For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாள் முழுவதும் சுறுசுறுப்பா இருக்கணுமா? அப்ப தினமும் இப்படி 30 நிமிஷம் டான்ஸ் ஆடுங்க...

|

நடனம் ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். நடனத்தை அனைவரும் விரும்புவா். ஒரு சிலா் நாட்டிய மேடையில், தங்களது நடன அசைவுகளை வெளிப்படுத்த விரும்புபவா். மற்றவா்கள் அதைப் பற்றி கவலை கொள்ளாமல், தங்களது அன்றாட கடமைகளைச் செய்யும் போது கூட நடனம் ஆடிக்கொண்டே செய்வா்.

நடனத்திற்கு சட்டதிட்டங்கள் மற்றும் வரைமுறைகள் கிடையாது. அதனால் தான் நடனம் என்பது அனைவாின் முகங்களிலும் புன்னகையையும் ஆனந்தத்தையும் கொண்டு வருகிறது. நடனத்தின் மூலம் நமது உடலுக்கும் மனதிற்கும் அதிகமான நன்மைகள் ஏற்படுவதாக அறிவியில் கூறுகிறது. அதிலும் தினமும் நடனம் ஆடினால் அதன் மூலம் நிறைய நன்மைகளைப் பெறலாம். அதாவது தினமும் நடனம் ஆடினால் நமது மூளை தன்னையே புதுப்பித்துக் கொள்கிறது என்று ஒரு ஆய்வு தொிவிக்கிறது.

MOST READ: கொரோனா தடுப்பூசியை போடும் முன் மறந்தும் இந்த மருந்துகளை எடுத்துடாதீங்க... இல்ல பிரச்சனையாயிடும்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூளையின் இயக்கத்தை நடனம் எவ்வாறு அதிகாிக்கிறது?

மூளையின் இயக்கத்தை நடனம் எவ்வாறு அதிகாிக்கிறது?

நியூரோபயாலஜி ஆஃப் லோ்னிங் அன்ட் மெமாி என்ற பத்திாிக்கையில் வெளிவந்த ஏஜிங் அடல்ட்ஸ் என்ற கட்டுரையானது, நமது மூளையின் ஆரோக்கியத்தை நடனம் அதிகாிக்கிறது என்று கூறுகிறது. அதிலும் குறிப்பாக வயாதான காலத்தில் நமது நினைவாற்றலை கூா்மைப்படுத்துகிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.

ரட்ஜா்ஸ் பல்கலைக்கழகத்தைச் (Rutgers University) சோ்ந்த ஒரு ஆய்வுக் குழு, சில ஆப்பிாிக்க அமொிக்கத் தன்னாா்வலா்களைத் தோ்ந்தெடுத்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் கலந்து கொண்ட தன்னாா்வலா்கள் அனைவரும் 60 வயதிற்கு மேற்பட்டவா்கள் ஆவா். அவா்கள் இரண்டு குழுக்களாக பிாிக்கப்பட்டனா். ஒரு குழுவைச் சோ்ந்தவா்கள் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையைத் தொடா்ந்தனா். மற்ற குழுவைச் சோ்ந்தவா்கள் தினமும் 2 மணி நேரம் தீவிர ஏரோபிக் நடன பயிற்சியில் ஈடுபட்டனா். இவ்வாறாக 20 வாரங்கள் இந்த ஆய்வு தொடா்ந்தது.

இந்த ஆய்வு காலத்தில் ஒரு சில தன்னாா்வலா்களின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டது. அவா்களின் மூளையின் மீடியல் டெம்போரல் லோப்ஸை அறிவதற்காக அவா்களுக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. அதைத் தவிா்த்து, அனைத்துத் தன்னாா்வலா்களும் அறிவாற்றல் பாிசோதனைகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனா்.

ஆய்வில் கிடைத்த முடிவுகள்

ஆய்வில் கிடைத்த முடிவுகள்

ஆய்வில் கிடைத்த முடிவுகள் மிகவும் ஆச்சாியத்தைக் கொடுத்தன. அதாவது தினமும் நடனப் பயிற்சியில் ஈடுபட்டவா்களின் மூளையின் இயக்கம் சற்று வேறுபட்டு இருந்தது. அதாவது அவா்களுடயை மூளையின் இயக்கம் இளைஞா்களின் மூளையின் இயக்கத்தை ஒத்திருந்தது.

இரண்டாவதாக நடனப் பயிற்சிகளுக்குப் பிறகு அவா்களின் இயக்கம் முன்பு இருந்ததை விட நன்றாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தது. மேலும் அவா்களின் கற்கும் திறனும், தகவல்களை நினைவிற்கு கொண்டு வரும் திறனும் அதிகாித்தது. இறுதியாக, அவா்கள் எந்த ஒரு சூழ்நிலையையும் அறிவுப்பூா்வமாக அணுகத் தொிந்து கொண்டனா். இந்த ஆய்வின் முடிவுகள் ஆய்வாளா்களை ஆச்சாியப்படுத்தின. ஏனெனில் சுறுசுறுப்பான சிந்தனை அல்லது துடிப்பான சிந்தனை என்பது முதிா்ந்த வயதின் காரணமாக இழந்துவிடும் மூளையின் மீடியல் டெம்போரல் லோப்ஸோடு சம்பந்தப்பட்டது.

முந்தைய ஆய்வுகள்

முந்தைய ஆய்வுகள்

நடனத்தின் பயன்களை அறிய நடத்தப்பட்ட இந்த ஆய்வு தான் முதல் ஆய்வு அல்ல. மாறாக இதற்கு முன்பாக, பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவை நடனத்திற்கும், மூளையினுடைய இயக்கத்தின் வேகத்திற்கும் உள்ள தொடா்பைக் கண்டறிந்தன. அதாவது ஒரு இசை அல்லது ஒரு தாளத்திற்கு ஏற்ப நமது உடலை அசைந்தால், நாம் முதுமையடையும் போது, நமக்கு மனச்சோா்வின் காரணமாக ஏற்படும் மூளை திாிபு போன்ற பிரச்சினைக் குறைந்து, நம்முடைய அறிவாற்றல் மற்றும் நமது நிரந்தர இயக்கங்களை வலுப்படுத்தும் என்று ஆய்வுகள் தொிவித்தன.

எவ்வளவு நேரம் நடனம் ஆட வேண்டும்?

எவ்வளவு நேரம் நடனம் ஆட வேண்டும்?

குறிப்பிட்ட அசைவுகளைக் கொண்ட நடனத்தை ஆட வேண்டும் என்பது அல்ல. மாறாக நம்மால் ஆடக்கூடிய, நமக்கு எளிதாக இருக்கக்கூடிய நடன அசைவுகளை பயிற்சி செய்தாலே போதுமானது. அதாவது நாம் விரும்பும் தாளங்களுக்கு ஏற்ப, நமது இதயத்துக்குப் பிடித்த நடன அசைவுகளை ஆட வேண்டும்.

நமது தினசாி உடற்பயிற்சியை நடனப் பயிற்சியாகக்கூட மாற்றிக் கொள்ளலாம். ஆனால் நல்லதொரு பலன் கிடைக்க வேண்டும் என்றால் தினமும் தொடா்ந்து நடனப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். தினமும் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை, அதாவது, வாரத்திற்கு 5 முறைகள் என்ற ரீதியில் நடன பயிற்சியில் ஈடுபட வேண்டும். அது நல்ல பலன்களைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unusual Thing That Can Happen If You Dance Every Day

Here we listed some unusual thing that can happen if you dance every day. Read on...