Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
குளிர்காலத்துல மூட்டு வலியால அவதிப்படுறீங்களா? அப்ப இத சாப்பிடுங்க... உடனே சரியாகிடும்!
கீல்வாதத்திற்கு உணவு சிகிச்சை இல்லை என்றாலும், சில உணவுகளை சாப்பிடுவது எலும்புகளை வலுப்படுத்துவதோடு உங்கள் மூட்டுகளில் வீக்கத்தையும் குறைக்க உதவும்.
பெரும்பலும் வயதாகும்போது, நம் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். நம் உடல் இயக்கங்கள் சரியாக செயல்பாடாதபோது, தேய்மானம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது ஆகியவற்றால் இளைஞர்களுக்கும் மூட்டு மற்றும் எலும்பு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் மூட்டு மற்றும் எலும்பு வலியால் அவதிப்படுபகிறீர்களா? வயது, மூட்டுவலி, உடல்பருமன் அல்லது வேறு ஏதேனும் நிலை காரணமாக உங்களுக்கு இவை ஏற்படலாம். மேலும், குளிர்காலம் உங்கள் வலியை அதிகரிக்கச் செய்யும். மூட்டுவலியைக் கொண்டிருப்பவர்கள், உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தபடி தினசரி உடற்பயிற்சி செய்வது, உங்கள் தோரணையை மேம்படுத்துதல், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வது மற்றும் போதுமான ஓய்வு ஆகியவற்றை செய்வது அறிகுறிகளைப் போக்க உதவும்.

கீல்வாதத்திற்கு உணவு சிகிச்சை இல்லை என்றாலும், சில உணவுகளை சாப்பிடுவது எலும்புகளை வலுப்படுத்துவதோடு உங்கள் மூட்டுகளில் வீக்கத்தையும் குறைக்க உதவும். இதனால், நீங்கள் விரைவில் மூட்டுவலியில் இருந்து நிவாரணம் பெறலாம். அந்த சூப்பர்ஃபுட் என்னென்ன என்று இக்கட்டுரையில் காணலாம்.

கொழுப்பு நிறைந்த மீன்
சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன் வகைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளன. இது உங்களுக்கு அழற்சி எதிர்ப்பு பண்புகளை அளிக்கிறது மற்றும் மூட்டு வலியைப் போக்க உதவும். ஒமேகா -3 கொழுப்பு அமிலம் சப்ளிமெண்ட்ஸ் உங்கள் மூட்டு வலியின் தீவிரம், கால் விறைப்பு மற்றும் வலி மூட்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பூண்டு
பூண்டு மற்றும் வெங்காயம் போன்ற பிற வேர் காய்கறிகளில் டயல்ல் டைசல்பைடு உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு கலவை ஆகும். இது வீக்கத்தை எதிர்த்துப் போராடவும், வலியைக் குறைக்கவும் மற்றும் ஒட்டுமொத்த மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

இஞ்சி
இஞ்சியை புதிய அல்லது உலர்ந்த வடிவில் தொடர்ந்து உட்கொள்வது மூட்டு வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கும். நீங்கள் அதில் உங்கள் தினசரி தேநீர், கிரேவிகள் மற்றும் தேனுடன் கலக்கலாம் அல்லது ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குடிக்கலாம். இஞ்சி உடலில் வீக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்களின் உற்பத்தியைத் தடுக்கிறது.

நட்ஸ்கள் மற்றும் விதைகள்
நட்ஸ்கள் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அக்ரூட் பருப்புகள், பாதாம், ஆளி விதைகள், சியா விதைகள் மற்றும் பைன் நட்ஸ்கள் போன்ற நட்ஸ்கள் மற்றும் விதைகளின் சிறிய பகுதிகளை தொடர்ந்து சாப்பிடுவது மூட்டு வீக்கத்திலிருந்து உங்களுக்கு விரைவாக நிவாரணம் அளிக்கலாம்.

பழங்கள் மற்றும் பெர்ரி
ஆப்பிள், கிரான்பெர்ரி மற்றும் ஆப்ரிகாட் போன்ற பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.
அந்தோசயினின்கள் நிறைந்த செர்ரிகளை சாப்பிடுவது மூட்டுகள் மற்றும் தசைகளில் வீக்கத்தைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

எலும்பு குழம்பு
ஆட்டிறைச்சி அல்லது சிக்கன் எலும்பு குழம்பு குடிப்பதும் உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். எலும்பு வளர்ச்சிக்கு உதவும் குளுக்கோசமைன், காண்ட்ராய்டின் மற்றும் அமினோ அமிலங்கள் இதில் நிறைந்துள்ளன. சூடான எலும்பு குழம்பு தொடர்ந்து குடிப்பதால் மூட்டு வலியிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் ஒரு நிறைவுறா, ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் ஒமேகா -3 இன் மூலமாகும். ஆலிவ் எண்ணெயில் ஓலியோகாந்தல் உள்ளது, இது வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. முட்டைகளை சமைப்பது, சாலட்களில் பயன்படுத்துதல் போன்ற உணவுகளை சமைப்பதன் மூலம் தினமும் ஆலிவ் எண்ணெயை உங்கள் உணவில் சேர்க்கலாம்.



Click it and Unblock the Notifications
