Just In
- 52 min ago
ஒரு நாளில் 1000 கலோாிகளை எாிப்பது எப்படி தெரியுமா?
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (27.02.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது…
- 17 hrs ago
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- 18 hrs ago
ஒவ்வொரு நாளும் நீங்க இத்தனை அடிகள் நடந்தீங்கனா... உங்க உடல் எடை சீக்கிரமா குறையுமாம்...!
Don't Miss
- News
காலையில் திருமணம்.. மாலையில் மணமகன் மாரடைப்பால் பலி.. ராமநாதபுரத்தில் சோகம்
- Sports
இதுதான் பிளான்.. 8 மணி நேரம் வீடியோ பார்த்த அஸ்வின்.. தமிழக ஜாம்பவானின் அசர வைக்கும் திட்டம்!
- Movies
அப்பாவுடன் க்யூட் செல்ஃபி.. வைரலாகும் கமல், ஸ்ருதிஹாசன் புகைப்படங்கள்.. அந்த விஷயத்தை சொல்லியாச்சா?
- Education
TN TRB 2021: தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் சிறப்பு ஆசிரியர்கள் வேலை!!
- Automobiles
ஹோண்டா சிட்டிக்கு போட்டியாக வரும் சிட்ரோன் செடான் கார்... அறிமுகம் எப்போது?
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
இரவு நேரத்தில் சீக்கிரம் உணவை உண்பது செரிமான மண்டலத்தால் உணவை எளிதில் ஜீரணிக்கவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் மற்றும் பிற நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். ஆனால், இரவு தாமதமாக உணவை உட்கொள்வது உடல் பருமனாவதற்கும், இரத்த சர்க்கரை அளவை உயர்த்தவும் வழிவகுக்கும் என எண்டோகிரைன் சொசைட்டியின் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி & மெட்டபாலிசத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, நிபுணர்கள் இரவு 7 மணிக்கு முன் இரவு உணவை உண்ண பரிந்துரைக்கின்றனர். அதோடு இரவு உணவானது எளிதில் ஜீரணமாகும் வகையில் இருக்க வேண்டும் மற்றும் மிதமான அளவிலேயே உணவை உட்கொள்ளவும் வேண்டும். ஏனெனில் இரவு நேரத்தில் மெட்டபாலிசம் குறைவாக இருப்பதால், வயிறு நிறைய உணவை உட்கொள்ளும் போது ஜீரணமாகாமல் போகலாம். மேலும் கூடுதல் கலோரிகளும் கொழுப்பாக தேங்க ஆரம்பிக்கும்.
தற்போது நிறைய பேர் இரவு நேரத்தில் பிரியாணி போன்ற ஹெவியான உணவுகளை சாப்பிடுகின்றனர். இப்படி ஹெவியான உணவுகளை இரவு நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள் என்னவென்பதை இப்போது காண்போம்.

காலையில் பசிக்காது
இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக வயிறு முட்ட சாப்பிட்டால் மற்றும் மிகவும் தாமதமாக இரவு உணவை சாப்பிட்டால், அது மறுநாள் காலையில் பசியின்மைக்கு வழிவகுக்கும். இதனால் காலை உணவைத் தவிர்க்க நேரிட்டு, உடல் ஆரோக்கியம் பாழாகும்.

இரைப்பை குடல் நோய்
தொடர்ச்சியாக இரவு நேரத்தில் வயிறு நிறைய சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலம் சீர்குலைந்து போவதோடு, நாளடைவில் இரைப்பை குடல் நோய், இரைப்பை அழற்சி, இரைப்பை புண், குடல் அழற்சி, மலச்சிக்கல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிகரிக்கும் இதயத் துடிப்பு
எப்போது ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறாரோ, அவர்களது இதயமானது வழக்கத்திற்கு மாறாக மிகவும் கடினமாக செயல்படும். இதன் விளைவாக இதயத்துடிப்பும் அதிகரிக்கும். பொதுவாக சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதிலும் மாலை 6 மணிக்கு மேல் கலோரி அதிகமான உணவுகளை உண்ணும் போது, அது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுப்பதோடு, இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து டைப்-2 சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் 2019 ஆண்டு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது.

மோசமான தூக்கம்
இரவு வயிறு நிறைய சாப்பிடுவது ஒருவரது ஆழமான தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். இரவு நல்ல தூக்கத்தைப் பெறாமல் இருந்தால், மறுநாள் உங்களுக்கு மிகவும் மோசமான நாளாக இருக்கும். இதனால் கூட பலர் அதிக மன அழுத்தத்தை உணர்வதோடு, காலையிலேயே சோர்வையும் உணர நேரிடுகிறது.

கடுமையான கணைய அழற்சி
இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக உணவை உண்பது, பித்தக்கற்கள் உள்ளவர்களுக்கு கடுமையான கணைய அழற்சி அபாயத்தை அதிகரிக்கும். சில சமயங்களில், கடுமையான கணைய அழற்சி திடீரென்று தீவிரமாகி, அது மரணத்திற்கு கூட வழிவகுக்கும். எனவே இரவு நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.