பல்லியை போல நீளமான நாக்கினை கொண்ட அதிசய பெண்!!

Posted By:
Subscribe to Boldsky

"நாக்கால மூக்கத் தொட முடியுமா???" காலம் காலமாக கேட்கப் படும் "கலாய்" கேள்வி இது. ஆனால், நாக்கைக் கொண்டு மூக்கை என்ன, கண், காது, முழங்கை என அனைத்தையும் தொடுவேன் என்று பாம்பினை போல நாவை சுழற்றுகிறார் ஓர் அதிசய பெண்மணி.

உங்க ஆரோக்கியத்தைப் பத்தி உங்க நாக்கு என்ன வாக்கு சொல்லுதுன்னு தெரியுமா!!!

உலகில் அதிசயங்களுக்கு பஞ்சமே இல்லை. கின்னஸ் புத்தகத்தை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் இப்படி எல்லாமா அதிசயங்கள், சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்று அதிசயக்கும் படி இருக்கும். நீண்ட விரல்கள், நகங்கள், கூந்தல் இப்படி என்னென்னவோ அதிசயங்கள் இருக்கும்.

மனித உடலுக்குள் இருக்கும் தனித்தன்மையுடைய அதிசயங்கள் - அட உங்ககிட்டையும் இருக்கு பாஸ்!!!

அந்த வகையில் தான் சேர்ந்திருக்கிறார் இந்த அதிசய பெண், நமக்கெல்லாம் மூச்சிரைக்க ஓடினால் தான் நாக்கு தொங்கும். இந்த பெண்ணுக்கு சும்மா பேசினாலே நாக்கு முலம் நீளத்துக்கு தொங்குகிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிச்சிகன் பகுதியை சேர்ந்த பெண்

மிச்சிகன் பகுதியை சேர்ந்த பெண்

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியை சேர்ந்த அட்ரியன்னே லூயிஸ் (Adrianne Lewis) என்னும் பெண்ணின் நாக்கு 4 அங்குலம் நீளம் கொண்டதாக இருக்கின்றது. இது சாதாரண மனிதர்களோடு ஒப்பிடுகையில் மிகவும் நீளமான நாக்காகும்

உலக சாதனை

உலக சாதனை

அட்ரியன்னே லூயிஸின் இந்த நீளமான நாக்கு உலக சாதனையாக கருதப்படுகிறது. இவர் 18 வயது நிரம்பிய இளம் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

நாக்கால் மூக்கை தொடுகிறார்

நாக்கால் மூக்கை தொடுகிறார்

நாக்கால் மூக்கை தொடுவது மட்டுமல்லாமல், தனது கண், முழங்கை,கன்னம் என முகத்தின் பெரும்பாலான பகுதிகளை தொடுகிறார் இவர். இவர் வசிக்கும் பகுதியில் இவரை அதிசயமாகப் பார்க்கின்றனர்.

கின்னஸில் பதிவானது

கின்னஸில் பதிவானது

இப்போது, உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும், அட்ரியன்னே லூயிஸின் நாக்கு தான் உலகிலேயே நீளமான நாக்கு என்று பதிவு செய்துள்ளனர்.

 அட்ரியன்னே லூயிஸ் கூறுகையில்

அட்ரியன்னே லூயிஸ் கூறுகையில்

இதுகுறித்து அட்ரியன்னே லூயிஸ் கூறுகையில்," இது எனது மரபணு சார்ந்தது, என் தாய், பாட்டி மற்றும் தாத்தாவிற்கும் கூட மிக நீளமான நாக்கு உள்ளது. இதனால் தான் எனக்கும் இதுபோன்று நீளமான நாக்கு வளர காரணம்" என்று கூறியிருக்கிறார்.

கின்னஸில் நிராகரிக்கப்பட்டது

கின்னஸில் நிராகரிக்கப்பட்டது

இதற்கு முன்பு அட்ரியன்னே லூயிஸ், தனது 13வது வயது முதல் மூன்று முறை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சித்தாராம். ஆனால், அப்போது போதுமான நீளம் இல்லை என்பதால் கின்னஸ் அமைப்பு மறுத்துவிட்டது.

சாதாரண மனிதரோடு ஒப்பிடுகையில்

சாதாரண மனிதரோடு ஒப்பிடுகையில்

சாதாரண மனிதர்களில் நாக்கோடு ஒப்பிடுகையில், அட்ரியன்னே லூயிஸின் நாக்கு இவ்வளவு பெரிதாக இருக்கின்றது

ரப்பர் நாக்கு

ரப்பர் நாக்கு

இவரால், இவரது நாக்கை எப்படி வேண்டுமானாலும் சுழட்ட முடியுமாம்...

கார்ட் அளவு நீளம்..

கார்ட் அளவு நீளம்..

சீட்டாட்ட கார்டினை விட நீளாமாக இருக்கிறது இவரது நாக்கு...

முழங்கையை தொடுகிறார்

முழங்கையை தொடுகிறார்

தனது நாக்கால்அட்ரியன்னே லூயிஸ் அவரது முழங்கையை தொடும் புகைப்படம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Girl Has Tongue Like A Lizard

The 18-year-old who can touch her nose, chin, eye and ELBOW with record-breaking four-inch tongue
Please Wait while comments are loading...
Subscribe Newsletter