For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கையில் இப்படியொரு வலி வருவதற்கு இச்சத்து குறைபாடு தான் காரணமாம்... அது என்ன சத்து?

உடலில் பி வைட்டமின்களின் குறைபாடு தான் நரம்பு பாதிப்பிற்கு வழிவகுக்கிறது. ஆனால் இந்தியர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இப்பிரச்சனை குறித்து தெரியாது.

|

உடல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் மிகவும் முக்கியம். பொதுவாக நமது உடலால் வைட்டமின்களை உற்பத்தி செய்ய முடியாது. எனவே உடலுக்கு வேண்டிய வைட்டமின்களைப் பெறுவதற்கான ஒரே வழி உணவுகள் தான். வைட்டமின்களிலேயே வைட்டமின் பி12, கோபாலமின் என்று அழைக்கப்படுகிறது. இது நரம்பு திசுக்களின் ஆரோக்கியம், மூளை செயல்பாடு மற்றும் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்திக்கு அவசியம். ஆனால் பலருக்கு இச்சத்து போதுமான அளவு கிடைப்பதில்லை.

Vitamin B12 Deficiency Can Lead To Nerve Damage: Foods For Healthy Nerves

இந்தியாவில் வைட்டமின் பி12 குறைபாடு மிகவும் பொதுவாக காணப்படுவதாக ஹீல் ஹெல்த் மற்றும் ஹன்சா ஆராய்ச்சியின் ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது. உடலில் பி வைட்டமின்களின் குறைபாடு தான் நரம்பு பாதிப்பிற்கு வழிவகுக்கிறது. ஆனால் இந்தியர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இப்பிரச்சனை குறித்து தெரியாது. இப்போது இந்த வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் மற்றும் இச்சத்து அதிகம் உள்ள உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள்

வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள்

வைட்டமின் பி12 குறைபாட்டின் ஆரம்ப கால அறிகுறிகள் பின்வருமாறு:

* தலைச்சுற்றல்

* தலை பலவீனம்

* கை மற்றும் கால்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு போன்றவை அடங்கும்.

முக்கியமாக வைட்டமின் பி12 குறைபாட்டினால் ஏற்படும் நரம்பு பாதிப்பானது நிரந்தரமாக பலவீனமடையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உடலால் வைட்டமின் பி12-ஐ உருவாக்க முடியாது

உடலால் வைட்டமின் பி12-ஐ உருவாக்க முடியாது

பெரும்பாலான வைட்டமின்களைப் போலவே, பி12 ஐ நம் உடலால் உருவாக்க முடியாது. இச்சத்தை உணவு மற்றும் சப்ளிமெண்ட்டுகளின் மூலமே பெற முடியும். அதோடு, நமது உடலில் வைட்டமின் பி12-ஐ நீண்ட காலம் சேமித்து வைக்க முடியாது. எனவே தான் அன்றாடம் இச்சத்து உள்ள உணவை உட்கொள்ள வேண்டும். பெரும்பாலும் இச்சத்து குறைபாடு வயதானவர்களிடையே காணப்படுவதாக கூறப்படுகிறது. நரம்பு மண்டலத்தை எந்த ஊட்டச்சத்துக்கள் வளர்க்கின்றன என்பதை புரிந்து கொள்வது, நரம்பு தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள் எவையென்பதை தெரிந்து கொள்வது, நரம்பு பிரச்சனைகளை குறைக்க உதவும். இப்போது வைட்டமின் பி12 சத்து அதிகம் நிறைந்த உணவுகளைக் காண்போம்.

விலங்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள்

விலங்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள்

ஆடு, மாடு ஆகியவற்றின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் வைட்டமின் பி12 மிகவும் அதிகமாக உள்ளது. 100 கிராம் ஆட்டு, மாட்டு ஈரலில் தினசரி மதிப்பில் 3,500% வரை வைட்டமின் பி12 கிடைக்கும். அதே வேளையில் அவற்றின் சிறுநீரகங்களில் 3,000% வரை கிடைக்கிறது.

மீன்

மீன்

மீன்கள் புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாக இருப்பதால், இது ஒரு சத்தான சூப்பர் உணவாகும். மத்தி, டுனா, சால்மன் போன்ற மீன்கள் வைட்டமின் பி12 சத்தை அதிகம் கொண்டவையாகும். மேலும் மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால், இது இதயத்தில் மிகவும் நல்லது.

பால் மற்றும் பால் பொருட்கள்

பால் மற்றும் பால் பொருட்கள்

பால் மற்றும் தயிர், பன்னீர் போன்ற பால் பொருட்களில் வைட்டமின் பி12 உட்பட பல வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள் அதிகம் உள்ளன. ஒரு கப் முழு பாலில் தினசரி தேவையில் 46% வைட்டமின் பி12 உள்ளது மற்றும் ஒரு பெரிய பன்னீர் துண்டில் 28% வைட்டமின் பி12 உள்ளது.

முட்டைகள்

முட்டைகள்

முட்டையின் வெள்ளைக்கருவை விட மஞ்சள் கருவில் அதிகளவு வைட்டமின் பி12 உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இனிமேல் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவதைத் தவிர்த்து முழு முட்டையையும் சாப்பிடுங்கள். கூடுதலாக, முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள வைட்டமின் பி 12 உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வலுவூட்டப்பட்ட செரில்கள் மற்றும் சோயா பால்

வலுவூட்டப்பட்ட செரில்கள் மற்றும் சோயா பால்

சைவ உணவாளர்களுக்கான வைட்டமின் பி12 அதிகம் நிறைந்த உணவுப் பொருட்கள் தான் வலுவூட்டப்பட்ட செரில்கள் மற்றும் சோயா பால். இவற்றை உட்கொண்டால், உடலுக்கு தேவையான வைட்டமின் பி12 கிடைத்து, நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

FAQ's
  • பி12 குறைவாக இருந்தாலும் நரம்புகள் பாதிக்கப்படுமா?

    வைட்டமின் பி12 குறைபாடு நரம்பியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதுவும் இது நரம்பு மண்டலத்தை மோசமாக பாதித்து, பார்வை பிரச்சனைகள், ஞாபக மறதி மற்றும் கை, கால்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

  • வைட்டமின் பி12 குறைபாட்டில் இருந்து நரம்புகள் குணமாவதற்கு எவ்வளவு காலம் ஆகும்?

    வைட்டமின் பி12 உணவுகளை உட்கொள்ள ஆரம்பித்த முதல் வாரத்தில் நரம்பு மண்டலத்தில் முன்னேற்றம் காண தொடங்குகிறது. முழுமையாக குணமாவதற்கு 6 வாரங்கள் முதல் 3 வாரங்கள் வரை ஆகும்.

  • நரம்பு சேதத்தின் அறிகுறிகள் என்ன?

    நரம்புகள் சேதமடைந்திருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்

    * கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு.

    * இறுக்கமான கையுறை அல்லது சாக்ஸ் அணிந்திருப்பது போன்ற உணர்வு இருக்கும்.

    * கைகள் அல்லது கால் தசைகள் பலவீனமாக இருக்கும்.

    * பொருட்களை அடிக்கடி கைநழுவ விடுவது.

    * கைகள், கால்கள் அல்லது பாதங்களில் கூர்மையான வலி இருக்கும்.

English summary

Vitamin B12 Deficiency Can Lead To Nerve Damage: Foods For Healthy Nerves

Did you know vitamin b12 deficiency can lead to nerve damage? Here are some foods you should eat for healthy nerves. Read on...
Desktop Bottom Promotion