விசித்திர காரணத்திற்காக வீட்டு வாசல்களில் ஆண்குறி வரைந்து வைத்திருக்கும் கிராமம்!

Posted By:
Subscribe to Boldsky

நூற்றாண்டு காலமாக பூட்டானில் இருக்கும் ஒரு பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் தங்கள் கிராமம் முழுக்க, வீடு, கடைகள், வரவேற்கும் இடம் என எந்த பக்கம் திரும்பினாலும் ஆண்குறி ஓவியம், படங்கள், பதாகைகள் வைத்து வருகின்றனர்.

புல்லாஸ் என அவர்களது மொழியில் ஆண்குறியை குறிப்பிடுகின்றனர். இவர்கள் ஏன் இப்படி சுவர் எங்கிலும் ஏதோ திருஷ்டி பொம்மை போல ஆண்குறி வரைந்து வைக்கிறார்கள் என்பதற்கு சில விசித்திர காரணங்களும் கூறப்படுகின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆவியை விரட்டும்!

ஆவியை விரட்டும்!

இப்படி ஆண்குறியை வரைந்து வைப்பதால் ஆவிகள் அண்டாது, அவற்றை இந்த படம் விரட்டிவிடும் என இந்த கிராமத்து மக்கள் கருதுகின்றனர். மேலும், இப்படி ஆண்குறி வரைவதால் கருவளம் காக்கப்படும் என்றும் நம்புகின்றனர்.

Image Source

விசித்திர சாமியார்!

விசித்திர சாமியார்!

முன்னர் வாழ்ந்து வந்த துருக்பா குன்லி எனும் விசித்திரமான சாமியார் ஒருவர் பூட்டான் பயணம் செய்தார். அவர் ஒயின், பெண்கள் மற்றும் தீயொழுக்கம் கொண்டிருந்தார். இவர் இழிவுப்படுத்தும் வகையில் பாடங்கள் கற்பித்து வந்துள்ளார்.

Image Source

செக்ஸ்!

செக்ஸ்!

இவரது செயல்கள் மற்றும் இவரை பற்றிய கதைகள் அனைத்தும் செக்ஸ் சார்ந்தாக இருக்கிறது. இவர் செக்ஸ் மீது அதீத ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இவர் தொப்புளுக்கு அடியில் தான் மகிழ்ச்சி இருக்கிறது என ஆபாசமாக சொற்பொழிவு எல்லாம் ஆற்றியுள்ளார்.

பைத்தியம்!

பைத்தியம்!

தன்னை தானே இந்த சாமியார் "Madman From Kyishodruk" என கூரிவந்துலாளர். இவரை கருவள சாமியார் என்றும் அழைத்து வந்துள்ளனர். இவர் பெண்களுடன் மது அருந்துவது, பெண்களின் கற்பை கவர்வது என்ற வண்ணமே இருந்துள்ளார்.

Image Source

உடலுறவு!

உடலுறவு!

இவர் மரபில்லாத புத்த கிளை வழியை பரப்பி வந்துள்ளார். இவர் பெரும்பாலும் பெண்களுடனே நாட்களை கழித்துள்ளார். இவர் உடலுறவு கொண்டு ஆசீர்வாதம் வழங்கும் பழக்கமும் கொண்டிருந்துள்ளார்.

Image Source

மேற்கு பூட்டான்!

மேற்கு பூட்டான்!

இன்றளவிலும் மேற்கு பூட்டான் பகுதியில் லாபோன் எனும் பெயரில் கடவுளை அழைக்கும் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் ஏணி முனை ஆண்குறி போன்ற உருவம் கொண்டு தயாரிப்பர். இப்படி ஒரு ஏணி செய்து வைப்பதால் கடவுள் தங்களுக்கு நல்ல ஆரோக்கியமும், வளமும் அருளுவார் என இவர்கள் எண்ணுகின்றனர்.

Image Source

கோவில்!

கோவில்!

பூட்டானில் சிமி லாகாங் எனும் கோவில் இருக்கிறது இங்கு யாத்திரை சென்றால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என இவர்கள் நம்புகின்றனர். அங்கிருக்கும் புத்த துறவிகள் அவர்களுக்கு ஆசீர்வாதம் செய்கிறார்கள். இந்த கோவிலை கருவள கோவில் என்றும் அழைக்கின்றனர்.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

In This Place from Bhutan, They Painting Phullas aka Penis in All Over The Village to Protect Them-self from Evil Spirit!

In This Place from Bhutan, They Painting Phullas aka Penis in All Over The Village to Protect Themself from Evil Spirit!
Story first published: Tuesday, June 20, 2017, 10:40 [IST]