ஏலியன்கள் வாழும் கிரகங்கள் என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட கோள்கள்!!!

By: John
Subscribe to Boldsky

நாம் இதுவரை ஏலியன்களை கார்டூன் படங்களிலும், ஆங்கில திரைப்படங்களில் மட்டும் தான் பார்த்திருக்கிறோம். ஆனால், உண்மையிலேயே ஏலியன்கள் நமது பிரபஞ்சத்தில் இருக்கின்றாதா? என்ற கேள்வி பல வருடங்களாக ஆராய்ச்சியாளர்களின் மண்டையைக் குடைந்து வருகிறது.

உலகம் அழிந்துவிடும் என விஞ்ஞானிகளை அஞ்ச வைக்கும் பேரழிவு நிகழ்வுகள்!!!

இதற்கு ஏற்றார் போல், நமது உலகில், இன்று வரை கண்டுப்பிடிக்க முடியாத பல வினோத சம்பவங்கள் நடந்திருக்கின்றனர். அவை ஏலியன்களால் நடந்தவை தான் என்றும் சிலர் நம்புப்கின்றனர். உண்மையிலேயே, நம்மை போல, இப்பிரபஞ்சத்தில் வேறு கிரகங்களில் வேறு ஜீவராசிகள் உயிர் வாழ நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்தியாவில் அவிழ்க்க முடியாத 7 மர்ம முடிச்சுகள்!!!

நாம் வேறு கிரகங்களை தேடுவதை போல, அவையும் நம்மை தேடி அலைந்துக் கொண்டிருக்கலாம். இவ்வளவு விஷயங்களுக்கு நடுவில், ஆராய்ச்சியாளர்கள் ஒரு சில கோள்களைக் கண்டறிந்து, அவ்விடங்களில் ஏலியன்கள் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கலாம் அல்லது உயிர் வாழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

இந்திய புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ள வியக்க வைக்கும் அறிவியல் பூர்வமான கண்டுப்பிடிப்புகள்!!!

அப்படி ஆராய்ச்சியாளர்கள் ஏலியன்கள் வாழும் சாத்தியம் உள்ள கோள்கள் என்று இதுவரைக் கண்டிபிடுத்துள்ள கிரகங்களைப் பற்றி தான் இனி நாம் பார்க்கவிருக்கிறோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோம்பீ கோள் (Fomalhault B, The Zombie Planet)

சோம்பீ கோள் (Fomalhault B, The Zombie Planet)

இதுவரை கண்டறியப்ப்பட்ட கோள்களில் இது தான் மிகவும் விநோதமானது என்று கூறப்படுகிறது. இந்த கோளில் இருந்து அழுக்கு மற்றும் இறந்த துகள்கள் தொடர்ச்சியாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. மற்றும் இதன் கிரக சுற்றுப்பாதையே கொஞ்சம் விசித்திரமாக கோணல்மாணலாக தான் இருக்கின்றது. இது போன்ற பல விநோதங்களை கொண்டிருப்பதால் தான் இந்த கோளிற்கு சோம்பீ கோள் (Fomalhault B, The Zombie Planet) என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

2 பி (TrES - 2B)

2 பி (TrES - 2B)

2 பி என்றதும் ஏதோ நம்ம ஊரு பேருந்து என்று நினைத்துவிட வேண்டாம். பிரபஞ்சத்திலேயே மிகவும் இருண்ட கிரகம் என்று கருத்தப்படும் கோள் இந்த 2பி கோளாகும். 1% குறைவான ஒளி தான் இந்த கிரகத்தில் இருக்கிறதாம்.

கே.ஓ.ஐ, (KOI-314c)

கே.ஓ.ஐ, (KOI-314c)

நமது பிரபஞ்சத்திலேயே மிகவும் லேசான கோள் என்று கண்டறியப்படுவது இந்த கோள் ஆகும். இது ஏறத்தாழ நமது பூமியின் எடை மற்றும் அடர்த்தியைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கிரகம் நமது உலகை விட 60% பெரிய கிரகம் ஆகும். இந்த கே.ஓ.ஐ, (KOI-314c) கோளின் அருகே KOI-314b என்ற மற்றொரு கோளும் இருக்கிறதாம்.

கெப்ளர் 70 பி (Kepler 70 B)

கெப்ளர் 70 பி (Kepler 70 B)

நமது பிரபஞ்சத்தில் இருக்கும் மிகவும் சூடான கிரகம் என்று கருதப்படுவது இந்த கெப்ளர் 70 பி கிரகம் தான். இது பல சாதனைகளை தன்வசம் வைத்துள்ளது. இந்த கோளின் தட்பவெட்ப நிலை 2000 டிகிரி செல்சியஸ். இதன் நட்சத்திரத்துடன் மிகவும் அருகாமையில் இருப்பது தான் இதற்கான காரணம். சூரியனுக்கும் மெர்குரிக்கும் இடையேயான இடைவேளையைக் காட்டிலும் 65% குறைவான தூர இடைவேளையில் இதன் நட்சத்திரத்துடன் இந்த கோள் இருக்கிறது.

ஓகள் - 2005 (OGLE-2005-BLG-390L B)

ஓகள் - 2005 (OGLE-2005-BLG-390L B)

ஒளிதூரம் வைத்து கணக்கிடும் போது நமது பிரபஞ்சத்தில் இருந்து மிக தொலைவில் இருக்கும் கோளாக இது கருதப்படுகிறது. இது ஏறத்தாழ 28,000 ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கிறது. மற்றும் நமது பிரபஞ்சத்திலேயே வைத்து மிகவும் குளிர் அதிகமான கோளும் இது தானாம்.

கோரோட் (COROT-Exo-7b)

கோரோட் (COROT-Exo-7b)

இதுவரை கண்டறியப்பட்டுள்ள கோள்களில் மிக வேகமாக தனது சுற்றுப்பாதையை சுற்றி வரும் கோளாக இது கருதப்படுகிறது. நமது பூமியை விட எட்டு மடங்கு எடை அதிகமுள்ள இந்த கோள். அகலத்தில் இருமடங்கு குறைவாக இருக்கிறதாம். இந்த கோளின் தனித்தன்மையாக கருதப்படுவது இதன் வேகம் தான். நமது பூமி ஒரு வருடத்தில் சுற்றி வரும் பாதையை, இந்த கோள் வெறும் 20 மணி நேரத்தில் சுற்றி வந்துவிடும்.

கேப்டேயின் பி (Kapteyn B)

கேப்டேயின் பி (Kapteyn B)

நமது சூரிய குடும்பத்திற்கு மிகவம் அருகாமையில் இருக்கும் கோள் தான் இந்த "கேப்டேயின் பி" இதே போன்ற மற்றொரு கோள் நமது பக்கத்துக்கு பால்வழி மண்டலத்தில் இருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர். அந்த கோளின் பெயர் ஒமேகா சென்ச்சூரி (Omega Centuari) என்று அறியப்படுகிறது.

பிடி+20 1790 பி (BD+20 1790b)

பிடி+20 1790 பி (BD+20 1790b)

இந்த கோள் தான் இப்போதுள்ள கோள்களில் மிகவும் இளமையான கோள் என்று கூறப்படுகிறது. இந்த கோள் தோன்றி 35 மில்லியன் ஆண்டுகள் தான் ஆகின்றன. நமது பூமி இந்த கோளைவிட 100 மடங்கு வயதில் அதிகமானது ஆகும். இந்த கோளில் வலிமையான காந்த ஈர்ப்புகள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஜி.ஜே 1214பி ( GJ 1214b)

ஜி.ஜே 1214பி ( GJ 1214b)

நமது பூமியை விட பெரிய கோளான இந்த கிரகத்தில், தட்பவெட்ப நிலையும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோள் முற்றிலும் நீரால் சூழப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த நீர் தூய நீர் அல்ல என்று கூறுகிறார்கள். ஏனெனில், அந்த கோளின் அதிகப்படியான தட்பவெப்பம் மற்றும் அழுத்தத்தினால், அந்த நீரில் சூடான பனிக்கட்டிகளும், ஒரு வித வினோதமான திரவமும் கலந்திருக்கிறது.

கெப்ளர் 10 சி (Kepler 10c)

கெப்ளர் 10 சி (Kepler 10c)

இந்த கிரகத்தில் சனி, நெப்டியூன் போன்ற கிரகங்களில் உள்ள அளவு அதிகமான ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் இருக்கின்றன. இது நமது பூமியை விட 2.3 மடங்கு பெரிய கோள் ஆகும். இதைப் பாறை கோள் (Rocky Planet) என்று செல்லமாக கூறுகின்றனர். ஏனெனில், இந்த கோளில் அதிகமாக பாறை படிவங்கள் தான் இருக்கின்றன. மற்றும் இந்த கோள் அறிஞர்களால், மினி நெப்டியூன் என்றும் அழைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Ten Record Shattering Alien Planets

Do you know about the top ten record shattering alien planets? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter