Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
ஆண்களே! உங்களுக்கு 'அந்த' இடத்தில் புற்றுநோய் வராம தடுக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதோடு, புரோஸ்டேட் புற்றுநோயை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சில ஆண்களுக்கு மற்றவர்களை விட இந்த புற்றுநோயின் அபாயம் அதிகம்.
புற்றுநோய் வளர்ந்து வரும் அச்சுறுத்தலான ஒரு கொடிய நோய் ஆகும். மேலும் பல்வேறு வகையான புற்றுநோய்களில், உலகம் முழுவதும் உள்ள ஆண்களில் கண்டறியப்படும் நான்காவது பொதுவான வகை புரோஸ்டேட் என்கிற புற்றுநோய். ஒரு மனிதனின் புரோஸ்டேட்டில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதையே புரோஸ்டேட் புற்றுநோய் என்கிறோம். ஒரு சிறிய வால்நட் அளவு சுரப்பி, விந்தணு திரவத்தை உற்பத்தி செய்கிறது. இது சிறுநீர் கழிப்பதில் சிரமம், விந்து வெளியேறுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளனர்.

வயதுக்கு ஏற்ப, உணவு மற்றும் உங்கள் அன்றாட வாழ்க்கை முறை போன்ற புற்றுநோய் செல்களின் வளர்ச்சியில் மற்ற காரணிகளும் பெறும் பங்கு வகிக்கின்றன. புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்க எளிதாக நிர்வகிக்கக்கூடிய விஷயங்கள் பல உள்ளன. இது நோயை உருவாக்கிய பிறகு கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபியின் போன்ற நீண்ட செயல்முறையை விட மிகவும் சிறந்தது. இந்த புற்றுநோயின் ஆபத்தை குறைக்க ஆண்கள் செய்ய வேண்டிய சில உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

குறைந்த கொழுப்பு உணவுகள்
கொழுப்பு இரண்டு வகைகள் உள்ளன. அவை நல்லது மற்றும் கெட்டது. நல்ல கொழுப்பு உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் நாள்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது. அதே சமயம் கெட்ட கொழுப்பு அதற்கு நேர்மாறாக செயல்படுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, உங்கள் உணவில் கொட்டைகள், நெய், மீன் போன்ற நல்ல கொழுப்பை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் வறுத்த பழங்கள் போன்ற கெட்ட கொழுப்பின் மூலங்களைக் குறைக்க வேண்டும். நீங்கள் நல்ல கொழுப்பை உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் அதிகமாக சாப்பிடக்கூடாது. அதிக கொழுப்பு உட்கொள்வது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் மெலிந்த இறைச்சி போன்ற குறைந்த அளவு நல்ல கொழுப்புள்ள உணவை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்கவும்
காய்கறிகள் மற்றும் பழங்கள் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களால் ஏற்றப்படுகின்றன. அவை ஊட்டச்சத்துக்களின் சக்தியாக இருக்கின்றன மற்றும் உள் உறுப்புகள் நன்றாக செயல்பட உதவும். ஒவ்வொரு பழம் மற்றும் காய்கறிகள் வெவ்வேறு வகையான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. எனவே, அவற்றின் அற்புதமான பலன்களைப் பெற, அவற்றை அவ்வப்போது உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன மற்றும் ஆரோக்கியமற்ற உணவு சாப்பிடுவதைத் தடுக்கின்றன. மேலும், உங்கள் உணவில் சோயாபீன்ஸ் மற்றும் கிரீன் டீயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்
அதிக எடை அல்லது பருமனாக இருப்பது புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பிற நாட்பட்ட நிலைமைகளை உருவாக்கும் அபாயத்தில் உங்களை வைக்கலாம். 30 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ (பாடி மாஸ் இண்டெக்ஸ்) கொண்ட ஆண்கள் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இது மிகவும் அவசியம் . ஏனெனில் இந்த வயதிற்குப் பிறகு வளர்சிதை மாற்றம் குறைகிறது மற்றும் மக்கள் எடை பொதுவாக அதிகரிக்கும். எனவே நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், ஆரோக்கியமான உணவைப் பின்பற்ற வேண்டும். மேலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி செய்யுங்கள்
ஒரு பொதுவான தவறான கருத்து என்னவென்றால், உடற்பயிற்சி செய்வது எடையை குறைக்க அல்லது ஒல்லியாக முயற்சிப்பவர்களுக்கு மட்டுமே அவசியம் என்று நினைப்பது. அனைவரும் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ உடற்பயிற்சி செய்வது அவசியம். புரோஸ்டேட் புற்றுநோய், இதய நோய் மற்றும் பிற வகையான நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உடற்பயிற்சி உங்களுக்கு உதவும். உங்கள் எடையை நிர்வகிக்கவும், உங்கள் கலோரி உட்கொள்ளலை சமநிலைப்படுத்தவும் உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். இந்த நேரம் உடல் பயிற்சி செய்தாலே போதும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹாலை தவிர்க்கவும்
அதிகப்படியான புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியவை. எனவே இந்தப் பழக்கங்களைப் பின்பற்றுபவராக இருந்தால், இந்த கொடிய பழக்கங்களை விட்டுவிட வேண்டிய நேரம் இது. இவை இரண்டும் உங்கள் நோய் எதிர்ப்புச் செயல்பாட்டைக் குறைக்கின்றன. மேலும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஆல்கஹால் மற்றும் புகைபிடிப்பதை நீங்கள் உடனடியாக கைவிட வேண்டும்.

இறுதி குறிப்பு
ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதோடு, புரோஸ்டேட் புற்றுநோயை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சில ஆண்களுக்கு மற்றவர்களை விட இந்த புற்றுநோயின் அபாயம் அதிகம். ஆதலால், ஆண்கள் ஆரோக்கியமாக வாழ இந்த விஷயங்களை பின்பற்றினாலே போதும்.



Click it and Unblock the Notifications











