Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
வளர்ந்து வரும் கோலிவுட் காமெடி நடிகர் யோகி பாபு பற்றி பலரும் அறியாத உண்மைகள்!
நடிப்பிலும், பேச்சு வழக்கிலும் கவுண்டமணி சாயல் இருக்கும் இவர், அவரை போலவே மக்களை நன்கு சிரிக்கவும் வைக்கிறார். இவர் காமெடி நடிகர் மட்டுமல்ல. அதையும் தாண்டி பல முகங்கள் கொண்டிருக்கிறார் யோகி பாபு.
"பன்னி மூஞ்சி வாயன்" என்ற பெயரால் புகழ் பெற்றவர் யோகி பாபு. தனித்துவமான உடல் மொழி, பேச்சு மொழியால் கோலிவுட் சினிமா காமெடியன் லிஸ்ட்டில் தடம் பதிக்க ஆரம்பித்தார்.

இவரை திரையில் மட்டுமே பார்க்கும் பலருக்கும் இவர் வெறும் காமெடியன் என்று தான் தெரியும். ஆனால், இவரை பற்றிய பல உண்மைகள், உங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
இவரது பெயர் மாற்றத்தில் இருந்து தொழில் மாற்றம் வரை மறைந்திருக்கும் பின்னணி உண்மைகள்...

லொள்ளு சபா!
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி லொள்ளு சபா தான் யோகி பாபுவுக்கு அறிமுகம் கொடுத்தது. இயக்குனர் ராம் பாலா தான் இவரை கண்டெடுத்தார்.

தனித்துவ தோற்றம்!
யோகி பாபுவின் தனித்துவமான தோற்றம் கண்டு தான் ராம் பாலா இவரை தேர்வு செய்தார். இவரை நடிகராக / ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிக்க தான் அழைத்தார் ராம் பாலா.

உதவி இயக்குனர்!
யோகி பாபு ராம் பாலாவிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்ற துவங்கினார். ஏறத்தாழ இரண்டு வருடங்கள் இவர் ஸ்க்ரிப்ட் எழுத உதவியாக இருந்தார்.

யோகி!
அமீரின் "யோகி" படம் தான் வெள்ளித்திரையில் யோகி பாபுவுக்கு அறிமுகம். இந்த படத்தின் பெயர் தான் இவர் பெயரின் முன்னாடி விசிட்டிங் கார்ட் போல ஒட்டிக் கொண்டது.

கால்பந்தாட்ட வீரர்!
சமீப காலமாக யோகி பாபு மாநில அளவில் கால்பந்தாட்ட வீரராக விளையாடியவர் என்ற செய்தியும் பரவலாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் காமெடியனாக மட்டும் ஜொலித்த யோகி பாபு.
ஆண்டவன் கட்டளையில் தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் எனவும் நிரூபித்தார்.



Click it and Unblock the Notifications
