For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காபி மேக்கரை கவனிங்க!

By Mayura Akilan
|

Coffee Makers
காலையில் கண் விழிக்கும் போதே காபியின் மணம் நாசியை துளைக்க வேண்டும். அப்பொழுதுதான் அன்றைய பொழுது நன்றாக இருக்கும். சுவையான காபியை தரும் காபி மேக்கர் இயந்திரத்தை சரியாக பராமரித்தால் மட்டுமே அது சுவையான காபியை தரும். இல்லையின் காபி கசக்க ஆரம்பித்து விடும்.

காபிமேக்கரை சுத்தம் செய்யும் போது தண்ணீருடன் ஒரு சொட்டு வினீகர் உபயோகபடுத்தி கழுக வேண்டும். அதற்கென உள்ள ப்ரெஷ் பயன்படுத்தி கழுக காபி மேக்கர் சுத்தமாகிவிடும். காபி மேக்கரின் பில்ட்டர், அதில் உள்ள முக்கியமான பாத்திரங்களை நன்றாக கழுவி பாதுகாக்க வேண்டும்.

தினசரி சுத்தப்படுத்துங்க

காபி மேக்கரை நீங்க தினமும் பயன்படுத்திட்டு நல்லா கழுகி விடனும் மாதத்தில் இரண்டு முறையாவது மிதமான வெந்நீர் ஊற்றி அதில் இரண்டு சொட்டு கிளீன்ங் லிக்விட் விட்டு கழுகவேண்டும். இல்லையெனில் காபியின் மேக்கரின் அடிபாகத்தில் காபியினுடைய துகள்கள் தங்கி காபியின் சுவையை மாற்றிவிடும்.

சுவை மாறுபட்டால்

காபியின் சுவையில் மாற்றம் ஏற்பட்டால் நாளடைவில்தான் தெரியவரும் காபி மேக்கரில் தங்கியுள்ள நாள்பட்ட எண்ணெய் பிசுக்கு மற்றும் பிற அசுத்தங்கள் நீக்கபடாததே இதற்குக் காரணமாகும். பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றில் 2 டீ ஸ்பூன் துணி துவைக்கும் பவுடரைப் போட்டு அதில் வெந்நீர் ஊற்றி கலக்கவும். அந்த நீரை எடுத்து காபி மேக்கரில் ஊற்றி கழுவவேண்டும். கரை அதிகம் இருக்கும் பட்சத்தில் தண்ணீரை நன்றாக ஊற்றி குலுக்கி ஸ்கரப்பர் கொண்டு நன்றாக தேய்த்து கழுவவேண்டும். பளிச் தோற்றம் கிடைக்கும். காபி மேக்கரை நன்றாக பராமறித்தால் மட்டுமே சுவையாக காபி கிடைக்கும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

English summary

Proper care and cleaning of coffee makers... | காபி மேக்கரை கவனிங்க!

It is very important that you wash your coffee maker pot and filter container thoroughly at least once a week. You should also do a light cleaning after every use. Bitter oils stick to the glass, plastic and metal creating an inferior final product.
Story first published: Wednesday, March 7, 2012, 16:49 [IST]
Desktop Bottom Promotion