உங்களை ஆச்சரியத்தில் உறைய வைக்கும் சின்ன குழந்தைகளின் சாதனைகள்!

By Lakshmi
Subscribe to Boldsky

குழந்தைகள் அனைவருமே சாதனையாளர்கள் தான். ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு மிகப்பெரிய சக்தி இருக்கிறது. அதனை வெளியே கொண்டு வர வேண்டியது பெற்றோர்களின் கடமை தான். மேலும் குழந்தைகளுக்கு எதில் அதிக ஈடுபாடு இருக்கிறதோ அந்த வழியில் அவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரமும் ஊக்கமும் கொடுத்தால், அவர்கள் வாழ்க்கையில் நன்றாக வருவார்கள். இன்று குழந்தைகள் தினம் அல்லவா... இந்த பகுதியில் சில சாதனை குழந்தைகளை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. நடனம்

1. நடனம்

ஜெயப்பூரை சேர்ந்த பேபி லட்சி பிரஜபதி என்ற 11 வயது குழந்தை 21, 2015 ஆண்டு நடைபெற்ற பாவை என்ற நடத்தை தனது தலையில் 125 பானைகளை வைத்து நடமாடி உள்ளார்.

2. இலக்கியவாதி

2. இலக்கியவாதி

இளம் இலக்கியவாதி என்ற பட்டத்தை 11 வயது ஆன லட்சி பிரஜாபதி என்ற மாணவி தனது ஒன்பது வயதிலேயே 'sit a while with me' என்ற புத்தகத்தை எழுதி வாங்கியுள்ளார்.. இவர் ஜெய்பூரை சேர்ந்தவர்.

3. நாடுகளின் பெயர் கூறுதல்

3. நாடுகளின் பெயர் கூறுதல்

உலக வரைப்படத்தை வைத்து பேபி புக்கிய சிரி தேஜி சிங் ரத்தோட் என்ற மாணவி, உலக வரைபடத்தில் உள்ள பல நாடுகளை தனது எட்டு வயதிலேயே ஒரே நிமிடத்தில் கண்டு பிடித்து கூறியுள்ளார். இவர் தெலுங்கானவை சேர்ந்தவர் ஆவார்.

4. 4 வயது குழந்தை

4. 4 வயது குழந்தை

இந்தியாவில் நாக்பூரில் 4 வயது குழந்தை 2 தேசிய விருதை பெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாராயண வித்தியாலயத்தில் 'ஆன் ஸ்போட் அட்சுடிகேஷன்' போட்டியை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடத்தியது. இதில் கலந்து கொண்ட வராட் மல்காண்டாலே என்னும் 4 வயது சிறுவன் கலந்து கொண்டார். 60 வினாடிகளில் 51 வார்த்தைகளின் உச்சரிப்பை சரியாக சொல்லி சாதனை படைத்துள்ளார். மேலும் 100ல் இருந்து பூச்சியம் வரை பின்னோக்கி எண்ணுவதை 70 நொடிகளில் முடித்து மற்றொரு சாதனை படைத்துள்ளார்.

image source:

5. யோகா...

5. யோகா...

கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரா. இவரது 13 வயது மகள் குஷி. இவர்கள் மைசூர் ஆபிஐ நகரில் வசித்து வருகின்றனர். கோல்டன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்டு உலக சாதனை புத்தகதில் இடம்பெறுவதற்கான யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கோல்டன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்டு உலக சாதனை புத்தகதில் இடம்பெறுவதற்கான யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட குஷி எதையும் பிடிக்காமல், எந்த பேலன்ஸும் இன்றி பின்பக்கமாக உடலை வளைத்தும் எழுந்தும் நீராலம்பா பூரன சக்ராசனா செய்தார். கொஞ்சமும் இடறாமல், அலுத்துக்கொள்ளாமல் 15 நிமிடம் வரை குஷி தொடர்ந்து இந்த யோகாசனத்தை செய்தார். இதன் மூலம் அவர் உலக சாதனை படைத்தார்.

6. மியூசிக் கம்போசர்..

6. மியூசிக் கம்போசர்..

உலகின் மிக சிறிய வயது மியூசிக் கம்போசர் என்ற விருதை பிராஞ்சலி என்ற ஒன்பது வயது குழந்தை பெற்றுள்ளார். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர்.

7. IQ லெவல்

7. IQ லெவல்

வயது பதினொன்று.. IQ லெவல் 225 என்றால், நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை. கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இவர் பாளையங்கோட்டையை சேர்ந்தவர். இன்ஜினியரிங் படிப்பு முடித்தவர்கள் எழுத வேண்டிய எம்.சி.பி., மற்றும் சி.சி.என்.ஏ., தேர்வுகள் உட்பட, ஏழு தேர்வுகளை எழுதி, சாதனை படைத்துள்ளார். படிப்பில் மேலும் பல சாதனைகள் படைப்பதற்கு, மத்திய, மாநில அரசுகளின் உதவி கிடைத்தால், ஏதுவாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

8. மூன்று வயது குழந்தை

8. மூன்று வயது குழந்தை

ராமநாதபுரம் மாவட்டம், சிகில்ராஜ வீதியை சேர்ந்த இன்ஜினியர் தினேஷ்குமார் மகள் தமிழினி (3). இவர், ஒரு நிமிடத்தில் 69 சர்வதேச மற்றும் தேசிய தலைவர்கள், மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்களின் பெயர்களை படத்தை பார்த்து சொல்லி சாதனை படைத்தார்.

9. 400 மொழிகள்...

9. 400 மொழிகள்...

பல மொழிகளில் நமக்கு பேசத் தெரிந்தாலும், அந்த மொழிகளை எழுதவோ, படிக்கவோ தெரியாது. ஆனால் பத்து வயது மஹ்மூத் அக்ரம் 400 மொழிகளில் படிக்கிறார்.. எழுதுகிறார் மற்றும் தட்டச்சு செய்கிறார். இவரது சொந்த ஊர் சென்னை வியாசர்பாடி.. இவர் தனது நான்கு வயதிலேயே மொழிகளை கற்க தொடங்கிவிட்டார்.

image source

10. செஸ் சாம்பியன்

10. செஸ் சாம்பியன்

இனியன் என்ற மாணவன் ஒரு இளம் செஸ் சாம்பியன் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான காமன்வெல்த் போட்டிகளில் செஸ் சாம்பியன்ஷிப்பை கடந்த 2016 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். மேலும் இந்த வருடம் தனது 14 ஆவது வயதில் இண்டர் நேஷனல் அளவில் மாஸ்டர் பட்டத்தையும் வென்றுள்ளார். இவர் ஈரோடு மாவட்டத்தை சார்ந்தவர். இவரது பெற்றோர்கள் கே. பன்னீர்செல்வம் மற்றும் சரண்யா. இவர் அது தவிர 33 முறை சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Child achievers in India

    Child achievers in India
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more