இரத்தம் ஒழுக நிர்வாணமாக மக்கள் மத்தியில் இவர்கள் நடத்திய போராட்டம் எதற்கு?

Posted By:
Subscribe to Boldsky

நமது உலகம் மனிதர்களுக்கு மட்டும் ஆனதல்ல. இதை நாம் மட்டும் தான் மனதில் வைத்துக் கொள்வதில்லை. மற்ற எந்த உயிரினமும் உலகை அழிக்கவோ, மற்ற உயிர் இனத்தை முற்றிலுமாக அழிக்கவோ முற்படுவதில்லை.

ஆனால், மனிதர்களாகிய நாம் தான் நமது தேவைக்காக, பேராசைக்காக, சுயநலத்திற்காக உலகின் மற்ற உயிர் இனங்கள் மற்றும் இயற்கை செல்வங்களை அழித்து வருகிறோம். முக்கியமாக காடுகளை அடுத்து, நமது அன்றாட தேவைக்காக, பசிக்காக, ஃபேஷன் உடைகள், உபகரணங்களுக்காக அதிகளவில் விலங்குகளை கொன்றுகுவித்து வருகிறோம்.

Animal rights Activists Does Protest Against Consumption of Meat in a Weird Way

Image Source

உலகின் வாழ்வியல் வட்டத்தை நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்திருப்போம். பச்சை தாவரங்களை உண்ணும் விலங்குகள், அவ்விலங்குகளை உண்ணும் காட்டு விலங்குகள், காட்டு விலங்குகளை வேட்டையாடும் மனிதர்கள் என அது அமைந்திருக்கும்.

இதில் ஏதேனும் ஒன்று அழிந்தாலும் கூட, மற்ற இனங்களும் முற்றிலும் அழியும் அபாயம் இருக்கிறது. இதையெல்லாம் மறந்து நாம் விலங்குகளை மனசாட்சி இன்றி அழித்து வருகிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விலகுகள் நல ஆதரவாளார்கள்!

விலகுகள் நல ஆதரவாளார்கள்!

உலகில் உள்ள பல விலங்குகள் நல ஆதரவாளர்கள் விலங்குகளை மனிதர்களின் சுயநல பயன்பாட்டிற்கு, உணவாக, தொழிற்சாலை தயாரிப்புகளுக்காக கொல்லப்படுவதை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் ஒருபடி மேல்..

மேற்கத்திய நாடுகளில் ஒருபடி மேல்..

இதர உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மேற்கத்திய நாடுகளில் பலவகையிலான போராட்டங்கள் ஆங்காங்கே இது தொடர்ச்சியாக நடந்துக் கொண்டே தான் இருக்கிறது.

மனித இறைச்சி!

மனித இறைச்சி!

அதில் ஒரு படி மேலாக சென்று, விலங்குகளை எப்படி இறைச்சியாக நாம் விற்கிறோமோ அவ்வாறே, மனிதர்கள் இரத்தம் சொட்ட, பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு மனிதர்கள் கூடும் கூட்டம் மிகுதியான இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Image Source

நூறு கோடி!

நூறு கோடி!

இறைச்சிக்காக மட்டுமே, உலகில் வருடா வருடம் நூறு கோடி அளவில் விலங்குகள் கொன்று குவிக்கப்படுகின்றன. இது மனித இனத்தில் நூறு கோடி பேர் கொன்று குவிக்கப்பட்டால் அது எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்பதை நாம் அறிவோம்.

அனைவரும் உயிரினங்கள் தானே!

அனைவரும் உயிரினங்கள் தானே!

ஆடை அணிதிருப்பதால் நாம் நாகரீகம் அறிந்த, மேல்தட்டு உயிரினங்கள் ஆகிவிட்டோம். ஆடை அணியாமல் காடுகளில், தெருக்களில் நமது கல்வீச்சிக்கு, துப்பாக்கி சூட்டுக்கு அஞ்சி வாழ்வதால் இதர உலக உயிரினங்கள் கீழ்தட்டு உயிரினங்கள் ஆகிவிட்டன.

உரிமை மீறல்...

உரிமை மீறல்...

இதனால், நாம் விலங்குகளை கொன்று குவித்தால் தவறில்லை. இதுவே, அண்டைநாடுகளில் மனிதர்களை, மனிதர்களே கொண்டு குவித்தால் அது மனித உரிமை மீறல். அனைவரும் உயிர் தானே. இதிலும், ஏற்ற தாழ்வு உண்டா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Animal rights Activists Does Protest Against Consumption of Meat in a Weird Way

Activists from the animal rights organization protest against the production and consumption of meat
Subscribe Newsletter