"தனிமையினால் இனிமை காண முடியுமா....." அட கண்டிப்பா முடியும்ங்க!!!

By: John
Subscribe to Boldsky

தனிமையாக இருப்பவர்கள் எல்லாம் முசடு, கோபக்காரர்கள், ஈகோ பிடித்தவர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், உண்மையிலேயே அவர்கள் தான் தனிமையாக இருந்தாலும் மிகவும் இனிமையான முறையில் வாழ்க்கையை வாழ்கின்றனர் என்று கூறப்படுகிறது.

உண்மையில் தனிமையில் இருப்பவர்கள் தான் நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்கின்றனர். நேரம் பொன் போன்றது என்பார்கள். அவர்கள் நேரத்தை பொன் ஆக்குகின்றனர் என்பது தான் உண்மை.

இதெல்லாம் சரி தனிமையில் அப்படி என்ன அவர்கள் இனிமை காண்கின்றனர் என்பதை தானே தெரிந்துக்கொள்ள வேண்டும்.... தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இளைப்பாற முடியும்

இளைப்பாற முடியும்

இன்றைய ஓட்டப்பந்தையம் போன்ற வாழ்வியல் முறையில் கண்டிப்பாக ஓய்வு என்பது கட்டாயம் தேவையான ஒன்று. இளைப்பாற வேண்டும், எந்த சிந்தனையும் இன்றி, இடையூறுகளும் இன்றி ஓர் நல்ல ஓய்வு, அதை தனிமை தான் தர இயலும்.

உங்களை நீங்களே உணர முடியும்

உங்களை நீங்களே உணர முடியும்

ஒவ்வொரு வெற்றிக்கு பிறகும், தோல்விக்கு பிறகும், ஏன் ஒவ்வொரு விடியலிலும் நீங்கள் சிறிது நேரம் தனிமையில் இருத்தல் வேண்டும். அது உங்களை பற்றி நீங்களே உணரவும், புரிந்துக் கொள்ளவும் உதவும். இது நீங்கள் தடைகளை தாண்டி செல்ல உதவும்

நேரத்தை பொன் ஆக்க

நேரத்தை பொன் ஆக்க

உங்கள் நேரத்தை விரயம் ஆக்காமல், பொன் சரியான வழியில் செலவிட தனிமை வழிவகுக்கும். நீங்கள் நன்கு யோசிக்க முடியும், என்ன செய்யலாம் எப்படி செய்யாலாம் என்று திட்டமிட தனிமை ஓர் சிறந்த கருவி ஆகும்.

தியானம்

தியானம்

தியானம் உங்கள் உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்த உதவும். தியானம் செய்வதனால் நீங்கள் கவனம் சிதறாமல் வேலை செய்யமுடியும். சீரிய முறையில் தியானம் செய்வதற்கு கண்டிப்பாக உங்களுக்கு தனிமை உதவும்.

நினைத்ததை எல்லாம் செய்ய முடியும்

நினைத்ததை எல்லாம் செய்ய முடியும்

தனிமை உங்களுக்கு திட்டமிடுதலுக்கு நிறைய நேரம் தரும். அந்த நேரத்த்தை நீங்கள் சரிவர பயன்படுத்திக் கொண்டால் நீங்கள் நினைத்ததை எல்லாம் வெற்றிகரமாக பின்னாளில் செய்து முடிக்க முடியும்.

நற்சிந்தனைகள்

நற்சிந்தனைகள்

நல்ல சிந்தனைகள் பிறக்க தனிமை தான் வழிவகுக்கின்றது. இது, உங்களையும், உங்கள் வாழ்வியலையும் மேன்மையடைய உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Being Alone Is Awesome

Do you know why being alone is an awesome thing? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter