மின்னும் சுடிதாரில் பளிச்சென்று வந்த ஐஸ்வர்யா ராய்!

By: Babu
Subscribe to Boldsky

சமீப காலமாக தனது பழைய உடலமைப்பைப் பெற்ற பின் நடிகை ஐஸ்வர்யா ராய் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு வருகிறார். அப்படி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்திலுமே அங்கு வந்துள்ளோரின் பார்வை அவர்மீது படும்படி சிறப்பான ஆடைகளையே ஐஸ்வர்யா ராய் தேர்ந்தெடுத்து அணிந்து வருகிறார்.

அந்த வகையில் ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் திருமண வரவேற்பு ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அழகான மின்னும் அனார்கலியில் வந்திருந்தார். அதுமட்டுமின்றி, இந்த அனார்கலிக்கு ஐஸ்வர்யா மேற்கொண்டு வந்த ஸ்டைல் அசத்தலாக இருந்தது. சரி, இப்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனார்கலியில் ஐஸ்வர்யா ராய்

அனார்கலியில் ஐஸ்வர்யா ராய்

இது தான் ஐஸ்வர்யா அணிந்து வந்த பூ பிரிண்ட் போடப்பட்ட அனார்கலி உடை. இந்த அனார்கலியை வடிவமைத்தவர் டிசைனர் அபு ஜனி சந்தீப் கோஷ்லா. இந்த உடையின் ஹைலைட்டே இதன் நிறங்கள் தான்.

ஐஸ்வர்யாவின் மேக்கப்

ஐஸ்வர்யாவின் மேக்கப்

ஐஸ்வர்யா ராய் இந்த மின்னும் அனார்கலிக்கு ஏற்றவாறு அளவாக மேக்கப் போட்டு, உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல் மற்றும் ஆபரணங்கள்

ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல் மற்றும் ஆபரணங்கள்

ஐஸ்வர்யா இந்த உடைக்கு சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருப்பதுடன், கழுத்து, காது மற்றும் கைகளுக்கு கற்கள் பதிக்கப்பட்ட நெக்லேஸ், கம்மல், பிரேஸ்லெட் மற்றும் மோதிரம் அணிந்து வந்திருந்தார்.

உயரமான ஹீல்ஸ்

உயரமான ஹீல்ஸ்

ஐஸ்வர்யா அனார்கலி உடைக்கு அழகான மின்னும் மிகவும் உயரமான ஹை ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.

மணமக்களுடன் ஐஸ் மற்றும் அபிஷேக்

மணமக்களுடன் ஐஸ் மற்றும் அபிஷேக்

இது மணமக்களுடன் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஒன்றாக சேர்ந்து எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Aishwarya Rai Glitters In Abu Sandeep Khosla

Wearing a stunning creation from Abu Jani Sandeep Khosla, Aishwarya Rai was truly a star at a wedding reception.
Story first published: Monday, December 22, 2014, 15:17 [IST]
Subscribe Newsletter