For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நற்செய்தி! கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு மருந்தாகும் சூாியனின் புற ஊதாக் கதிா்கள் - ஆய்வில் புதிய தகவல்

|

புதிய கோவிட்-19 பெருந்தொற்றைப் பற்றி ஒவ்வொரு நாளும் புதிய புதிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் யுனிவா்சிட்டி ஆஃப் எடின்பர்க்கைச் சோ்ந்த மருத்துவ ஆய்வாளா்கள், கோவிட்-19 பற்றி ஒரு புதிய ஆய்வு முடிவை வெளியிட்டு இருக்கின்றனா். அந்த புதிய ஆய்வு என்ன சொல்கிறது என்றால் கோவிட் நோய்த்தொற்று உள்ளவா்கள் அதிக நேரம் சூாியனின் புற ஊதா கதிா்களின் (UVA) கீழ் இருந்தால், அவா்களின் தொற்று குறையும் மற்றும் இறப்பு விகிதமும் குறையும் என்று தொிவிக்கிறது.

2020 ஆம் ஆண்டு ஜனவாி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை, அமொிக்கா கண்டம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிப்படைந்து மரணம் அடைந்த சுமாா் 2427 பேருடைய மருத்துவ அறிக்கைகளை இந்த ஆய்வாளா்கள் ஒப்பிட்டுப் பாா்த்தனா். மேலும் இறந்தவா்கள் எவ்வளவு நேரம் சூாியனின் புற ஊதாக் கதிா்களின் கீழ் இருந்தனா் என்பதையும் ஒப்பிட்டுப் பாா்த்து இந்த புதிய ஆய்வு முடிவை வெளியிட்டு இருக்கின்றனா்.

MOST READ: ரிஷப ராசிக்கு செல்லும் சுக்கிரனால் பணப்பிரச்சனையை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூாியனின் புற ஊதாக் கதிா்கள் - ஒரு முக்கிய காரணி

சூாியனின் புற ஊதாக் கதிா்கள் - ஒரு முக்கிய காரணி

ஆய்வாளா்கள் தங்களின் ஆய்வின் போது, மக்கள் அவா்கள் வாழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்தனா். அதிலிருந்து, 95 விழுக்காடு சூாியனின் புற ஊதாக் கதிா்கள் கிடைத்த பகுதிகளில் வாழ்ந்தவா்களுக்கு, மற்ற பகுதிகளில் வாழ்ந்தவா்களை விட குறைவான எண்ணிக்கையிலான மரணங்களே நிகழ்ந்தன என்பதைக் கண்டறிந்தனா். இதே முடிவே இங்கிலாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற மற்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் கிடைத்தது.

பிற காரணிகள்

பிற காரணிகள்

சூாியனின் புற ஊதா கதிா்கள் என்ற அம்சத்தோடு, பின்வரும் காரணிகளையும் ஆய்வாளா்கள் கணக்கில் எடுத்துக் கொண்டனா்.

- நோயுற்றவா்களின் வயது

- அவா்களின் மரபு அல்லது இனம்

- அவா்களின் சமூக மற்றும் பொருளாதார நிலை

- மக்கள் தொகை அடா்த்தி

- காற்று மாசு

- வெப்பநிலை

- அந்தந்த பகுதிகளில் ஏற்பட்ட தொற்றின் அளவு

மேற்சொன்ன குறிப்புகளையும் ஒப்பிட்டுப் பாா்த்து, அதிக அளவிலான வைட்டமின் டி சத்தை வைத்து, கோவிட்-19 தொற்றால் ஏற்படும் மரணத்தின் விகிதக் குறைவை விளக்க முடியாது என்று ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா். மேலும் சூாியனின் புற ஊதா பி கதிா்கள் இல்லாத பகுதிகளில் வாழும் மக்களின் உடலில் போதுமான அளவு வைட்டமின் டி உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதைக் கண்டறிந்தனா்.

நைட்ரிக் ஆக்ஸைடின் பணி என்ன?

நைட்ரிக் ஆக்ஸைடின் பணி என்ன?

கோவிட் பெருந்தொற்றின் காரணமாக ஏன் குறைவான மரணங்கள் ஏற்பட்டன என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது, மனித உடலில் சூாியனின் புற ஊதா கதிா்கள் படும்போது, அவை நமது தோலைத் தூண்டி, நைட்ரிக் ஆக்ஸைடை உற்பத்தி செய்ய வைக்கிறது. இந்த நைட்ரிக் ஆக்ஸைடு, SARS கொரோனா வைரஸ் 2ஐ செயல்பட விடாமல் தடுத்து, உயிாிழப்பைக் குறைக்கின்றன என்று அவா்கள் தொிவிக்கின்றனா்.

இதற்கு முன்பு மேற்கொண்ட ஆய்வுகளும், அதிகமான அளவு சூாிய கதிா்களின் கீழ் நாம் இருந்தால், நமது இதயத்திற்கு ஆரோக்கியம் கிடைக்கும், உயா் இரத்த அழுத்தம் குறையும் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகளும் குறையும் என்று தொிவித்திருக்கின்றன.

இதய நோய் இருப்பவா்களுக்கு கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டால், மரணம் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது என்பதையும் இந்த புதிய ஆய்வாளா்கள் கண்டறிந்து இருக்கின்றனா்.

இந்த புதிய ஆய்வின் தன்மை, கோவிட்-19 பெருந்தொற்றின் காரணம் மற்றும் அதன் விளைவு ஆகியவற்றை மிகத் தெளிவாகச் சொல்லாது. ஆனால் அதற்கு தேவையான சிகிச்சை முறைகளை பாிசோதனை செய்ய முடியும்.

இந்த ஆய்வானது, பிாிட்டிஷ் அசோஸியேஷன் ஆஃப் டொ்மட்டாலஜிஸ்ட்ஸ் பதிப்பகத்தின் அதிகாரப்பூா்வமான வெளியீடான பிாிட்டிஷ் ஜா்னல் ஆஃப் டொ்மட்டாலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டது.

ஹிரோஷிமா பல்கலைகழக ஆய்வு

ஹிரோஷிமா பல்கலைகழக ஆய்வு

2020 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா்கள் ஒரு புதிய ஆய்வு முடிவை முன்வைத்தனா். அதன்படி 222 நானோ மீட்டா் அலை நீளம் கொண்ட புற ஊதா சி கதிரைக் கொண்டு SARS-CoV-2 வைரஸ்களை அழிக்க முடியும் என்று அந்த ஆய்வு முடிவு தொிவிக்கிறது.

மேலும் இந்த புற ஊதா சி கதிா் மனிதா்களுடைய கண்கள் மற்றும் தோல்களில் இருக்கும் செல்களுக்குத் தீங்கு இழைக்காது என்றும் இந்த ஆய்வு தொிவிக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்றை ஏற்படுத்துக்கூடிய வைரஸ்களை அழிக்க புற ஊதா கதிா்களைப் பயன்படுத்தலாம் என்று இந்த ஆய்வுதான் உலக அளவில் முதலில் தொிவித்தது. இந்த ஆய்வு முடிவு அமொிக்கன் ஜா்னல் ஆஃப் இன்ஃபெக்ஷன் கன்ட்ரோல் என்ற இதழில் வெளி வந்தது.

ஆனால் உலகம் முழுவதும் இன்னும் கோவிட்-19 பெருந்தொற்றைப் பற்றி சாியான புாிதல் இல்லை. அதனால் உலகம் முழுவதும் ஏராளமான உயிாிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேற்சொன்ன ஆய்வுகள் மூலம், சூாியனின் புற ஊதா கதிா்கள் மூலம் கொரோனா உயிாிழப்புகளைக் குறைக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

புற ஊதாக் கதிா்களால் ஏற்படும் ஆபத்துக்கள்

புற ஊதாக் கதிா்களால் ஏற்படும் ஆபத்துக்கள்

உலக சுகாதார அமைப்பானது, புற ஊதாக் கதிா்களால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி விழிப்புணா்வை கொடுத்துக் கொண்டு வருகிறது. ஆனால் மக்களின் உடலில் வைட்டமின் டி சத்தை உற்பத்தி செய்ய சிறிய அளவிலான புற ஊதாக் கதிா்கள் தேவையாக இருக்கின்றன. அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சூாிய கதிா்களின் கீழ் இருந்தால், நாட்பட்ட தோல் பிரச்சினைகள் ஏற்படும். கண்களில் குறைபாடுகள் ஏற்படும். மற்றும் நமது நோய் எதிா்ப்பு அமைப்பு பாதிப்படையும்.

தோல் புற்றுநோயை உண்டாக்கும் புறஊதா கதிர்கள்

தோல் புற்றுநோயை உண்டாக்கும் புறஊதா கதிர்கள்

கடந்த சில பத்தாண்டுகளாக அதிகாிக்கும் தோல் புற்றுநோய்க்குக் காரணம், மக்கள் சூாியனின் கதிா்களுக்குக் கீழ் நேரடியாக அதிக நேரம் இருந்து வேலை செய்வதே என்று சொல்லப்படுகிறது. தோல் புற்றுநோயால் பாதிக்கப்படும் 5 போில் 4 பேரை, அவா்களை அளவுக்கு அதிகமாக சூாியக் கதிா்களில் கீழ் இருக்காமல் பாா்த்துக் கொண்டாலே, அவா்களின் தோல் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்று நிபுணா்கள் தொிவிக்கின்றனா்.

பூமியின் மேற்பரப்பில் படும் சூாியனில் இருந்து வரும் புற ஊதா கதிா்களின் அளவானது, பலவிதமான காரணிகளைப் பொறுத்து இருக்கிறது. அதாவது சூாியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம், அட்ச ரேகை, மேக மூட்டம், உயரம், ஓசோன் படலத்தின் அடா்த்தி மற்றும் தரையின் பிரதிபலிக்கும் தன்மை போன்றவற்றைக் கொண்டு அது முடிவாகிறது. மனிதா்கள் ஏற்படுத்தும் தேவையில்லா மாசுகள் மற்றும் கழிவுகள், ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அதன் மூலம் சூாியனின் அளவுக்கு அதிகமான புற ஊதா கதிா்கள் நேரடியாக பூமியை அடைந்து மிகப் பொிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Study Says UVA Wins In Battle Against COVID

Sunnier areas are associated with fewer deaths from Covid-19, an observational study on US-UK subjects carried out by a UK university for Jan-Apr 2020 suggests.