For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவருக்கு பக்கவாதம் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் விஷயங்கள் எவையென்று தெரிஞ்சுக்கணுமா?

நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றாதவரா? ஜாக்கிரதை! உங்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புக்களை நீங்கள் அதிகரிக்கிறீர்கள். பக்கவாதம் ஆபத்தானது மற்றும் கொடியது.

|

நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றாதவரா? ஜாக்கிரதை! உங்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புக்களை நீங்கள் அதிகரிக்கிறீர்கள். பக்கவாதம் ஆபத்தானது மற்றும் கொடியது. இது உலகில் அதிகளவு மரணத்தை உண்டாக்கும் 5 நோய்களுள் ஒன்று மற்றும் இயலாமைக்கு வழிவகுக்கக்கூடியதும் கூட. ஆனால் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் பக்கவாதத்தின் அபாயத்தைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் சிகிச்சை அளிக்கலாம்.

World Stroke Day 2020: Lifestyle Related Factors That Increase Your Risk Of Having A Stroke

இன்று உலக பக்கவாத தினம். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 29 ஆம் தேதி உலக பக்கவாத தினம் அனுஷ்டப்படுகிறது. இந்த நாளில் பக்கவாதம் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் மற்றும் பக்கவாதத்தின் அபாயத்தை அதிகரிக்கும் ஆபத்துக் காரணிகள் எவையென்பதைக் காணபோம்.

MOST READ: ஏன் இரவு நேரத்தில் மட்டும் நெஞ்செரிச்சல் அதிகமா இருக்குன்னு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பக்கவாதம் என்றால் என்ன?

பக்கவாதம் என்றால் என்ன?

பக்கவாதம் என்பது ஒரு அவசர மருத்துவ நிலை. இந்நிலையில் மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்களில் தடை அல்லது அடைப்பு ஏற்பட்டு, மூளைச் செல்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறாமல், மூளைச் செல்கள் இறந்துவிடுகின்றன. பக்கவாதத்தால் நிரந்தரமான நரம்புச் சிதைவு ஏற்படுத்துவதுடன் இறப்பும் நிகழலாம். பக்கவாதத்தை மூளை தாக்குதல் என்றும் அழைப்பர். பக்கவாதத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அலை இஸ்கிமிக் பக்கவாதம் மற்றும் இரத்தக்கசிவு பக்கவாதம்.

இஸ்கிமிக் பக்கவாதம்

இஸ்கிமிக் பக்கவாதம்

இந்த வகை பக்கவாதத்தில், மூளைக்கு செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதால், மூளை செல்கள் இறக்கின்றன. உலகளவில் மொத்த பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 80% மக்களை பாதிக்கும் பொதுவான பக்கவாதம் இதுவாகும்.

இரத்தக்கசிவு பக்கவாதம்

இரத்தக்கசிவு பக்கவாதம்

இந்த வகை பக்கவாதத்தில், மூளையில் உள்ள இரத்த நாளத்தின் சிதைவால் இரத்த கசிவு ஏற்பட்டு, மூளையில் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் மூளையில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள செல்கள் இறக்கின்றன. இது ஒரு அரிய வகை பக்கவாதம். இந்த அரிய வகை பக்கவாதம் ஆபத்தானது மற்றும் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடியது.

பக்கவாதத்தின் அறிகுறிகள்

பக்கவாதத்தின் அறிகுறிகள்

மூளைக்கு ஏற்படக்கூடிய சேதத்தைக் குறைக்க பக்கவாதத்தைத் கண்டறிந்த உடனேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஆகவே, கீழே நீங்கள் கவனிக்க வேண்டிய சில பக்கவாதத்தின் முக்கியமான அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன:

* திடீர் பார்வை இழப்பு

* அசாதாரண பேச்சு அல்லது பேசுவதில் சிரமம்

* நடக்கும் போது தடுமாற்றம்

* கையைக் கூட அசைக்க முடியாத அளவில் திடீர் ஆற்றல் இழப்பு

* திடீரென்று காரணமில்லாத நாள்பட்ட தலைவலி

பக்கவாத அபாயத்தை அதிகரிக்கும் வாழ்க்கை முறை தொடர்பான காரணிகள்

பக்கவாத அபாயத்தை அதிகரிக்கும் வாழ்க்கை முறை தொடர்பான காரணிகள்

ஆபத்துக் காரணிகள் என்பவை ஒரு நோய் அல்லது நிலையை உருவாக்குவதற்கான நடத்தைகள் அல்லது இயல்புகளைக் கொண்டவைகளாகும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆபத்துக் காரணிகளைக் கொண்டிருப்பதால் நிச்சயம் அந்நோய் வரும் என்ற அர்த்தம் அல்ல. ஆனால் அந்நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது என்று அர்த்தம். அந்த வகையில் பக்கவாதம் ஒரு கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். எனவே தான் பக்கவாதம் வருவதைத் தடுக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம். கீழே அப்படி பக்கவாதம் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் வாழ்க்கை முறை தொடர்பான காரணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பது

ஒருவருக்கு விரைவிலேயே மரணம் ஏற்படுவதற்கு புகைப்பிடிப்பதும் மிகவும் முக்கியமான காரணமாகும். இது இரத்தத்தை தடிமனாக்குகிறது மற்றும் இரத்த குழாய்களின் சுவர்களுக்குள் ப்ளேக்குகளை உருவாக்குகிறது. இதனால் அடைப்பை ஏற்பட்டு இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, பக்கவாதத்தை உண்டாக்குகிறது. எனவே பக்கவாதத்தின் அபாயத்தைக் குறைக்க புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், உடனே அதைக் கைவிட வேண்டியது மிகவும் முக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களில் ஒன்றாகும்.

உடல் பருமன்

உடல் பருமன்

அதிக உடல் எடையுடன் இருப்பது உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை எளிதில் வரவழைக்கும். இவை இரண்டுமே பக்கவாதத்திற்கான முக்கியமான இரண்டு காரணிகளாகும். பொதுவாக ஒருவரது உடல் எடை அதிகரிக்கும் போது, உடலின் வளர்சிதை மாற்றம் மாறுகிறது. இது உயர் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கிறது. காலப்போக்கில், இது மூளை மற்றும் இதயத்தில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. இதனால் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே உடல் எடையை சரியான அளவில் பராமரிக்க அன்றாடம் உடற்பயிற்சி செய்வது மற்றும் சரியான உணவை உண்பது போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

முன்பே கூறியது போல், சர்க்கரை நோயானது பக்கவாதத்தின் அபாயத்தை அதிகரிக்கும். ஏனெனில் சர்க்கரை நோய் இரத்த நாளங்களில் தீங்கு விளைவிக்கும். பொதுவாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இரத்த க்ளுக்கோஸ் அளவு அதிகமாக இருக்கும். இது இரத்த நாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிவுகளை உருவாக்க வழிவகுத்து, இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்தி, பக்கவாதத்தை ஏற்படுத்தும் அழுத்தத்தை உருவாக்கும்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தமும் பக்கவாதத்தின் முதன்மையான முக்கிய காரணிகளுள் ஒன்று. பக்கவாத அபாயத்தைத் தடுக்க, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். ஆரோக்கியமான ஒருவருக்கு இரத்த அழுத்தமானது 140/90-க்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த அளவு இரத்த அழுத்தத்தைப் பராமரிக்க ஒருசில கெட்ட பழக்கங்களைக் கைவிட்டால் போதும். அதில் உணவில் உப்பை குறைப்பது, கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது, அன்றாடம் உடற்பயிற்சி செய்வது போன்றவை அடங்கும்.

மது அருந்துவது

மது அருந்துவது

மது அருந்துவது பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. அவற்றில் ஒன்று தான் பக்கவாதம். மிதமான அளவில் மது அருந்துவது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். எனவே அளவாக மது அருந்துங்கள். முடிந்தால் மது அருந்துவதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Stroke Day 2020: Lifestyle Related Factors That Increase Your Risk Of Having A Stroke

World Stroke Day 2020: Here are five risk factors for stroke that can be modified, treated, or medically managed. Read below to know more.
Story first published: Thursday, October 29, 2020, 16:14 [IST]
Desktop Bottom Promotion