For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புற்றுநோயாளிகள் ஏன் சிகிச்சையை தாமதிக்கக்கூடாது தெரியுமா?

தற்போதைய பெருந்தொற்று பரவக்கூடிய காலகட்டத்தில் புற்றுநோயாளிகள் மற்றும் புற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் பதட்டம் அடைந்துள்ளனர். புற்றுநோயாளிகள் தங்கள் மருந்துகளை தவறாமல் எடுக்க வேண்டும்.

|

புற்றுநோய் என்பது வளர்ச்சி அடையக்கூடிய ஒரு நோயாகும். இதற்கான சிகிச்சையை தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும் இந்த நோய் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு வளரக்கூடிய அபாயம் உள்ளது. இதன் விளைவுகள் இன்னும் மோசமாக மாறக்கூடியதாகும்.

Why Cancer Patients Should Not Delay Treatment

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பிரதமர் அவர்கள் ஊரடங்கு விதிகளை உருவாக்கி தற்போது பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தற்போதைய பெருந்தொற்று பரவக்கூடிய காலகட்டத்தில் புற்றுநோயாளிகள் மற்றும் புற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் பெரும் பதட்டம் அடைந்துள்ளனர்.

இந்த ஊரடங்கு காலகட்டத்திலும் புற்றுநோயாளிகள் தங்கள் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். மேலும் இந்த காலகட்டத்தில் அவர்களின் மருத்துவ நடைமுறைகள் எவ்வாறு இருக்கலாம் என்பது குறித்த குழப்பம் அவர்களுக்கு இருப்பது இயல்பான விஷயமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொரோனாவும் புற்றுநோயும்

கொரோனாவும் புற்றுநோயும்

ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் எப்போது இந்த நிலை முடிவிற்கு வரும் என்று கண்டறிய முடியாத நிலை உள்ளது. இன்னும் சில நாட்கள் நாம் இந்த கிருமியின் தாக்கத்தில் இருக்க வேண்டும் என்றே இன்றைய நிலை நமக்கு உணர்த்துகிறது.

குறைவான நோயெதிர்ப்பு உள்ளவர்களை கொரோனா தாக்கக்கூடும் என்பதால் புற்றுநோயாளிகளுக்கு இந்த பாதிப்பு உண்டாகக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது என்று நம்பப்படுகிறது. அதே நேரத்தில் புற்றுநோய் என்பது ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடையக்கூடிய நோய் என்பதால் அதற்கான சிகிச்சையை புறக்கணிப்பதில் அல்லது தாமதப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதனால் ஊரடங்கு காலக்கட்டத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான நடைமுறையை கைவிட வேண்டாம்.

புற்றுநோயாளிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:

புற்றுநோயாளிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:

* புற்றுநோய் மருத்துவருடன் காணொளி காட்சி வழியாக புற்றுநோயாளிகள் ஒரு கலந்தாலோசனை மேற்கொள்ளலாம். தற்போதைய வழிகாட்டுதல்கள் அடிப்படையில் மருத்துவர் உங்களுக்கான சிகிச்சை நடைமுறைகள் மற்றும் நன்மை தீமைகள் பற்றிய பகுப்பாய்வு செய்து உங்களுக்கு சில வழிகாட்டுதலைப் பரிந்துரைக்கலாம்.

* சிகிச்சை முறைகளை மிதப்படுத்துவதால் உண்டாகும் தொற்று பாதிப்புகளை குறைக்க இந்த வழிகாட்டுதல்கள் உங்களுக்கு உதவலாம்.

* சுகாதார ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் வெளியில் செல்வதற்கு இந்த ஊரடங்கில் எந்த ஒரு தடையும் இல்லை.

* புற்றுநோய் மையங்கள் தங்கள் முன் நிறுத்தப்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ளும் அளவிற்கு உசிதமாக உள்ளன மற்றும் நோயாளிகளுக்கும் அவர்களுடன் வரும் நபர்களுக்கும் எந்த ஒரு தொற்றும் ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த மையங்கள் சீரான இடைவெளியில் கிருமிநீக்க நடவடிக்கைகளை கடுமையான முறையில் பின்பற்றி வருகின்றன. நோயாளிகளை பார்வையாளர்கள் காண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஊழியர்கள் மாஸ்க் மற்றும் PPE அணிவதை கட்டாயமாக்கி வருகின்றனர்.

* சிகிச்சை தொடங்குவதற்கு முன் மற்றும் சிகிச்சையின் காலகட்டத்தில் மற்றும் தேவை ஏற்படும்போது அதிகரிக்கப்பட்ட ஸ்க்ரீனிங் நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.

புகையிலை உட்கொள்ளல் காரணமாக வாய் சுகாதாரத்தில் உண்டாகும் தாக்கம் பற்றி இப்போது நாம் காணலாம்.

ஈறு தொற்று

ஈறு தொற்று

புகை இல்லாத புகையிலையை அதிகம் பயன்படுத்தும் போது, அது உங்கள் ஈறுகளில் எரிச்சல் உண்டாக்கி, ஈறு தொடர்பான பல மோசமான நோய்களை உருவாக்கலாம்.

பல் அழுகும் நிலை

பல் அழுகும் நிலை

புகை இல்லாத புகையிலையின் சுவையை அதிகரிக்க சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இதனை அதிகம் உட்கொள்ளும் போது, அதன் விளைவாக வாயில் உள்ள பற்களின் அழுகும் நிலை அதிகரிக்கிறது.

ஓரல் சப்ம்யூக்கஸ் ஃபைப்ரோஸிஸ் (Oral Submucous Fibrosis)

ஓரல் சப்ம்யூக்கஸ் ஃபைப்ரோஸிஸ் (Oral Submucous Fibrosis)

வாய்வழி குழியின் எந்தப் பகுதியையும் பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோய் வாய்வழி சளிச்சுரப்பியின் விறைப்பிற்கு வழிவகுக்கிறது. இதனால் வாய் குறைவாக திறக்கப்பட்டு சாப்பிட முடியாத நிலை உண்டாகிறது.

முடிவுரை

முடிவுரை

கொரோனா கிருமியை எதிர்த்து நாடே போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் புற்றுநோயாளிகள் தகுந்த பாதுகாப்பு பெறுவது உறுதி செய்து கொள்வது அவசியம். அவர்களுக்கான சிகிச்சை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் நடைபெறுவதால் அவர்கள் அந்நோயில் இருந்து விரைந்து விடுபட முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Cancer Patients Should Not Delay Treatment

Do you know why cancer patients should not delay treatment? Read on...
Desktop Bottom Promotion