"நாப்கின் வேணாம்.. துணியை பயன்படுத்துங்கள்" என முழங்கிய அறிவு ஜீவிகளே! கொஞ்சம் இப்படி வாங்க!!

Posted By:
Subscribe to Boldsky

ஏசி அறையின் குளிரைத் தாண்டியும் வியர்த்துக் கொண்டு வந்தது. கணினி முன்பாக உட்கார்ந்து விரல்களுக்கும் கண்களுக்கும் இடைவிடாது வேலை இருக்கும் மிக நெருக்கடியான வேலையில் தான் சுருக்கென்று ஓர் வலி, அது ஓர் கீறலைப் போலவா?அல்லது அரிவாளால் வெட்டியதைப்போலவா என்று நொடிப்பொழுதில் அனுமானிக்க முடியாது.

 Price raise of 12% GST on sanitary napkins

ஆனால் எனக்கு தெரியும். எனக்கு மட்டுமல்ல எங்களுக்கு தெரியும். அது எதற்கான வலி என்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமையலறை புனிதம் :

சமையலறை புனிதம் :

உங்களுடைய புனிதம் எங்கள் வீட்டு சமையலறை வரை மட்டும் தானா? அதற்கு அடுத்து இன்னொரு அறையும் இருக்கிறது.

அந்த அறையின் பெயர் கழிப்பறை.ஒரு முறையாவது அங்கே இருப்பதை கவனித்திருக்கிறீகளா? யாருக்கும் தெரியக்கூடாது என்று ப்ளாஸ்டிக் கவரில் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் பேட்களை பார்த்திருக்கிறீர்களா?

Image Courtesy

மாத பட்ஜெட்

மாத பட்ஜெட்

மாதச்சம்பளத்தில் பட்ஜெட் போட்டு செலவழிக்கும் குடும்பங்கள் தான் ஏராளம். மாசக்கடைசி செலவுகளுக்கு பயந்து விலைக்குறைவான பேட் எதாவது கிடைக்குமா என்று தேடும் அவலத்தில் தான் இன்றும் பெரும்பாலான பெண்கள் இருக்கிறார்கள்.

துணி :

துணி :

மாத விடாய் காலத்தில் உங்கள் பாட்டி துணியை பயன்படுத்தினார் அதைப் போலவே நீங்களும் பயன்படுத்துங்கள் என்று முட்டாளதனமான அறிவுரையை உதிர்த்த கேடுகெட்ட பிறவியே, எங்கள் பாட்டி இரண்டு பஸ் மாறி அலுவலகம் சென்று எட்டு மணி நேரம் வேலை பார்த்திருக்கவில்லை,சரி எல்லாரும் பேடிலிருந்து துணிக்கு மாறிவிடுகிறோம் எங்கள் தாத்தா கோவணத்தை கட்டிக் கொண்டு தான் திரிந்தார். நீங்கள் எல்லாரும் கோவணத்தை கட்டிக் கொள்கிறீர்களா?

அவரவர் வசதிக்கு ஏற்ப, மாறும் சூழல்களுக்கு ஏற்ப பல முன்னேற்றங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் போது இப்படியான விமர்சனம் பெண்களிடம் எப்படி வைக்க முடிகிறது உங்களால்?

சரி பேடிலிருந்து துணிக்கு , பின்னர் உடன் கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம்,, கள்ளிப்பால்.... இப்படியே பின்நோக்கி போய்விடலாமா? இன்னும் மிஞ்சியிருக்கும் அறிவுக்குஞ்சுகள் அடுத்ததாக... நீங்கள் ஏன் பெண்ணாக பிறந்தீர்கள்? ஆணாக பிறந்திருந்தால் இந்த தொந்தரவு எல்லாம் வந்திருக்குமா? பெண்ணாக பிறந்தது உங்கள் தவறு என்று உதிர்க்கும். உதிர்க்கும் நாளில் அந்து குஞ்சை பருந்து கொத்திச் செல்லட்டும்.

பேடைத் தவிர :

பேடைத் தவிர :

மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் பேடைத் தவிர பல பொருட்கள் இருக்கின்றன ரீயூசபில் பீரியட் பேண்டீஸ், ரீயூசபில் க்ளாத், டேம்பூன்ஸ், மென்சுரல் கப்ஸ் என மேலை நாடுகளில் பயன்படுத்தும் பொருட்களான இவைகளை நம்மூர் பெண்கள் பெரும்பாலானோர் கேள்விபட்டிருக்கக்கூட மாட்டாரக்ள்.

இந்த விலையேற்றம் பேட் மட்டுமல்ல, டேம்பூன்ஸ்,சானிட்டரி நாப்கின்ஸ், சானிட்டரி டவல்ஸ், என எல்லாவற்றிருக்கும் தான் என்பதை மீண்டுமொருமுறை நினைவுப்படுத்துகிறேன்.

Image Courtesy

சுகாதாரம் :

சுகாதாரம் :

ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை பேட் மாற்ற வேண்டும். அப்படி மாற்றும் போது சுத்தமாக கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று அறிவுரை வழங்கப்படுகிறது.

பேட் மாற்றுவதற்கே இந்த நிலைமையென்றால் ரியூசபில் க்ளாத், ரியூசபில் பேண்ட்டீஸ், மென்சுரல் கப் போன்றவற்றை எல்லாம் எப்படி சுத்தப்படுத்த வேண்டும்? எவ்வளவு மணி நேரங்கள் அதனை பயன்படுத்த வேண்டும் அதனால் வரும் நோய்த்தொற்று, உடல் நல பாதிப்புகளுக்கெல்லாம் யார் பொறுப்பேற்க போகிறீர்கள்?

எனக்கு இன்று மாதவிடாய் பேட் வேண்டும் என்று வெளியில் சொல்வதற்கே பயப்படும் பெண்கள் இருக்கும் நம் ஊர்களில் இதெல்லாம் சாத்தியமா?

Image Courtesy

எப்படிச் சொல்ல :

எப்படிச் சொல்ல :

விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து சமைத்து வைத்துவிட்டு அருகிலிருக்கும் வீடுகளுக்கு வீட்டு வேலைக்குச் சென்று, எட்டு மணிக்கு சித்தாள் வேலைக்கு கிளம்பும் அக்காவிடம் அக்கா மென்சுரல் கப் பயன்படுத்துங்கள் என்று சொல்ல முடியாது.

தினம் தினம் வேலை பார்த்து கொண்டு வரும் காசில் விலை அதிகமான பேட்களை வாங்க வழியில்லாமல் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும் தினங்களில் என்ன செய்வதென்று தெரியாமல் விலை குறைவான பேடை வாங்கி அதைத் துணியால் சுற்றி வைத்துக் கொள்ளும் பெண்களிடம் இப்போது இருப்பதை விட பேடின் விலை இன்னும் அதிகரிக்கப்போகிறது என்று எப்படிச் சொல்ல?

Image Courtesy

யார் நீ ? :

யார் நீ ? :

நான் என்ன அணிய வேண்டும்? . எதைப் பயன்படுத்த வேண்டும் ? என்று சொல்ல இன்னொருவருவால் எப்படி முடிகிறது? ஆண்களுக்கு சமமாக பெண்களும் எல்லா துறைகளில் வந்துவிட்டார்கள் என்று பெருமை பேசித்திரியும் இன்றைய காலத்தில் தான் ஒரே வேலை பார்க்கும் ஆண்களுக்கு ஒரு சம்பளமும் பெண்களுக்கு ஆண் வாங்குவதை விட குறைவான சம்பளமும் கொடுக்கப்படுகிறது.

மாதவிடாய் வலிகள் :

மாதவிடாய் வலிகள் :

மெல்ல கோடு போல ஆரம்பிக்கும் வலி இப்போது வயிறு முழுக்கப் பரவிவிட்டிருக்கிறது. மாதவிடாய் நேரங்களில் மாதமொருமுறை வரும் வழக்கமான வலி தான்.

ஆனால் ஒவ்வொரு மாதமும் நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். மாதவிடாய் ஆரம்பித்த நாளில் கீழ் வயிற்றில் துவங்கும் வலியானது இரண்டு நாட்கள் வரை நீடிக்கும்.

சிலருக்கு மாதவிடாய் முடியும் நாள் வரையிலும் நீடிக்கும். அந்த நாட்களில் சோர்வு,வாந்தி, மயக்கம், ஒற்றைத் தலைவலி, எரிச்சல்,அதிக வியர்வை, இடுப்பு வலி, கால் வலி முதுகு வலி போன்றவை ஏற்படும்.

உடலளவிலும் மனதளவிலும் தளர்ந்திருக்கும் நேரத்தில் கை கொடுக்காமல் இன்னும் சுமையை அதிகரிப்பது எவ்வகையில் நியாயம்.

கழிவறை :

கழிவறை :

ஆண்களுக்கு சிறுநீர் பையின் அளவு குறைவு அதனால் அவர்களால் சிறுநீரை அடக்கி வைக்க முடியாது என்று சொல்லி வெட்கமேயில்லாமல் ரோட்டோரங்களில் எல்லாம் சிறுநீர் கழிக்கும் ஆண்கள் தான்,

தங்கள் வீட்டுப் பெண்களின் மாதவிடாய் தொடர்பான சமாச்சாரங்கள் எதுவும் வெளியில் தெரியக்கூடாது,மாதவிடாய் பேச்சும் எடுக்கக்கூடாது என்று மீசையை முறுக்கிக் கொள்கிறார்கள்.

அப்படியே விலை அதிகமான பேடை வாங்கி வைத்திருந்தாலும் வெளியில் பெண்களுக்கான சுத்தமான கழிப்பறை எங்கேயிருக்கிறது? சென்னையின் நகர நெரிசலில் சிக்கி ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக பயணித்து அலுவலகம் சென்று வரும் ஒரு பெண் அவசரத்திற்கு எங்கே செல்ல முடிகிறது?

Image courtesy

பொறுத்துக் கொள் :

பொறுத்துக் கொள் :

வழக்கமான வலி, எவ்ளோ வலி வந்தாலும் தாங்கித்தான் ஆகணும் என்று பேசியது போதும். பெண்ணாய் பிறந்தது தவறல்ல.

மாதாமாதம் மாதவிடாய் ஏற்படுவது குறையல்ல. ஒவ்வொரு பெண்ணும் இதை நினைத்து வருத்தப்படவில்லை. வலியை நினைத்து வேதனைப்படவில்லை.

அவளது வேதனையெல்லாம் பொருளாதாரம் சார்ந்ததாகத்தான் இருக்கும். அந்த வேதனையை இன்னும் அதிகப்படுத்தப்போகிறது இந்த ஜி.எஸ்.டி., இருக்கும் கஷ்டங்களில் பங்கெடுக்க இலவசமாக பேட் வழங்குவது, விலை குறைப்பு செய்வது, என்றில்லாமல் வரிக்கு வரி விதித்து இப்படி விலையேற்றியிருப்பது எந்த வகையில் நியாயம்.

எங்களால் பேட் வாங்க முடியாது என்று காலிடுக்கில் ரத்தம் ஒழுக ஒரு பெண் நடுவீதியில் நடந்து சென்றால்.... உங்களின் புனிதமான இடங்களுக்குள் நுழைந்தால் .... ரத்த வாடையை முகர்ந்திருக்கிறீர்களா? மூக்கை மூடிக் கொள்ளாதீர்கள் முகத்தை சுழிக்காதீர்கள். முகத்தில் காரி உமிழ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: women health periods
English summary

Price raise of 12% GST on sanitary napkins

An issue due to price raise of 12% GST on sanitary napkins