நாளைக்கு மேட்ச் பாக்க நீங்க எப்படியெல்லாம் லீவு சொல்ல போறீங்க...?

Posted By:
Subscribe to Boldsky

இந்திய ஆண்களின் பள்ளி, அலுவலக லீவு வரலாற்று பக்கங்களை புரட்டி பார்த்தல் உங்களுக்கு ஒரு மாபெரும் உண்மை தெரிய வரும். அதில் பெரும்பாலான நாட்கள் இந்தியா விளையாடிய முக்கியமான மேட்ச் நடைபெற்ற நாட்களாக தான் இருக்கும். இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மாபெரும் மதம், இங்கு வெற்றி மட்டுமே தேவை. தோல்வியை அகராதியில் கூட ஏற்க மறுக்கும் குணம் கொண்டவர்கள் நாம்.

ஹாட்டான பெண்களை மடக்கிய கிரிக்கெட் வீரர்கள்!!!

ஏன் மற்ற விளையாட்டுகளில் இல்லாத ஆர்வமும், ஆக்ரோஷமான உணர்வும் கிரிக்கெட்டில் மட்டும் இருக்கிறது??? இந்த விளையாட்டில் மட்டும் தான் நாங்கள் கடவுளை ஆடுகளத்தில் பார்த்திருக்கிறோம் என்பது நூறு கோடி மக்களின் பதிலாக இருக்கும். சச்சின் என்ற கடவுள் தான் இந்த ஆக்ரோஷமான உணர்விற்கு மாபெரும் காரணம்.

அடித்து ஆடுபவர்களை துரத்தி விரும்பிய நடிகைகள்!

இந்தியாவில் மட்டும் தான் மருத்துவர், பொறியியலாளர், ஆசிரியர், கொத்தனார், சமையல்காரர், ஓட்டுனர், மளிகை கடைக்காரர் மற்றும் பல துறைகளில் வேலை செய்யும் அனைவரினுள்ளும் ஒரு கிரிக்கெட் வீரன் ஒளிந்துக் கொண்டிருப்பான். இங்கு கிரிக்கெட் ரசிகர்களை விட, வெறியர்கள் தான் அதிகம். நாளை கண்டிப்பாக அலுவலகம் செயல்படும், ஆனால் வெறிச்சோடி...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேசப்பற்று மிக்க லீவு

தேசப்பற்று மிக்க லீவு

நான் எனது தேசத்திற்காக உறுதுணையாக இருக்க போகிறேன். என தேசத்தின் மிக முக்கியமான வெற்றியை துணை நின்று கொண்டாட போகிறேன் என ஒரு தேசப்பற்று மிக்க குடிமகனாக நீங்கள் லீவு லெட்டர் எழுதலாம். ஆனால், அதை ஏற்க உங்களது மேனேஜர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நாளை மறுநாள் தான் அலுவலகம் வருவார் எனில் உங்கள் பாடு திண்டாட்டம் தான்.

கெத்தான லீவு

கெத்தான லீவு

லீவு லெட்டர் ஏதும் தராமல் லாஸ் ஆப் பே (Loss of pay) முறையில் லீவு போட்டு விட்டு ஜாலியாக மேட்ச் பார்க்கலாம். இது உங்கள் சௌகரியத்தை பொறுத்தது.

தடை கூறமுடியாத லீவு

தடை கூறமுடியாத லீவு

பால்வாடியில் இருந்தே நாம் பின்பற்றி வரும் லீவு லெட்டர், தங்களுக்கு இருக்கும் இரண்டு தாத்தா பாட்டியை இரண்டாயிரம் முறைக்கு மேல் சவப்பெட்டியில் தள்ளியிருப்போம். இந்த கடிததிற்கு யாராலும் தடை விதிக்க முடியாது.

ஆதாரம் கேட்க முடியாத லீவு

ஆதாரம் கேட்க முடியாத லீவு

மின்னல் வேகத்தில் ரயிலே வந்தாலும் நிறுத்த முடியாத இரண்டு தான் இந்த வாந்தி, பேதி இதை காரணம் கூறினால் யாரும் ஆதாரம் கேட்க மாட்டார்கள். காட்டினாலும் பார்க்கமாட்டார்கள்

தில்லு முள்ளு லீவு

தில்லு முள்ளு லீவு

அம்மா பாத்ரூமில் கால் தவறி விழுந்துவிட்டார் அதனால் தான் லீவு கூட சொல்ல முடியவில்லை என தில்லு முழு ஸ்டைலில் லீவு கூறலாம். ஆனால், நாளைய லீவு ஊரறிந்த விஷயம் என்பதால் யாரும் நம்பமாட்டார்கள்.

மன்னன் ஸ்டைல் லீவு

மன்னன் ஸ்டைல் லீவு

பெரியப்பா இறந்துவிட்டார் என மன்னன் ரஜினி, கவுண்டமணி பாணியில் லீவு கேட்கலாம், ஆனால் இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் அவரை தகனம் செய்த புகைப்படங்களை வாட்ஸ்-அப்பில் அனுப்பும் படி மேனேஜர் கேட்டால் என்ன செய்வீர்கள்??

குழந்தைத்தனமான லீவு

குழந்தைத்தனமான லீவு

லீவு லெட்டர் எழுத தெரியாதவர்கள் கூட எழுதும் ஒரே லீவு லெட்டர் காய்ச்சல் வந்துவிட்டது அதனால் தான் அலுவலகம்/பள்ளிக்கு வர முடியவில்லை. தயவு செய்து இந்த லீவை ஏற்றுக் கொள்ளுங்கள் என காலில் விழாத குறையாய் மன்றாடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Can Apply Leave To Watch India VS Australia World Cup SemiFinal Match

Here some ideas have been shared that will surely useful to you for applying leave to watch India VS Australia semifinal match.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter