Just In
- 15 hrs ago
இன்றைய ராசிப்பலன் (26.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- 1 day ago
மைதா போண்டா
- 1 day ago
உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 1 day ago
திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான பாவங்கள் இவைதான்... இனியாவது திருந்துங்க...!
Don't Miss
- Finance
பட்ஜெட்டில் ஆவது நல்ல வழி பிறக்குமா.. ஆட்டோமொபைல் துறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
- News
டெல்லி போராட்டம்- 18 போலீசார் படுகாயம்- ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
- Movies
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிறுநீரக நோயின் அபாயகரமான சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!
சிறுநீரக நோய் அமைதியாக இருந்து ஆளைக் கொல்லக்கூடியது. நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் இந்நோயை கடுமையான மற்றும் சிக்கலான நிலையில் தான் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்கிறார்கள். மனித உடலில் சிறுநீரகங்கள் பல முக்கியமான செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானவை. இவை இரத்தத்தில் இருந்து நச்சுக்கள் மற்றும் கழிவுகளை அகற்ற உதவுவதோடு, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கவும், வைட்டமின் டி சத்தை ஒருங்கிணைக்கவும் மற்ற உறுப்புக்களுடன் இணைந்து செயல்படவும் உதவுகின்றன.
சிறுநீரகங்கள் மூன்று முக்கிய ஹார்மோன்களை சுரக்கின்றன. அவை எரித்ரோபொய்டின், ரெனின் மற்றும் கால்சிட்ரியால் ஆகும். இவை மூன்றும் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. சிறுநீரக நோய் சிறுநீரகங்களின் செயல்பாட்டை மோசமடையச் செய்வது மட்டுமல்லாமல், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட வைக்கின்றன.
MOST READ: நம் முன்னோர்கள் தொப்பை வராமலிருக்க இத தான் குடிச்சாங்களாம்.. தெரியுமா?
ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதன் மூலம் சிறுநீரக நோயைத் தடுக்க முடியும். அதோடு முன்கூட்டியே ஒருவர் சிறுநீரக நோயை கண்டறிந்துவிட்டால், எளிதில் அவற்றை குணமாக்கவும் முடியும். ஆகவே ஒருவர் சிறுநீரக நோயின் ஆரம்ப கால அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இப்போது சிறுநீரக நோயைச் சுட்டிக்காட்டக்கூடிய சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.
MOST READ: சாதாரணம் என்று நினைத்து பெரும்பாலான மக்கள் புறக்கணிக்கும் கொரோனா அறிகுறிகள்!

சோர்வு
நீங்கள் எந்நேரமும் சோர்வுடன் இருப்பதை உணர்ந்தால், அது சிறுநீரக நோயின் அறிகுறிகளுள் ஒன்று. சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்தால், அது எரித்ரோபொய்டின் என்னும் ஹார்மோனை உருவாக்குகின்றன. இந்த ஹார்மோன்கள் உடலுக்கு ஆக்ஸிஜனைச் சுமக்கும் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்கச் சொல்கிறது. ஆனால் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் இருந்தால், இந்த ஹார்மோன்கள் குறைவாக சுரக்கப்படும். இதனால் உடலுறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனைச் சுமக்கும் சிவப்பு இரத்த அணுக்களின் அளவு குறைந்து, விரைவில் சோர்வடையச் செய்யும்.

குளிர்ச்சி
மற்றவர்கள் மிகவும் வெதுவெதுப்பான சூழலை உணரும் போது, நீங்கள் மட்டும் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்தால், அது சிறுநீரகத்தில் உள்ள பிரச்சனைக்கான அறிகுறிகளுள் ஒன்று. சிறுநீரக நோய் இருந்தால், இரத்த சோகை பிரச்சனையை சந்திக்கக்கூடும். இரத்த சோகை இருப்பவர்கள் தான் எல்லா நேரத்திலும் குளிர்ச்சியை உணர்வார்கள்.

மூச்சுத் திணறல்
நீங்கள் சிறு வேலை செய்தாலும், மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்கிறீர்களா? மூச்சுத் திணறல் இரண்டு வழிகளில் சிறுநீரகங்களுடன் தொடர்புடையது. முதலில், நுரையீரலில் அதிகளவிலான திரவம் தேங்கியிருப்பது. மற்றொன்று உடலில் ஆக்ஸிஜனைச் சுமக்கும் சிவப்பு இரத்த அணுக்களின் அளவு குறைவாக இருப்பது. இதன் விளைவாகவே சிறுநீரக நோய் உள்ளவர்கள் மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்கிறார்கள்.

தலைச்சுற்றல், மயக்கம் அல்லது பலவீனம்
இரத்த சோகை தொடர்பான சிறுநீரக செயலிழப்பு என்றால் போதுமான ஆக்ஸிஜனைச் சுமக்கும் சிவப்பு இரத்த அணுக்கள் மூளைக்கு கிடைப்பதில்லை என்று அர்த்தம். இதன் விளைவாக இது தலைச்சுற்றல், மயக்கம் அல்லது பலவீனத்திற்கு வழிவகுக்கிறது.

கடுமையான சரும அரிப்பு
சிறுநீரகங்கள் தான் இரத்தத்தில் இருந்து கழிவுகளை பிரித்து நீக்குகின்றன. எப்போது சிறுநீரங்கள் இச்செயலை சரிவர செய்யாமல் இருக்கிறதோ, அப்போது இரத்தத்தில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, கடுமையான சரும அரிப்பை உண்டாக்குகின்றன.

கை அல்லது கால்களில் வீக்கம்
சிறுநீரகங்கள் உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றாத பட்சத்தில், உடலில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு, அதன் விளைவாக கால்கள், கணுக்கால், பாதம் மற்றும் கைகள் வீக்கமடைந்து காணப்படும்.

வீங்கிய முகம்
உங்கள் முகம் திடீரென்று சில நாட்களாக வீங்கி காணப்படுகிறதா? ஏன் என்று தெரியவில்லையா? பொதுவாக சிறுநீரகங்கள் உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றாமல் இருந்தால், அது உடலில் கெட்ட நீரை தேங்கச் செய்து, முகம் வீங்கி காண வழிவகுக்கும். எனவே இம்மாதிரியான பிரச்சனையை சந்திக்கும் போது கவனமாக இருங்கள்.

வாய் துர்நாற்றம்
உங்கள் வாய் கடுமையான துர்நாற்றத்துடன் இருக்கிறதா? என்ன தான் ஒரு நாளைக்கு 2 முறை பிரஷ் செய்தாலும், வாய் துர்நாற்றம் போகவில்லையா? அப்படியானால் சிறுநீரகங்களில் உள்ள பிரச்சனையால், அவை இரத்தத்தில் உள்ள நச்சுக்களை சரியாக வெளியேற்றாமல் இருக்கிறது என்று அர்த்தம்.

சிறுநீர் கழிப்பதில் மாற்றம்
சிறுநீர் கழிக்கும் அளவு மற்றும் சிறுநீர் கழிக்கும் முறையில் மாற்றத்தைக் கண்டால், அதுவே சிறுநீரக நோயின் முதல் அறிகுறியாகும். சிலர் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்வார்கள் ஆனால் சிறுநீர் கழிக்கும் போது சிரமத்தை சந்திப்பார்கள். அதோடு சிறுநீர் அடர் நிறத்தில், இரத்தம் கலந்து, வலி அல்லது எரிச்சலுடன் சிறுநீரைக் கழிக்கக்கூடும்.

முதுகு அல்லது இடுப்பு வலி
சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக தொற்றுக்கள் இருந்தால் கீழ் முதுகு பகுதி மற்றும் அடிவயிற்றின் இரண்டு புறத்திலும் வலியை சந்திக்கக்கூடும். சிறுநீர் குழாயில் கற்கள் இருந்தால், முதுகு வலி ஆரம்பித்து அது அப்படியே இடுப்பு பகுதியிலும் வலியை பரப்பக்கூடும்.