படத்தை பகிர போய் தான் இவர்கள் இன்டர்நெட்டில் வைரல் ஆனார்கள். இவரது வயதை சரியாக கண்டு பிடியுங்கள் என மக்கள் மத்தியில் செய்தி பரப்பப்பட்டது.

குடும்பமே இப்படி தான்!

இவரை பற்றி அறிய போக தான், இவரது குடும்பமே இளமை ஊஞ்சல் ஆகும் குடும்பம் என அறியப்பட்டது. இவரது இன்ஸ்டாகிராம் முகவரியில் இவரது குடும்ப படத்தை கண்டு மக்கள் மேலும் வியப்படைந்தனர். ஆம், இவரது அம்மாவிற்கு வயது 63. ஆனால், பார்க்க 30க்கு குறைவாக காட்சியளிக்கிறார்.

சகோதரிகள்!

அம்மா இப்படி என்றால். 36, 40 வயது நிரம்பிய இவரது சகோதரிகள் கல்லூரி செல்லும் மாணவிகள் போல தோற்றமளிக்கின்றனர். இவரது தந்தைக்கு வயது 74. அவரும் காண இளமையாக தான் இருக்கிறார்.

இரகசியம் என்ன?

இவர்களது குடும்ப படங்களை கண்ட பிறகு இவர்களது இளமையின் இரகசியம் என்ன என்று பலர் ஆராய துவங்கிவிட்டனர். இந்த சுப்பர் சிஸ்டர்ஸ் தங்கள் இளமைக்கு காரணம் தாங்கள் கடைப்பிடிக்கும் ஆரோக்கியமான டயட் தான் என்று கூறுகின்றனர்.

இரத்தக் காட்டேறிகள்!

ஆரம்பத்தில் இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் இரத்தக்காட்டேறிகள் என மக்கள் எண்ணி வந்துள்ளனர். ஆனால், நிறைய முன்னணி நாளேடுகள் இவர்களை பற்றி செய்திகள் வெளியிட்ட பிறகு தான் பலரும் இவர்களும் சாதாரண மக்கள் என நம்பியுள்ளனர்.

டிப்ஸ்!

காலை எழுந்ததும் 350 - 500 மில்லி நீர் குடிக்க மறக்க வேண்டாம். காலை உணவை தவிர்க்க வேண்டாம். சரியான நேரத்திற்கு உணவருந்துங்கள் என இவர்கள் இளமைக்கு டிப்ஸ் அளிக்கின்றனர்.

English summary

Can You Believe She Is 63 And Her Daughters Are 41, 40 And 36 Years Old?

Can You Believe She Is 63 And Her Daughters Are 41, 40 And 36 Years Old?
Story first published: Tuesday, July 4, 2017, 18:45 [IST]