For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த விதையை தினமும் சாப்பிட்டா உடம்புல இருக்குற எவ்வளவு பிரச்சனை சரியாகும் தெரியுமா?

|

நம்மில் பலரும் சூப்பர் மார்கெட்டுகளில் ப்ரௌன் நிறத்தில் மின்னும் படியான சிறிய விதைகளைப் பார்த்திருப்போம். அதன் பெயர் தான் ஆளி விதை. இந்த சிறிய விதை ஏராளமான ஊட்டச்சத்துக்கள் தன்னுள் கொண்டுள்ளது. இந்த விதைகளின் சுவை ஆரம்பத்தில் பிடிக்காமல் போகலாம். ஆனால் சாப்பிட ஆரம்பித்துவிட்டால், இதன் சுவை பிடித்துவிடும். ஆளி விதையில் உள்ள சத்துக்களைப் பெற அவற்றை அதிகம் சாப்பிட வேண்டும் என்பதில்லை. சிறிதளவு சாப்பிட்டாலே போதுமானது.

அதிலும் ஒரு டேபிள் ஸ்பூன் ஆளி விதையில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடும் என்று நிபுணர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும் இந்த விதைகளை சரியான வழியில் சாப்பிட வேண்டும்.

MOST READ: நுரையீரல் பிரச்சனையில் உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

ஆளி விதைகள் ப்ரௌன் நிறத்தில் சற்று கடினமான தோலுடன் இருக்கும். இந்த விதைகளை நன்கு மென்று விழுங்காவிட்டால், அது நமது செரிமான மண்டலத்தால் ஜீரணிப்பதற்கு கடினமாக இருக்கும் மற்றும் அதன் நன்மைகளையும் பெற முடியாமல் போகும். எனவே ஆளி விதைகளை சாப்பிட நினைத்தால், அதை நீரில் ஊற வைத்து சாப்பிடலாம் அல்லது அவற்றை பொடி செய்து சாப்பிடலாம்.

MOST READ: உங்களுக்கு 'ஹை பிபி' பிரச்சனை இருக்கா? அப்ப அது எகிறாம இருக்க இந்த ஜூஸை குடிங்க...

இப்போது தினமும் ஆளி விதையை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அற்புதங்கள் என்னென்ன என்பதை காண்போம். அதைப் படித்து இனிமேல் இந்த விதைகளை வாங்கி சாப்பிட மறவாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புற்றுநோயின் அபாயம் குறையும்

புற்றுநோயின் அபாயம் குறையும்

ஆளி விதை மார்ப புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பை அளிக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 6,000-த்திற்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கனேடிய ஆய்வின் படி, ஆளி விதைகளை தவறாமல் சாப்பிட்டவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

ஆளி விதையில் மற்ற தாவரங்களை விட 800 மடங்கு அதிகமான லிக்னான்கள் உள்ளன. மேலும் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஈஸ்ட்ரோஜென் பண்புகள் உள்ளதால், புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. கூடுதலாக, ஆளி விதைகளில் காணப்படும் ஆல்பா-லினோலெனிக் அமிலம் என்னும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுப்பதாக கருதப்படுகின்றன.

இரத்த அழுத்தம் குறையும்

இரத்த அழுத்தம் குறையும்

ஆளி விதை இரத்த அழுத்தத்தைக் குறைக்க அறியப்படுகிறது. கனேடியன் ஆய்வு ஒன்றில், தினமும் 30 கிராம் ஆளி விதையை 6 மாதங்களுக்கு சாப்பிட்டவர்களது இரத்த அழுத்தம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதோடு ஏற்கனவே இரத்த அழுத்த மருந்துகளை எடுத்து வருபவர்களுக்கும் இது உதவியது என்பதும் கண்டறியப்பட்டது.

மாரடைப்பின் அபாயம் குறையும்

மாரடைப்பின் அபாயம் குறையும்

தற்போது மாரடைப்பினால் ஏராளமானோர் இறக்கின்றனர். பல்வேறு ஆய்வுகளில் ஆளி விதைகளை தொடர்ச்சியாக சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான அபாயம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தில் 3,638 பேரைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குறைந்த ஆல்பா-லினோலெனிக் அமிலத்தை (ஏ.எல்.ஏ) உட்கொண்டவர்களைக் காட்டிலும் அதிக ஏ.எல்.ஏ உட்கொண்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதோடு 250,000-க்கும் அதிகமானவர்களை உள்ளடக்கிய 27 ஆய்வுகளின் விரிவான பகுப்பாய்வில், ஆல்பா-லினோலெனிக் அமிலம் உட்கொள்வது இதய நோயின் அபாயத்தை சுமார் 14% குறைக்கிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆல்பா-லினோலெனிக் அமிலம் ஆளி விதையில் உள்ள ஒரு அத்தியாவசிய கொழுப்பு அமிலமாகும். இது உடலால் உற்பத்தை செய்ய முடியாது என்பதால் உணவின் மூலம் மட்டுமே பெற முடியும். இந்த கொழுப்பு அமிலம் இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் படிவதைத் தடுத்து, இதய நோயின் அபாயத்தைத் தடுக்கிறது.

குடலியக்கம் மேம்படும்

குடலியக்கம் மேம்படும்

ஒரு டேபிள் ஸ்பூன் ஆளி விதையில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்துக்களில் 8-12% ஆகும். மேலும் ஆளி விதையில் கரையக்கூடிய மற்றும் கரையாத இரண்டு நார்ச்சத்துக்களும் உள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்து செரிமான விகிதத்தைக் குறைத்து, அதன் மூலும் இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதே வேளையில் கரையாத நார்ச்சத்து அதிக நீரை மலத்துடன் பிணைக்க அனுமதித்து, மலம் எளிதில் வெளியேறச் செய்கிறது.

கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்

கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்

1990 மற்றும் 2008 க்கு இடையில் வெளியிடப்பட்ட 28 பேரைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆளி விதையை சாப்பிடுவது இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைத்து, பெண்கள் மற்றும் அதிக கொழுப்புள்ளவர்களுக்கு நன்மைகளைத் தருகிறது. மேலும் பல ஆய்வுகளில் 3 மாதங்கள் தினமும் 3 டேபிள் ஸ்பூன் ஆளி விதை பொடியை சாப்பிட்டவர்களின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் 20% குறைந்தும், மொத்த கொலஸ்ட்ரால் அளவில் 17% குறைந்தும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஆளிவிதைகளில் உள்ள அதிக நார்ச்சத்தினால் தான் இது ஏற்படுகிறது. நார்ச்சத்து பித்த உப்புக்களுடன் பிணைந்து, உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இதன் விளைவாக, இரத்தத்தில் இருந்து கொழுப்புக்கள் பிரித்தெரிடுக்கப்பட்டு கல்லீரலுக்குள் இழுத்து பித்த உப்பாக மாற்றி, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.

ஹாட் ஃப்ளாஷ் குறையும்

ஹாட் ஃப்ளாஷ் குறையும்

பெண்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை ஹாட் ஃப்ளாஷ். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட தினமும் 2 டேபிள் ஸ்பூன் ஆளி விதையை சாப்பிடுவது நல்லது. மேலும் ஆய்வு ஒன்றிலும் இது நிரூபணமாகியுள்ளது.

சீரான இரத்த சர்க்கரை அளவு

சீரான இரத்த சர்க்கரை அளவு

உலகெங்கிலும் டைப்-2 சர்க்கரை நோயால் தன் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்சனையை எதிர்த்துப் போராட ஆளி விதை பெரிதும் உதவியாக இருக்கும். இதுக்குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒரு மாதம் பாதிக்கப்பட்ட நோயாளியின் உணவில் தினமும் 20 கிராம் ஆளி விதை பொடி சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஒரு மாதம் கழித்து, அந்த நோயாளியின் இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்கும் போது, 8-20% இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பது தெரிய வந்தது. இதற்கு காரணம் அதில் உள்ள கரையாத நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிடுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு ஆளி விதை ஒரு சிறப்பான உணவுப் பொருள்.

உடல் எடை குறையும்

உடல் எடை குறையும்

ஆளி விதை பசியைத் தடுக்கிறது. ஒருவரது உடல் பருமனுக்கு காரணமே நாள் முழுவதும் தின்பண்டங்களை நொறுக்குவது தான். பசியை ஆளி விதைக் குறைப்பதால், இது ஒருவரது உடல் எடையைக் குறைக்க பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தால், தினமும் 25 கிராம் ஆளி விதை பொடியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Happens To Your Body If You Eat Flaxseed Everyday

Do you know what happens to your body if you eat flaxseed everyday? Read on to know more...