For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆர்னிகா: உங்கள் மூட்டு வலிக்கான தீர்வு ! நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்!

|

அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்! இந்த பழமொழி குறிப்பாக மருந்துகளுக்குப் பொருந்தும். மூலிகை மருத்துவத்தில், நீர்த்த தாவர சாறுகள் கொடிய நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன. அத்தகைய சக்திவாய்ந்த மூலிகைக்கு ஆர்னிகா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

The Answer To Your Aching Joints! Benefits, Mechanisms, And Side Effects

ஆர்னிகா என்பது ஹோமியோபதியில் அறியப்பட்ட பெயர். இந்த நுட்பமான தாவரத்தின் பசுமையான இலைகள் உங்கள் வலிகளை அகற்றும். கீல்வாதம், அறுவை சிகிச்சைக்குப் பிறகான புண், காயங்கள், வடுக்கள் மற்றும் வீக்கமடைந்த திசுக்களுக்கு சிகிச்சையளிக்க ஆர்னிகாவின் நீர்த்த தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆர்னிகா பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இந்தப் பதிவைத் தொடர்ந்து. படியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆர்னிகா பற்றிய அறிமுகம்

ஆர்னிகா பற்றிய அறிமுகம்

ஆர்னிகா மொன்டானா ஐரோப்பாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு வற்றாத புதர் ஆகும். ஜூலை மாதம் பூக்கும் பிரகாசமான மஞ்சள் நிற பூக்களைக் கொண்ட ஆர்னிகா அஸ்டெரேசி குடும்பத்தைச் சார்ந்த ஒரு தாவரமாகும்.

ஆர்னிகாவில் வலி நிவாரணம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது 20 ஆம் நூற்றாண்டில் கால்-கை வலிப்பு, கடலில் கப்பல் பயணத்தால் உண்டாகும் குமட்டல் நோய், காயங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஐரோப்பாவில், ஆர்னிகா பூஞ்சைக் கொல்லி மற்றும் பாக்டீரிசைடல் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்பட்டது. ஆகவே, நீங்கள் பல ஹோமியோபதி களிம்புகள், ஜெல், டிங்க்சர்கள், கிரீம்கள் மற்றும் மாத்திரைகளில் ஆர்னிகாவைக் காணலாம்.

1. வலி மற்றும் அழற்சியைப் போக்கும்:

1. வலி மற்றும் அழற்சியைப் போக்கும்:

ஹோமியோபதியில், திசுக்களில் வீக்கம், வலி மற்றும் அழற்சியைக் கட்டுப்படுத்த ஆர்னிகா பயன்படுத்தப்படுகிறது. டிக்ளோஃபெனாக் மற்றும் இப்யூபுரூஃபன் போன்ற அல்லோபதி அழற்சி எதிர்ப்பு மருந்துகளுடன் ஒப்பிடக்கூடிய முடிவுகளை இது காட்டுகிறது. ஆர்னிகா களிம்புகள் மற்றும் ஜெல் ஆகியவற்றின் மேற்பூச்சு பயன்பாடு கடுமையான தசை வலிகள், சுளுக்கு, தசைநாண் அழற்சி, விறைப்பு, ஃபைப்ரோமியால்ஜியா போன்றவற்றைப் போக்கும். இந்த நீர்த்த ஹோமியோ தயாரிப்பின் சிறிய அளவுகள், வலி மற்றும் வேதனையின் உணர்வைக் குறைக்கும்.

செல்லுலிடிஸ்- வலி, உணர்வின்மை, கடுமையான முதுகுவலி, தலைவலி, மூல நோய் போன்றவற்றில் ஆர்னிகாவின் நேர்மறையான விளைவுகளை நிரூபிக்கும் வரையறுக்கப்பட்ட மற்றும் உறுதியான அறிவியல் சான்றுகள் உள்ளன. பிற வாய்வழி ஹோமியோபதி நீர்த்தங்களுடன் நிர்வகிக்கப்படும் போது, ஆர்னிகா நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் வலியையும் குறைப்பதாக அறியப்படுகிறது.

2. கீல்வாதம் மற்றும் முடக்கு வாதத்தை நிர்வகிக்க உதவுகிறது:

2. கீல்வாதம் மற்றும் முடக்கு வாதத்தை நிர்வகிக்க உதவுகிறது:

கீல்வாதம் என்பது உங்கள் முழங்கால்கள், இடுப்பு மற்றும் கைகளில் உள்ள மூட்டுகளை பாதிக்கும் ஒரு நோயாகும். மூட்டுகள் குருத்தெலும்புகளை இழக்கும் போது, வழக்கமாக, சேதத்தை சரிசெய்ய எலும்பு வளரும். மீண்டும் கட்டுவதற்கு பதிலாக, எலும்பு அசாதாரணமாக வளர்ந்து வழக்கமான உடல் செயல்பாட்டை பாதிக்கும் போது கீல்வாதம் ஏற்படுகிறது.

கைகளில் கீல்வாதம் உள்ள 174 பேர் பற்றிய ஒரு ஆய்வில், ஆர்னிகா ஜெல் பயன்படுத்துவது இப்யூபுரூஃபன் சிகிச்சையுடன் ஒப்பிடத்தக்க முடிவுகளைக் கொடுத்தது. பாதகமான விளைவுகள் பதிவாகியிருந்தாலும், இந்த மூலிகை சிகிச்சை வலி மற்றும் செயல்பாட்டை மேம்படுத்தியது.

ஒரு சில நோயாளிகள் ஸ்டெராய்டு அல்லாத அழற்சி மருந்து (என்எஸ்ஏஐடி) எதிர்ப்பை விட சிறந்த இயக்கம் மற்றும் மீட்டெடுப்பைப் பதிவு செய்தனர். ஆர்னிகா எண்ணெய் / டிஞ்சர் / ஜெல் இப்யூபுரூஃபனைக் காட்டிலும் குறைவாக இல்லை என்பதை இது நிரூபிக்கிறது - நாள்பட்ட கீல்வாதத்திற்கு சிகிச்சையளிக்க மருத்துவ வழிகாட்டுதலின் கீழ் அவற்றை இதேப்போல் பயன்படுத்தப்படலாம்.

3. வடுக்கள் மற்றும் காயங்களை குணப்படுத்துகிறது:

3. வடுக்கள் மற்றும் காயங்களை குணப்படுத்துகிறது:

அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வடுக்கள் மற்றும் காயங்கள் ஒரு நபரின் நம்பிக்கையையும் ஆளுமையையும் பாதிக்கும். சேதமடைந்த இரத்த நாள சுவர்களில் இருந்து இரத்தம் வெளியேறும் போது இத்தகைய காயங்கள் உருவாகின்றன.

கசிந்த இரத்தம் காயம் அல்லது கீறலைச் சுற்றி சேகரித்து இயற்கையான இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. போதுமான ஆக்ஸிஜன் பகிர்வு இல்லாததால், காயமடைந்த இந்த இடங்கள் நீலம், பழுப்பு, பச்சை அல்லது கருப்பு நிறமாக மாறி, ‘எச்சிமோசிஸ்' உருவாகின்றன.

நாசி எலும்பின் ரைனோபிளாஸ்டி அறுவை சிகிச்சைகள் சம்பந்தப்பட்ட ஒரு ஆய்வில், நோயாளிகளுக்கு ஆர்னிகா வாய்வழி மருந்தாக வழங்கப்பட்டது. இந்த நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கு பிந்தைய குணப்படுத்துதல், எச்சிமோசிஸின் விரைவான மீட்பு மற்றும் காயங்களின் வண்ணங்கள் இயல்புநிலைக்கு விரைவாக மாறுவது போன்ற நன்மைகள் நிகழ்ந்தன.

இத்தகைய வடுக்கள் மற்றும் காயங்களை குணப்படுத்துவதில் ஆர்னிகாவின் செயல்திறனை நிரூபிக்கின்றன. ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ரைனோபிளாஸ்டி அறுவை சிகிச்சைகள் மற்றும் ஆழமான காயங்களை குணப்படுத்த அதன் சூத்திரங்கள் பயன்படுத்தப்படலாம்.

4. முடி உதிர்தலை சமாளிக்க உதவலாம்:

4. முடி உதிர்தலை சமாளிக்க உதவலாம்:

அலோபீசியா என்னும் தலைமுடி வழுக்கை அல்லது பெண்களில் கடுமையான முடி உதிர்தல் மனச்சோர்வு மற்றும் நம்பிக்கையை இழப்பதற்கான மற்றொரு ஆதாரமாகும். இதுபோன்ற கடுமையான முடி உதிர்தலைச் சமாளிக்க அரோமாதெரபி உதவக்கூடும்.

மருத்துவ வழிகாட்டுதலின் கீழ் மருத்துவ தாவரங்களின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து அத்தியாவசிய எண்ணெய்களின் கலவையைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த தீர்வைத் தரும். ஆர்னிகா, துளசி, ரோஸ்மேரி, தைம் மற்றும் லாவெண்டர் போன்ற மூலிகைகள் உங்கள் உடலின் அதிவேக அமைப்பை குறி வைக்கின்றன.

இந்த எண்ணெய்கள் அவற்றின் ஆவியாகும் செயலில் உள்ள சேர்மங்களை நீங்கள் உள்ளிழுக்கும்போது அல்லது அவற்றை மேற்பூச்சு செய்யும் போது இரத்த ஓட்டத்தில் வெளியிடுகின்றன. இவற்றில் உள்ள தாவர ஊட்டச்சத்துகள் கூந்தலின் வேர்க்கால்களுக்கு இதமளித்து ஊக்குவிக்கின்றன. எனவே, முடி உதிர்தலைச் சமாளிக்க பாதுகாப்பான வழிகளில் அரோமாதெரபி ஒன்றாகும்.

ஆர்னிகாவின் பக்க விளைவுகள் என்ன?

ஆர்னிகாவின் பக்க விளைவுகள் என்ன?

* அதிக அளவு அல்லது அடிக்கடி ஆர்னிகா சாறு பயன்படுத்துவது தோல் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். உணர்திறன், சேதமடைந்த மற்றும் உடைந்த தோலில் பயன்படுத்தினால், தோல் அழற்சி, ஒவ்வாமை மற்றும் தொடர்புடைய அறிகுறிகள் பதிவாகியுள்ளன.

* இந்த வாய்வழி மருந்தை அதிகமாக உட்கொள்வது இரைப்பை குடல் அழற்சியை ஏற்படுத்தக்கூடும்.

* கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ஆர்னிகாவின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பை நிரூபிக்க ஆதாரங்கள் போதுமானதாக இல்லை.

* மருத்துவ மேற்பார்வையின் கீழ் இதை எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும்.

முடிவுரை

முடிவுரை

ஆர்னிகா மொன்டானா மருத்துவம் மற்றும் ஒப்பனை மற்றும் உணவுத் தொழில்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்த மூலிகை மூட்டு வலிகள், காயங்கள், வீக்கம், முடி உதிர்தல், மூல நோய் மற்றும் சுளுக்கு போன்றவற்றிற்கு ஒரு சிறந்த தீர்வாக கூறப்படுகிறது.

முரண்பாடாக, அதிக அளவு எடுத்துக் கொண்டால் அது விஷமாகக் கருதப்படுகிறது. நீங்கள் அதன் எண்ணெய், கஷாயம், மாத்திரைகள், ஜெல் மற்றும் களிம்புகளை முயற்சி செய்யலாம், ஆனால் மருத்துவ மேற்பார்வையின் கீழ் மட்டுமே.

இந்தப் பதிவு உங்களுக்கு சிறந்த தகவலாக இருக்கும் என்று நம்புகிறோம். இதனைப் பற்றிய கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Answer To Your Aching Joints! Benefits, Mechanisms, And Side Effects

What is a potion in a spoonful could be poison if it's a handful. This principle holds particularly for medicine, more so in herbal medicine where diluted plant extracts are used to heal deadly diseases.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more