For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆப்பிளோட முழு சத்தும் கிடைக்கணுமா? அப்ப அத இந்த டைம்-ல சாப்பிடுங்க...

ஆப்பிளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது அதில் உள்ள முழு சத்துக்களையும் பெற்று அதிக நன்மைகளை பெற உதவும் என ஆயுர்வேதம் கூறுகிறது.

|

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமிருக்காது என்ற கூற்றை நாம் அனைவரும் நன்கு அறிவோம். பழங்களில் ஆப்பிள் மிகவும் ஆரோக்கியமான பழமாக கருதப்படுகிறது. ஏனெனல் இது அனைத்து வகையான ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்தும் விடுவிக்க தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

What Is The Right Time To Eat An Apple In Tamil

நீங்கள் வயிறு தொடர்பான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாலோ, உங்கள் உணவில் ஆப்பிளை அதிகம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் அதற்காக ஆப்பிளை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடக்கூடாது. ஆப்பிளை ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது அதில் உள்ள முழு சத்துக்களையும் பெற்று அதிக நன்மைகளை பெற உதவும் என ஆயுர்வேதம் கூறுகிறது.

MOST READ: பிரதமர் நரேந்திர மோடி 70 வயதிலும் ஃபிட்டாக இருப்பதன் ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா? இத படிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிளை சாப்பிடுவதற்கான சரியான நேரம்

ஆப்பிளை சாப்பிடுவதற்கான சரியான நேரம்

ஆயுர்வேதத்தின் படி, ஆப்பிளை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஒருவேளை அவ்வாறு சாப்பிட்டால், அது மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றை உண்டாக்கும். பழங்கால இந்திய மருத்துவ முறை ஆப்பிளை காலை உணவுக்கு ஒரு மணிநேரத்திற்கு பிறகு அல்லது மதிய உணவுக்கு ஒரு மணிநேரத்திற்கு பிறகு சாப்பிட பரிந்துரைக்கிறது. ஆப்பிள் நார்ச்சத்தை அதிகம் கொண்டது மற்றும் காலை வேளையில் வயிற்றால் எளிதில் செரிமானமடையச் செய்வதோடு, ஊட்டச்சத்துக்களை முழுமையாக உறிஞ்ச உதவுகிறது.

ஆப்பிளை சாப்பிடக்கூடாத நேரம்

ஆப்பிளை சாப்பிடக்கூடாத நேரம்

மாலை வேளையில் செரிமான அமிலங்களின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். இதனால் செரிமான செயல்முறை தாமதமாக நடைபெறும். ஆகவே மாலை 6 மணிக்கு மேல் ஆப்பிளை சாப்பிட்டால், அது விரைவில் செரிமானமாகாமல் நீண்ட நேரம் வயிற்றில் இருந்து, அஜீரண கோளாறு மற்றும் தூக்கமின்மை பிரச்சனைக்கு வழிவகுக்கும். எனவே எக்காரணம் கொண்டும் மாலை வேளையில் ஆப்பிளை சாப்பிடாதீர்கள்.

ஆப்பிளில் பெக்டின் உள்ளது

ஆப்பிளில் பெக்டின் உள்ளது

ஆப்பிளை ஏன் காலை வேளையில் சாப்பிடக்கூடது என்பதற்கான மற்றொரு முக்கிய காரணம், அதில் பெக்டின் உள்ளது. இந்த பெக்டின் லாக்டிக் அமில உருவாக்கத்தைத் தடுக்க உதவுகிறது மற்றும் குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. குடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு அதிகமாக இருந்தால், செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படும் மற்றும் நச்சுக்கள் எளிதில் உடலில் இருந்து நீங்கி, வயிறு தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உவுகிறது.

ஆப்பிளை சாப்பிடுவதற்கான சரியான வழி

ஆப்பிளை சாப்பிடுவதற்கான சரியான வழி

உங்கள் உணவில் ஆப்பிளை பல வழிகளில் சேர்க்கலாம். அதில் ஆப்பிளை வெட்டி, ஓட்ஸின் மேல் சேர்த்து சாப்பிடலாம் அல்லது ஆப்பிள் பை தயாரிக்கலாம் அல்லது ஆப்பிள் ஜூஸ் கூட தயாரித்துக் குடிக்கலாம். ஆனால் ஆப்பிளில் இருந்து அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சுவதற்கான சரியான வழி, அதை அப்படியே சாப்பிடுவது தான்.

ஆப்பிளை தோலுடன் சாப்பிடலாமா?

ஆப்பிளை தோலுடன் சாப்பிடலாமா?

பலரும் ஆப்பிளை தோல் நீக்கிவிட்டு சாப்பிடுகிறார்கள். ஆனால் ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொண்டால், அதன் தோலில் தான் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே ஒருபோதும் ஆப்பிளின் தோலை நீக்கி சாப்பிடாதீர்கள். அதுமட்டுமின்றி, எப்போதும் டப்பாவில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ஆப்பிள் ஜூஸை வாங்கி குடிக்காதீர்கள். அவற்றில் சர்க்கரை மட்டும் தான் இருக்குமே தவிர, வயிற்றிற்கு நல்லது என்று கருதப்படும் நார்ச்சத்து இருக்காது. எனவே இந்த மாதிரியான ஆப்பிள் ஜூஸை தப்பித்தவறியும் வாங்கி குடிக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is The Right Time To Eat An Apple In Tamil

Did you know what is the right time to eat an apple in tamil? Read on...
Desktop Bottom Promotion