For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க உடல் எடையை ஈஸியாக குறைக்க வீட்டில் இருக்கும் இந்த புளிப்பு உணவுகளே போதுமாம்…!

ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய எலுமிச்சை எடை இழப்பை ஊக்குவிக்க உதவும் மிகவும் பயனுள்ள பழங்களில் ஒன்றாகும்.

|

இன்றைய தலைமுறையில் மிகவும் முக்கிய பிரச்சனை உடல் பருமந்தான். நம்முடைய வாழ்க்கை முறையும், உணவு பழக்க வழக்கமும் மாறுபட உடல் இயக்கங்களும் மாறுபடுகிறது. இதனால் உடல் எடையின் அளவு அதிகரிக்கிறது. உடல் எடை அதிகரிக்கும்போது, அது பல்வேறு பிரச்சனைகளை உடலில் ஏற்படுத்துகிறது. உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று புலம்புபவர்கள் நிறைய பேரை நாம் பார்த்துக்கிறோம். எடை இழப்பை ஊக்குவிக்க உதவும் பல வழிமுறைகள் இங்கு இருக்கின்றன.

sour-foods-for-weight-loss

பயிற்சிகள் முதல் சப்ளிமெண்ட்ஸ் உணவுகள் வரை இந்த பட்டியல் ஒருபோதும் முடிவடையாது. தற்போதைய இந்தக் கட்டுரையில், எடை இழப்பை ஊக்குவிக்க உதவும் மிகவும் பயனுள்ள சில உணவுகளை ஆராய்வதில் கவனம் செலுத்துவோம். ஆரோக்கியமான எடை இழப்பை அதிகரிக்க இந்த புளிப்பு சுவை கொண்ட உணவுகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை

எலுமிச்சை

ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய எலுமிச்சை எடை இழப்பை ஊக்குவிக்க உதவும் மிகவும் பயனுள்ள பழங்களில் ஒன்றாகும். எலுமிச்சை நீர் உங்களை புத்துணர்ச்சி பெற ஊக்குவிக்கும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் எடை இழப்பை அதிகரிக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.

MOST READ: காதலர் தின ஸ்பெஷல்: முத்த உரையாடலும் மோகம் கொண்ட முடிவில்லா காதலும் உன்னை நோக்கியே...!

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சு பழம் பூஜ்ஜிய கொழுப்பைக் கொண்டுள்ளது மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் வளமான மூலமாகவும் இருக்கிறது. இது சிறந்த எடை இழப்பை உங்களுக்கு வழங்கும். 100 கிராம் ஆரஞ்சு பழத்தில் 47 கலோரிகளை வழங்குகிறது. மேலும் இது உங்கள் உடலுக்குத் தேவையானதை விட குறைவான கலோரிகளைக் கொண்டிருப்பதால் எதிர்மறை கலோரி பழம் என்று அழைக்கப்படுகிறது. ஆரஞ்சு பழங்கள் உடல் எடை இழப்பை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

புளி

புளி

புளிப்பு பழத்தில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட பாலிபினால்கள் உள்ளன. அவை சில நோய்களைத் தடுக்க உதவுகிறன. வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த புளிப்பு உணவு வாரத்திற்கு ஒரு முறை உட்கொண்டால் உங்கள் எடை குறையும். கொழுப்பை குறைக்க உதவும் கறியில் புளியை சேர்த்து உண்ணலாம். புளி ஹைட்ராக்சிசிட்ரிக் அமிலம் (எச்.சி.ஏ) கொண்டிருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இது எடை இழப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது உடலில் நொதியைத் தடுக்கிறது.

தயிர்

தயிர்

கொழுப்பு இல்லாத தயிரில் புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் புரோபயாடிக்குகள் அதிகம் உள்ளன. இவை அனைத்தும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. தினமும் கொழுப்பு இல்லாத தயிரை உட்கொண்டால், அது வயிற்றுப் பகுதியில் கொழுப்பை இழக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்கள் மிகவும் பசியுடன் இருந்தால், தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது வீக்கத்தை ஏற்படுத்தும்.

MOST READ: ஆப்பிளை இந்த மாதிரி உங்க உணவில் சேர்த்துக் கொண்டால் உங்க ஆயுள் அதிகரிக்குமாம்...!

தக்காளி

தக்காளி

தக்காளி உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது ஆச்சரியமாகத் தோன்றினாலும், தக்காளி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு உள்ளடக்கத்திலிருந்து விடுபடுவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவும். தக்காளி லெப்டின் எதிர்ப்பை மாற்றியமைக்க உதவுகிறது. இது ஒரு வகை புரதமாகும். இது வளர்சிதை மாற்ற விகிதம் மற்றும் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

மாங்காய்

மாங்காய்

ஆரோக்கியமான எடை இழப்பை ஊக்குவிக்க உதவும் சிறந்த உணவுகளில் ஒன்று மாங்காய். இந்த பழம் இயற்கையாகவே உடல் எடையை குறைக்க உதவும். மாங்காயை சாப்பிடுவது எடை இழப்பை ஊக்குவிக்க உதவும். ஏனெனில் பழம் உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் செரிமானத்தையும் மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது ஆரோக்கியமான எடை இழப்பை மேம்படுத்துகிறது.

அன்னாசி பழம்

அன்னாசி பழம்

அன்னாசிப்பழத்தில் அதிக அளவு ப்ரொமைலின் அமிலம் உள்ளது. இந்த பழத்தை நீங்கள் சாப்பிட்ட பிறகு பழம் செரிமானவுடன் கொழுப்பை எரிக்கிறது. இது தவிர, பழத்தில் நல்ல நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், குறைவாக சாப்பிடவும் உதவுகிறது. மேலும், இது உங்களை முழுமையாக உணர வைக்கிறது.

MOST READ:சிறிய பிரச்சனை என்று நீங்க நினைக்கும் இந்த அறிகுறிகள் உங்க உயிருக்கே ஆபத்தாய் மாறலாம்...!

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

ஹைப்போலிபிடெமிக் தன்மை காரணமாக எடை இழப்புக்கு நெல்லிக்காய் மிகவும் சிறந்தது. நெல்லிக்காய் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்தவும் மேம்படுத்தவும் உடல் பருமனைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் உடல் பருமனான நபர்களின் எடை இழப்பை ஊக்குவிக்கவும் இது உதவுகிறது. மேற்கூறியவற்றைத் தவிர, புளித்த காய்கறிகளும் எடை இழப்புக்கு ஒரு நல்ல வழி. இந்த புளிப்பு உணவுகளில் அமிலங்கள் இருப்பதால், இது கலோரிகளை விரைவாக எரிக்கிறது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

இந்த புளிப்பு உணவுகள் எடை இழப்பை ஊக்குவிக்க உதவும் அதே வேளையில், புளிப்பு உணவுகளை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது குளிர் மற்றும் இருமலை அதிகரிக்கும். தவிர, புளிப்பு உணவுகள் இரவில் உங்கள் எடை இழப்பை தடுக்கக்கூடும். ஏனெனில் இது தண்ணீரைத் தக்கவைக்கும். மேலும், இந்த உணவுகளை மட்டும் உட்கொள்வது எடை இழப்பை ஊக்குவிக்க உதவாது அல்லது ஆரோக்கியமாக இருக்காது. எப்போதும், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி முறையைப் பின்பற்றுவதும் மிகவும் முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sour foods for weight loss

Here we are talking about the sour foods for weight loss
Story first published: Thursday, February 13, 2020, 18:43 [IST]
Desktop Bottom Promotion