Latest Updates
-
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...!
60, 70-களில் சளி, காய்ச்சலைப் போக்க நம் முன்னோர்கள் குடித்த கசாயம் இதாங்க...
ஆன்மீகத்தை பொருத்தவரையில் துளசி என்பது மஹாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும். பெருமாளுக்கும் பிடித்தமான செடியாகும். இதனால் தான் அனைத்து வைணவ கோவில்களிலும் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்ப
இன்றைக்கு புதிது புதிதாக உருவாகும் அனைத்து விதமான நோய்களையும் கட்டுப்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது துளசி. இதனாலேயே துளசி செடியை நாட்டு மருத்துவத்தில் மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவர் வீட்டிலும் துளசியை வளர்ப்பதன் மூலம் நோயற்ற வாழ்க்கையை வாழலாம்.

சுமார் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், யாருக்காவது இருமல், சளி, காய்ச்சல் என்றால் இருக்கவே இருக்குது துளசி கசாயம் என்பார்கள். இது 1960 மற்றும் 70ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு நன்கு தெரியும். துளசி கசாயத்தை தொடர்ச்சியாக மூன்று வேளைக்கு மூன்று நாட்கள் துளசி கசாயத்தை குடித்து வந்தால் எப்படிப்பட்ட காய்ச்சலாக இருந்தாலும் பறந்தோடி விடும்.
இன்றைக்கும் பெரும்பாலான கிராமப்புற மக்கள் துளசி கசாயத்தை தான் பயன்படுத்தி பயனடைந்து வருகின்றர். தொழில்நுட்பமும், மருத்துவ வசதிகளும் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், யாரையாவது காய்ச்சலுக்கும், சளி மற்றும் இருமலுக்கும் துளசி கசாயத்தை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று சொன்னால், ஏளனமாக சிரித்து கிண்டலடிப்பார்கள். உண்மையிலேயே அதை பயன்படுத்தி பார்த்திருந்தால் தான் அதன் மருத்துவ மகத்துவம் தெரியும். இதனால் தான் துளசி செடியை மூலிகைகளின் ராணி என்று அழைக்கின்றனர்.

துளசியின் மருத்துவ குணம்
துளசியின் மருத்துவ குணத்தால் நாட்டு மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசி செடியின் இலை, பூ, வேர் மற்றும் தண்டுப் பகுதி என அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்ததாகும். நாள்தோறும் ஒரு துளசி இலையை மென்று தின்று வந்தால், சிறுகுடல், பெருங்குடல், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

துளசியின் மகிமை
துளசி செடியை வீட்டில் வளர்ப்பதற்கு மற்றொரு காரணம், இது மற்ற தாவரங்களை விட, அதிக அளவில் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவையும் நச்சுப்புகையையும் தனக்குள் கிரகித்துக்கொண்டு அவற்றை சுத்திகரித்து, சுத்தமான காற்றை வெளியிடும் தன்மை கொண்டது. மேலும் துளசி செடி இருக்கும் இடத்தில் பாம்பு, தேள் என எந்தவித விஷ ஜந்துக்களும் அண்டாது.

மூலிகைகளின் ராணி
மூலிகைகளின் ராணி எனப்படும் துளசி செடிக்கு திவ்யா, திருத்துழாய், துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, துளசி, கிருஷ்ணதுளசி, ராமதுளசி என பல்வேறு பெயர்களும் உண்டு. துளசியின் மருத்துவ குணத்தால் நாட்டு மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசி செடியின் இலை, பூ, வேர் மற்றும் தண்டுப் பகுதி என அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.

தினமும் சாப்பிடுங்க துளசி
நாள்தோறும் ஒரு துளசி இலையை மென்று தின்று வந்தால், சிறுகுடல், பெருங்குடல், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். அதோடு வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனையும் காணாமல் போய்விடும். இன்றைக்கு புதிது புதிதாக உருவாகும் அனைத்து விதமான காய்ச்சலையும் கட்டுப்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது துளசி செடி. சிறு வயதில் இருந்தே துளசி இலைகளை மென்று தின்றுவந்தால், சர்க்கரை நோய் நாம் இருக்கும் திசையை எட்டிக்கூட பார்க்காது.

துளசி சாறு மகிமை
துளசி இலையை சாறெடுத்து அதனோடு எலுமிச்சை சாறையும் சேர்த்து மிதமாக சூடுபடுத்தி கூடவே சிறிது தேன் கலந்து, உணவு சாப்பிட்ட பின் அரைமணி நேரம் கழித்து அருந்தி வந்தால் உடல் எடை குறைய தொடங்கும். துளசி இலையோடு சிறிது முருங்கை இலையையும் சேர்த்து சாறு பிழிந்து அதில் சுமார் 50 மில்லி கிராம் அளவு மட்டுமே எடுத்துக்கொண்டு, அதோடு சிறிது சீரக பொடியையும் சேர்த்து காலை மாலை என இரு வேளைகளில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த நோய் கட்டுக்குள் இருக்கும். இந்த மருத்துவ முறையை பயன்படுத்தும்போது உப்பு, புளிப்பு, காரம் குறைந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. துளசி இலையை எலுமிச்சை சாறுடன் சேர்த்து அரைத்து தோல் வியாதிகளுக்கு பற்று போடலாம்.

துளசியும் வேப்பிலையும்
துளசி இலை, எலுமிச்சை சாறுடன், சிறிது வேப்பிலையை சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் தேமல் மறையும். செம்பு பாத்திரத்தில் தேவையான அளவு தூய தண்ணீர் விட்டு அதில் துளசி இலையை போட்டு எட்டு மணி நேரம் வரை மூடி ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் என்றும் இளமையுடனும், தோல் சுருக்கமின்றியும், கண் பார்வை குறைபாடு இன்றியும் வாழலாம்.



Click it and Unblock the Notifications











