For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இப்படி தான் நான் அசுத்தமானவள் ஆனேன், எனது 10 வயதில் - My Story #053

  |

  அதே அறை. குளியலறை, அங்கே ஒவ்வொரு மாதமும் நான் கொஞ்சம் கூடுதல் நிமிடங்கள் செலவழிக்க நேரிட்டது. ஆம்! நான் தூய்மையற்றவள் ஆனேன். என் வாழ்வில் விளக்குகள் அணைக்கப்பட்டு மங்கலாக மாறியது என கூறலாம். என் உடலில் நான் சில சிவப்பு திசுக்களை பார்க்க துவங்கினேன். அதன் பின்னர் நான் வெளியிடங்களுக்கு செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டி இருந்தது.

  My Story: This Is How I Became Impure, When I Was 10 YO!

  Cover Image Credit: girlsnotbrides

  அதை தவறுதலாக தூடுவிட்டாலும் நான் மீண்டும் எனது குளியலறைக்கு செல்ல வேண்டும். குளித்து முடித்து வரவேண்டும். உடல் ரீதியாக நான் சுமக்க துவங்கிய புதிய வலியை காட்டிலும், மன ரீதியாக நான் சுமக்க துவங்கிய புதிய வலி எனக்கு மிகவும் ரணமாக இருந்தது. எனது வலியை வீட்டின் ஆண்களிடம் எப்படி வெளிக்காட்டுவது என தெரியாத வலி.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  பாவமா?

  பாவமா?

  எனது இதயத்திற்கு இது பாவமா? என்பது புதிய கேள்வியாக இருந்தது. அனைவரும் தீண்ட தகாதவள் போல காண்பது தான் அதிக வலியை அளித்தது. எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த வலி ஆரம்பத்தில் புதியதாகவும், அது சார்ந்து பல குழப்பங்களும் இருக்கும். இனிமேல் நான் சிறுமி அல்ல, பெரிய பெண் என்ற பதவி உயர்வு கொடுக்கும்.

  பதவி உயர்வு

  பதவி உயர்வு

  நமது அலுவலகத்தில் ஒரு ஜூனியர் குறுகிய காலத்தில் பதவி உயர்வு பெற்றால் எப்படி உயர் அதிகாரிகளின் கண்கள் பெரிதாய் வியப்புக்குள்ளாகுமோ. அப்படி தான் என் வீட்டில் இருந்த பெரியவர்களுக்கும் நான் பத்து வயதிலேயே இந்த பதிவி உயர்வு அடைந்த போது வியப்பு ஏற்பட்டது.

  அசைவம்!

  அசைவம்!

  இந்த பதவி உயர்வுக்கு பிந்தைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். வாழ்வியலில், உட்கொள்ளும் உணவில், பார்வையில், நடையில், பாவனையில், தோழமையில் என ஒரு பெரிய பட்டியலே இடலாம். எனது அம்மா அந்த நாட்களில் எனக்கு அசைவம் தரமாட்டார். மறைத்து வைத்துவிடுவார். அதற்கு சமைக்காமல் இருந்திருக்கலாமே. அந்த நாட்களில் அதிகம் நான் காய்கறிகள் தான் சாப்பிட வேண்டும்.

  முதல் முறை

  முதல் முறை

  முதல் முறை நான் அசுத்தம் ஆனபோது, எனது குளியறையில் இருந்த பாதி நீரை நான் ஏற்கனவே காலி செய்திவிட்டேன். ஆனால், வலி மறைந்ததாக இல்லை. அந்த குளியலறையில் என்னையும், ஒயருடன் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பழைய குண்டு பல்பையும் தவிர வேறு யாரும் இல்லை. எனது அம்மா, எனது அசுத்தை சுத்தம் செய்ய, என்னை தூய்மையானவளாக மாற்ற சுடுதண்ணி வைத்து கொண்டுவந்தார். அந்த குளுமையான மாலையில் நான் மட்டும் கொதித்துக் கொண்டிருந்தேன்.

  தம்பட்டம்

  தம்பட்டம்

  கடைசியாக, அம்மா தண்ணி கொண்டுவந்தார், சில பல நிபந்தனைகள் தொடுக்கப்பட்டன. உடைகள் ஏலம் அங்கேயே துவைத்து காயப்போடப்பட்டது. இதெல்லாம் நானே தனி ஆளாக செய்தேன், அத்தனை வலியிலும். பிறகு அம்மா ஒரு குச்சி வலியாக வேறு ஆடைகளை என்னிடம் நீட்டினார். பிறகு, அவள் வீட்டில் அனைவரிடமும் என் வலியை கொண்டாட சென்றார்.

  போலி சிரிப்பு

  போலி சிரிப்பு

  நீ குளிச்சிட்டியா?, அதற்கான பதில் அவருக்கே தெரியும். ஆனால், மீண்டும் அனைவரின் முன்னால் அவசியமின்றி அந்த கேள்வி எதற்கு என எனக்கு புரியவில்லை. நொடிக்கு, நொடி அம்மா ஏன் என்னை கூர்ந்து பாக்கிறாள் என்பது எனக்கு சுத்தமாக புரியவில்லை. இது என்னை இன்னும் அதிக அசௌகரியமாக உணர செய்தது. அவர் காணும் போதெல்லாம் ஒரு போலி சிரிப்பை தட்டிவிட்டு மூலையில் உட்கார்ந்திருந்தேன்.

  கூடுதல் சுமை

  கூடுதல் சுமை

  நான் வெறும் பத்து வயது சிறுமி. எனக்கான பாட வேலைகள் சுமைகள் நிறைய பாக்கி இருந்தது. அதற்கும் இந்த பெயர் தெரியாத சுமை என்னில் ஏறிக்கொண்டது. அப்போது தான் என் வாழ்வில் ஒரு புதிய பொருள் உள்ளே நுழைந்தது. அம்மா, அதை அனைவரும் வெளியே சென்ற பிறகு, சுத்திமுத்தி யாரும் இருக்கிறார்களா? இல்லையா? யாரேனும் உள்ளே வந்துவிடுவார்களா? என கண்காணித்தப்படியே எனக்கு அறிமுகப்படுத்தினாள்.

  நாப்கின்

  நாப்கின்

  நாப்கின். அதை எப்படி பயன்படுத்த வேண்டும். எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என கற்பித்தாள் அம்மா. நான் வளர, வளர அதும் வளர்ந்தது. அந்த வயதில் அது மிகவும் அசௌகரியமான ஒன்றாக தான் இருந்தது. என் வலியை குடும்பமும், ஊரும் சேர்ந்து கொண்டாடியது. ஆனால், எனக்கு அன்று அது ஏன் என்ன என்று ஏதும் தெரியவில்லை. ஒன்றை தவிர. ஆம்! நான் அசுத்தமானவள் ஆனேன், எனது பத்து வயதிலேயே... என்று!

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  My Story: This Is How I Became Impure, When I Was 10 YO!

  My Story: This Is How I Became Impure, When I Was 10 YO!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more