Latest Updates
-
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
287 வழக்குகளில் தேடப்பட்டு வந்த திருடன், கக்கா மேட்டரில் போலீஸில் மாட்டினார்!
நீண்ட நாளாக சீன போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து வந்த 287 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட திருடனை, அவனது கக்காவை வைத்து கைது செய்தது சீன போலீஸ்.
287 பல்வேறு குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த கள்வன் ஜாங். இவன் விடுதலையானது கடந்த 2011-ம் ஆண்டு. இவனை பிடிக்க சீன போலீஸ் படாதபாடுபட்டது. இவனை ஒருவழியாக, குற்ற சம்பவம் நடந்த வீட்டில் இவன் விட்டு சென்ற கக்காவை வைத்து பிடித்துள்ளது சீன போலீஸ்.

287 கொள்ளை வழக்கு!
ஏறத்தாழ 287 கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்தவன் ஜாங். இந்த அனைத்து திருட்டு சம்பவங்களும் நள்ளிரவு வேளையில் நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவன் பணம், பஸ் கார்ட், ஷூ, நகை என ஒன்று விடாமல் திருடுபவன்.

போரடித்து திருடனான ஜாங்!
ஜான் தனது மனைவியுடன் வேலை தேடி மனைவியுடன் பெய்ஜிங்கிற்கு வந்துள்ளான். ஆனால், வேலை போரடித்துப்போக, திருடுவதில் இறங்கியுள்ளான். ஜாங் பெரிய அளவிலான உணவு சாப்பிட, இன்டர்நெட்க்கு போக, படங்கள் பார்க்க தான் திருட ஆரம்பித்துள்ளான்.

3 ஆண்டு சிறை!
ஜான் பிடிப்படுவது இதுவே முதல் முறை அல்ல. முன்னர் ஒருமுறை பிடிப்பட்டு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, கடந்த 2011-ல் தான் வெளியானான்.

கக்கா!
பழைய ரெக்கார்ட்களை வைத்து ஜாங்கை மீண்டும் சீன போலீசால் பிடிக்க முடியவில்லை. இவனது மரபணு போலீஸ் ரெகார்ட்-ல் இருந்தது. அதை, ஒரு வழக்கில் குற்றம் நடந்த சம்பவத்தில் திருடன் விட்டு சென்ற "கக்காவை" வைத்து சோதனை செய்ததில் அது ஜாங் என்று தெரியவந்தது. இதை சாட்சியமாக வைத்து, ஜாங்கை சீன போலீஸ் கைது செய்தனர்.

ஆதாரம்!
டிஜிட்டல் உலகில் எதையெதையோ ஆதாரமாக காட்டி, போலீஸ் திருடர்களை பிடிக்கிறது. ஆனால், உலகிலேயே முதல் முறையாக சீன போலீஸ் கக்காவை ஆய்வு செய்து, மரபணு கண்டறிந்து, அதை சாட்சியமாக்கி, திருடனை கைது செய்துள்ளது. சற்று வேடிக்கையாக இருந்தாலும், சீன போலீஸ் யூ ஆர் கிரேட்!



Click it and Unblock the Notifications
