பிறந்தநாள் பார்ட்டியின் போது அழகான கருப்பு நிற சூட்டில் கலக்கிய ஐஸ்வர்யா ராய்!

By: Babu
Subscribe to Boldsky

உலக அழகியாக இருந்ததுடன், இன்னும் உலக அழகி என்றதும் அனைவரின் நினைவிற்கும் வருபவர் தான் ஐஸ்வர்யா ராய் பச்சன். இவர் சமீபத்தில் (நவம்பர் 1) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது வயதை சொன்னால் நம்பமாட்டீர்கள். ஏனெனில் தற்போது அவரைப் பார்த்தால், அவரது வயதுக்கும், அவருக்கும் சம்பந்தமே இருக்காது. அந்த அளவில் அவர் சிக்கென்று உள்ளார். இது ஐஸ்வர்யாவின் 41 ஆவது பிறந்த நாள். 41 வயதை எட்டிய ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது பிறந்த நாள் பார்ட்டியின் போது கருப்பு நிற ராபர்டோ காவாலி சூட்டில் கலக்கினார்.

உலகின் 4 ஆவது 'சூப்பர்' பேரழகியான ஐஸ்வர்யாவின் ஸ்டைல் புக்!

ஐஸ்வர்யா ராய் குழந்தை பிறந்த பின் சொல்ல முடியாத அளவில் குண்டாகிவிட்டர். பின் தனது உடல் எடையை யாரும் நம்ப முடியாத அளவில் உடனே குறைத்து, மீண்டும் இளமைத் தோற்றத்தில் வந்து அசத்தினார். அதிலும் தனது பிறந்தநாள் பார்ட்டியின் போது அவரை கருப்பு நிற உடையில் பார்த்தால் அசந்தே போய்விடுவீர்கள். அந்த அளவில் சிக்கென்று காணப்பட்டார்.

Aishwarya Rai In Roberto Cavalli For Birthday Party
Aishwarya Rai In Roberto Cavalli For Birthday Party

ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்தா ராபர்டோ காவாலி சூட் பற்றி சொல்ல வேண்டுமானால், அவர் பால் போன்ற நிறம் என்பதால், அவருக்கு இந்த கருப்பு நிற சூட் பொருத்தமாக இருந்தது.

Aishwarya Rai In Roberto Cavalli For Birthday Party

அதுமட்டுமல்லாமல் ஐஸ்வர்யா ராய் கருப்பு நிற உடைக்கு, சற்று அதிகமாக மேக்கப் போட்டு வந்திருந்தார். அதிலும் உதட்டிற்கு அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு, கன்னங்களுக்கு ஃபௌண்டேஷன் மற்றும் கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு பளிச்சென்று காணப்பட்டார்.

Aishwarya Rai In Roberto Cavalli For Birthday Party

மேலும் ஐஸ்வர்யா ராய் பச்சன் கருப்பு நிற சூட்டிற்கு ஏற்றவாறு கருப்பு நிற பூட்ஸ் அணிந்திருந்தார். இந்த பூட்ஸானது மின்னுவதுடன், ஹை ஹீல்ஸ் கொண்டிருந்தது. இதனால் அவர் நடக்கும் போது, அந்த நடையே அழகாக இருந்தது.

Aishwarya Rai In Roberto Cavalli For Birthday Party

இறுதியில் அவர் கருப்பு நிற உடைக்கு பொருத்தமாக வைர கம்மல், வைர மோதிரம் மற்றும் வைர டாலர் கொண்ட செயின் அணிந்து வந்திருந்தார். இது அவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.

என்ன நண்பர்களே! உங்களுக்கு ஐஸ்வர்யா ராய் பச்சனின் இந்த லுக் பிடித்துள்ளதா?

மேலும் படங்களுக்கு...

English summary

Aishwarya Rai In Roberto Cavalli For Birthday Party

For the occasion of her birthday party Aishwarya Rai opted for a jet black Roberto Cavalli suit.
Story first published: Monday, November 3, 2014, 12:22 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter