For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அளவிற்கு மேல் உப்பு சாப்பிட்டால் இதயக்கோளாறு வருமாம்... உலக சுகாதார அமைப்பின் அதிர்ச்சி தகவல்!

|

" உப்பில்லா பண்டம் குப்பையிலே " என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதன்படி உப்பில்லாத உணவில் சுவை என்பது சிறிதும் இருக்காது. உப்பு உணவிற்கு சுவையை கொடுப்பது எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு உப்பு அதிகமாகும்போது உணவின் சுவை கெடுவதும் உண்மைதான். அதிகப்படியான உப்பு உணவிற்கு மட்டுமல்ல நம் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல.

நம் உடலில் அதிகளவு சோடியம் இருக்கும்போது நம் உடலில் என்னென்ன நடக்கும் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய ஆய்வில், இது ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் மக்களைக் கொல்கிறது என்று கூறுகிறது. இப்போது, இந்த எண்ணிக்கையைக் குறைக்க, உணவுச் சூழலை மேம்படுத்தவும், உயிர்களைக் காப்பாற்றவும், WHO 60 க்கும் மேற்பட்ட உணவு வகைகளில் சோடியம் அளவிற்கு புதிய வரையறைகளை அமைத்துள்ளது. என்னென்னெ உணவுகளில், எவ்வளவு சோடியம் அளவை நிர்ணயித்துள்ளது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோடியத்தின் நன்மைகள்

சோடியத்தின் நன்மைகள்

சோடியம் நம் அன்றாட உணவில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஏனெனில் இது உடலின் செயல்பாட்டிற்கு உதவுகிறது மற்றும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது, தைராய்டு சரியாக செயல்பட உதவுகிறது, குறைந்த இரத்த அழுத்தத்தைத் தடுக்கிறது மற்றும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸின் அறிகுறிகளையும் மேம்படுத்துகிறது.

அதிகளவு சோடியத்தின் பக்க விளைவுகள்

அதிகளவு சோடியத்தின் பக்க விளைவுகள்

சில நேரங்களில் உப்பு நிறைந்த உணவை உட்கொண்ட பிறகு நீங்கள் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டதாக உணரலாம். உங்கள் உடலில் குறிப்பிட்ட சோடியம்-நீர் விகிதத்தை பராமரிக்க உடல் முயற்சிப்பதால் இது நிகழ்கிறது. நாம் கூடுதல் உப்பு சாப்பிடும்போது, சிறுநீரகங்கள் கூடுதல் தண்ணீரைப் உறிஞ்சிக் கொண்டு, தண்ணீரைத் தக்கவைக்க வழிவகுக்கும். இது வீக்கம் ஏற்படலாம், குறிப்பாக கைகளிலும் கால்களிலும் உங்களுக்கு வீக்கம் ஏற்படலாம்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது தற்காலிகமாக இரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். இருப்பினும், அனைவரும் தங்கள் இரத்த அழுத்த அளவை அதிகரிப்பதை அனுபவிப்பதில்லை, ஏனெனில் இது மரபியல் மற்றும் ஹார்மோன்கள் போன்ற காரணிகளாலும் பாதிக்கப்படுகிறது. வயதானவர்கள் உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு இரத்த அழுத்தம் அதிகரிப்பதை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம்.

MOST READ: மீண்டும் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் புதிய அறிகுறிகள்... இவை எந்த இடத்தில் தோன்றுகிறது தெரியுமா?

இதய பிரச்சினை

இதய பிரச்சினை

நீங்கள் பொதுவாக உங்கள் உணவில் நீண்ட காலத்திற்கு அதிக உப்பு சேர்த்தால் அது உங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். இரத்த அளவின் அதிகரிப்பு இரத்த நாளங்களில் அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும், அதாவது உங்கள் இதயம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதனால் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம்.

புதிய அளவுகோலுக்குப் பின்னால் உள்ள காரணம்

புதிய அளவுகோலுக்குப் பின்னால் உள்ள காரணம்

புதிய WHO வழிகாட்டுதல்களின்படி, 60 க்கும் மேற்பட்ட உணவு வகைகளில் சோடியம் அளவிற்கான அளவுகோல்கள் நாடுகளுக்கு உப்பு உட்கொள்ளலைக் குறைக்கவும் மக்களின் உயிரைக் காப்பாற்றவும் உதவும். பதப்படுத்தப்பட்ட உணவுகளின் நுகர்வு அதிகமாக இருக்கும் இடங்களில் சோடியம் உட்கொள்வதைக் குறைப்பதே இதன் நோக்கம். புதிய அளவுகோல் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் சோடியத்தின் முக்கிய ஆதாரமாக மாறுவதைத் தடுக்கும். 2025 ஆம் ஆண்டில் உலகளாவிய உப்பு / சோடியம் உட்கொள்ளலில் சோடியம் உள்ளடக்கத்தை 30 சதவிகிதம் குறைக்க தொழில்துறையை ஊக்குவிப்பதே WHO இன் நீண்டகால திட்டமாகும்.

உணவு வகைகள் மற்றும் சோடியத்தின் அளவுகள்

உணவு வகைகள் மற்றும் சோடியத்தின் அளவுகள்

மே 5 அன்று வெளியிடப்பட்ட வெவ்வேறு உணவு வகைகளுக்கான WHO குளோபல் சோடியம் வரையறைகள், பதப்படுத்தப்பட்ட ரொட்டி, சுவையான தின்பண்டங்கள், இறைச்சி பொருட்கள் மற்றும் சீஸ் போன்ற பல்வேறு தொகுக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் உள்ளடக்கத்தைக் குறைப்பது பற்றி பேசுகிறது. புதிய வழிகாட்டுதலின் படி, உருளைக்கிழங்கு சிப்ஸ்களில் 100 கிராமுக்கு அதிகபட்சம் 500 மி.கி சோடியம் இருக்க வேண்டும், அதே நேரத்தில் பை மற்றும் பேஸ்ட்ரிகளில் 120 மி.கி வரை சோடியம் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் 340 மி.கி வரை இருக்க வேண்டும்.

MOST READ: ஹாலிவுட் படங்களை மிஞ்சிய தலைசுற்ற வைக்கும் உலகில் நடந்த வினோதமான பேரழிவுகள்... ஷாக் ஆகாம படிங்க...!

WHO ஆய்வு?

WHO ஆய்வு?

WHO ஆல் நடத்தப்பட்ட ஆய்வில், மக்கள் பரிந்துரைக்கப்பட்ட 5 மி.கி தினசரி உப்பு உட்கொள்ளலை இருமடங்காக உட்கொள்கிறார்கள், இது இதய நோய்கள் மற்றும் இதய செயலிழப்பு ஆகியவற்றின் அபாயத்திற்கு அவர்களை தள்ளுகிறது, இது ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்களைக் கொல்கிறது. அதிகப்படியான உப்பு சோடியம் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது என்பதையும் ஆய்வு சித்தரிக்கிறது. ஒரு நாளைக்கு 5 மி.கி உப்பு மட்டும் எடுத்துக்கொள்பவர்கள் இந்த ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

WHO sets new global benchmarks for salt intake

Read to know why WHO sets new global benchmarks for salt intake.