For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகள் தென்பட்டால் உங்களை நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்று அர்த்தமாம்...!

|

நம்மில் நிறைய பேர் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை நடத்திக் கொண்டு இருக்கிறோம் என்று நினைப்போம். ஆனால் உண்மையில் நமக்கே தெரியாமல் உடல் சில அறிகுறிகளை காட்டுகிறது. இந்த அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் உங்களை சரியாக கவனிக்கவில்லை என்று அர்த்தமாம்.

நம் உடம்பு நம்மளைப் பற்று கூறும் அறிகுறிகளை மருத்துவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இப்போது அது குறித்து காண்போமா...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூளையின் கவனச் சிதறல்

மூளையின் கவனச் சிதறல்

இருதய நோய் நிபுணர் மற்றும் செயல்பாட்டு மருத்துவ நிபுணரான மார்ட்டின் ஜி. ப்ளூம் மூளையின் கவனச் சிதறல் பற்றி கூறுகையில். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மூளையில் அறிவாற்றல் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்கிறார். எப்படி பெண்களுக்கு ஏற்படும் மன குறைபாடுகள் செயல்படாத தைராய்டு பிரச்சனையை காட்டுகிறதோ, அதே போல் மூளையில் கவனச் சிதறலும் ஹார்மோன் சமநிலையின்மையை குறிக்கிறது. எனவே இதற்கு நீங்கள் இரத்த பரிசோதனை, தைராய்டு பரிசோதனை செய்தால் மட்டும் போதாது. தைராய்டு ஆன்டிபாடிகளையும் பரிசோதித்து. மூளை கவனச் சிதறலுக்கு என்ன காரணம் எனக் கண்டறிய வேண்டும் என்கிறார் அவர்.

ஆண்கள் மற்றும் பெண்களின் குடலில் வாழும் பாக்டீரியாக்கள் காரணமாகக் கூட கவனச் சிதறல் ஏற்படுமாம். ஏனெனில் உங்கள் குடலியக்கம் என்பது மூளையுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே உங்கள் உணவு முறையை மேம்படுத்துவது உங்களுக்கு சிந்தனையில் தெளிவையும் செறிவையும் தரும். குடலில் கெட்ட பாக்டீரியாக்கள் தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

"நிறைய பேருக்கு இந்த விஷயம் தெரிவதில்லை. ஒரு ஆரோக்கியமான குடல் தான் அவர்களின் அறிவாற்றல் திறனை நிர்ணயிக்கிறது. ஆரோக்கியமான குடலியக்கம் பெற்றவர்கள் கவனத்தை சரியாக செலுத்தவும், விஷயங்களை நினைவில் கொள்ளவும் முடிகிறது. அவர்கள் புத்திசாலித்தனத்துடனும், விரைவாக செயல்படுவதாகவும், ஸ்மார்ட் ஆக இருப்பதாகவும் டாக்டர் ப்ளூம் கூறுகிறார். எனவே நீங்கள் புரோபயாடிக் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, அவை குடலில் வாழும் பாக்டீரியாக்களை சமநிலைபடுத்த உதவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

MOST READ: ஒரு மாதத்தில் இறக்கப் போகிறீர்கள் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

உடலுறவில் ஆர்வம் குறைவு

உடலுறவில் ஆர்வம் குறைவு

சில பேர் உடலுறவில் ஆர்வம் இல்லாமலேயே பெற்றோர்களின் சம்மதம் பேரில் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு உடலுறவில் ஆர்வம் இல்லாமல் இருக்கும். சில பேருக்கு ஆண்மை பிரச்சனைகள் ஏற்படும். இந்த மாதிரி அறிகுறிகள் தென்பட்டால் உடனே உங்கள் டெஸ்டோஸ்டிரோன், எஸ்ட்ராடியோல், எஸ்டிரியோல், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் பல ஹார்மோன் பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது. ஹார்மோன் சமநிலையின்மை நமக்கு சோர்வு, மன அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு மற்றும் இதய பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே நீங்கள் ஹார்மோன் பரிசோதனை செய்து கொண்டால் 99 சதவீதம் அதற்கான மூலகாரணத்தை கண்டறிந்து களைய முடியும் என்கிறார் டாக்டர் ப்ளூம்.

மன அழுத்தம் தென்படும்

மன அழுத்தம் தென்படும்

வேலை, குடும்பம், உறவுகள் குறித்த மன அழுத்தம் இருந்தால் அது உங்கள் ஆரோக்கியத்தை அழிக்கக் கூடும். இதற்கு காரணம் நமது உடலில் சுரக்கும் கார்டிசோல் என்ற ஹார்மோன் சுரப்பு தான். மன அழுத்தத்தை அதிகரித்து மனதை போட்டு அரிக்க ஆரம்பித்து விடும் என்கிறார் டாக்டர் ப்ளூம்.

இந்த கார்டிசோல் ஹார்மோன் அளவு சமநிலையின்மையுடன், அதிகரித்து காணப்படுவதால் மனநிலையில் மாற்றம், கவலை, மன அழுத்தம், மோசமான அறிவாற்றல் போன்ற பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.உயர் கார்டிசோல் உடலில் கொழுப்பு மற்றும் வீக்கத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால் தன்னம்பிக்கை குறைவு, விரக்தி மற்றும் ஆற்றல் குறைவு, ஒட்டுமொத்த நல்வாழ்வை குறைக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்த மாதிரியான மன அழுத்த பிரச்சினைக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் கார்டிசோல் ஹார்மோனை சமநிலைப்படுத்த முடியும். மன அழுத்தம் என்பது சரியான ஆதரவுடன் சரி செய்யப் படக்கூடிய விஷயமாகும். அப்படி செய்கையில் மன அழுத்தம் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு மேம்படும்.

MOST READ: பீர் குடித்த 24 மணிநேரத்தில் உடலினுள் என்னலாம் நடக்கும் தெரியுமா?

தூக்க பிரச்சனை

தூக்க பிரச்சனை

உடற்பயிற்சி செய்வது, நல்ல உணவுப் பழக்கம் இவையிரண்டும் உங்களுக்கு ஆரோக்கியமான தூக்கத்தை இரவில் தரும். இப்படி இல்லாத சமயத்தில் நீங்கள் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது என டாக்டர் ப்ளூம் அறிவுறுத்துகிறார். இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுவது, மூச்சு வாங்குவது போன்றவை உங்கள் உயர் இரத்த அழுத்தம், எடை அதிகரிப்பு மற்றும் இதய நோய்கள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.

எனவே நல்ல தூக்கம் உங்களுக்கு அந்த நாள் கடிகாரத்தை மீட்டமைக்க உதவுகிறது. அதாவது நேரத்தை புத்துணர்வாக்குகிறது என்று டாக்டர் ப்ளூம் கூறுகிறார். சில சமயங்களில் வயதாகும் போது ஹார்மோன் சமநிலை பிரச்சினையால் டோமினோ விளைவு ஏற்படுகிறது. இதனால் மோசமான தூக்கம் உண்டாகிறது. எனவே உங்களுக்கான தூக்க நேரத்தை சரியாக வரையறுத்து கொள்ளுங்கள். சில உடல் பரிசோதனைகள் செய்து தூக்க பிரச்சினைக்கு முடிவு கட்ட முற்படலாம்.

கால் தசைகளில் ஏற்படும் இழுப்பு

கால் தசைகளில் ஏற்படும் இழுப்பு

நம்மில் பொரும்பாலானோர் வாழ்வின் பெரும்பகுதியை டிவி முன்னாலும், மொபைல் முன்னாலும் தான் கழிக்கிறோம்.இப்படி ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்து இருப்பது கால் பிடிப்பு மற்றும் தசை பிடிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இது குறித்து கரில்லான் மியாமி வெல்னஸ் ரிசார்ட்டின் மருத்துவ இயக்குனர், அடோனிஸ் மைக்கேஸ், எம்.டி., கூறுகையில் உங்கள் தசைகளில் அடிக்கடி ஏற்படும் பிடிப்புகள் குறைந்த மெக்னீசியம் அளவைக் குறிக்கும் என்று எச்சரிக்கிறார்.

இதை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டால் ஹார்ட் அட்டாக் அல்லது இதயம் செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த பிரச்சினையை சரி செய்ய நீங்கள் பாதாம், பூசணி விதைகள் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்கள் மருத்துவரை அணுகி அதற்கான விட்டமின்கள் மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

MOST READ: ஒரு ஆணுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!

கை மற்றும் கால்கள் சுருக்கென்று குத்துவது, கூச்சமடைவது

கை மற்றும் கால்கள் சுருக்கென்று குத்துவது, கூச்சமடைவது

சிலருக்கு அடிக்கடி கை மற்றும் கால்கள் கரண்ட் அடிச்ச மாதிரி விர்னு பிடிக்கும். இதற்கு காரணம் விட்டமின் பி12 குறைபாடு தான் என்கிறார் டாக்டர் அடினோஸ். இதற்கு சிகச்சை அளிக்கா விட்டால் உங்களுக்கு அனிமியா (இரத்த சோகை) பிரச்சனை ஏற்படலாம். ஏன் சில சந்தர்ப்பங்களில் நரம்பியல் நோய்கள் கூட ஏற்படலாம்.

எனவே இந்த பிரச்சினையை சரி செய்ய நீல பச்சை ஆல்கா, முட்டை, பால் நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சைவம் சாப்பிடுபவர்கள் இந்த பி12 பற்றாக்குறையை போக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பி12 மாத்திரைகளைக் கூட எடுத்துக் கொண்டு வரலாம்.

வறண்ட சருமம்

வறண்ட சருமம்

குளிர்காலம் வந்தாலே வறண்ட சருமம் நமக்கு ஒரு கவலையாக இருக்கும். சிலருக்கு தோல் கள் உரிந்து செதில் செதிலாக வர ஆரம்பித்து விடும். இதற்கு காரணம் உங்கள் கொழுப்பு அமில குறைப்பாட்டினால் ஏற்படுகிறது என்கிறார் மருத்துவ ஆராய்ச்சி இயக்குனர் ஜோசுவா ஜீச்னர் .

எனவே உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சரைசர் பயன்படுத்தி வாருங்கள். இதே மாதிரி உங்கள் உணவுப் பழக்கத்தில் நல்ல கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவகேடா, வால்நட்ஸ், ஆலிவ் மற்றும் பல.

MOST READ: இந்த பொருட்கள் ஆண்களின் ஆண்மைத்தன்மையை அழிக்கும் என்று தெரியுமா?

முகப்பருக்கள்

முகப்பருக்கள்

முகப்பரு பெரும்பாலும் மரபணு மற்றும் ஹார்மோன் நிலை என்றாலும் நியூயார்க் நகரத்தில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் தோல் மருத்துவத்தில் அழகு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இயக்குனர் ஜோசுவா ஜீச்னர் இது குறித்து கூறுகையில் முகப்பரு வர மன அழுத்தமும் ஒரு காரணமாகிறது என்கிறார்.

நாம் தூங்கும் போது கார்டிசோலின் அளவு இயற்கையாகவே குறையும். இதுவே நீங்கள் அதிக சர்க்கரை உணவுகள், ஸ்டார்ச் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு அலற்சி உண்டாகிறது. நீங்கள் பசுவின் பாலை விட ஸ்கிம்டு பாலை எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார் ஜீச்னர். இல்லையென்றால் முகப்பருக்கள் விரிவடைய இது தொடர்புடையதாக உள்ளது.

MOST READ: ரொம்ப பலவீனமா இருக்குற மாதிரி உணருறீங்களா? இத ஃபாலோ பண்ணுங்க சரியாயிடும்...

மதிய வேளைகளில் எப்பொழுதும் சோர்வு ஏற்படுதல்

மதிய வேளைகளில் எப்பொழுதும் சோர்வு ஏற்படுதல்

தொடர்ந்து மதிய வேளையில் உங்களுக்கு சோர்வோ அல்லது தூக்க கலக்கமோ ஏற்பட்டால் நீங்கள் மதிய உணவு நேரத்தில் தவறான உணவுகளை எடுத்துள்ளீர்கள். இதனால் இரவு உணவை உங்களால் சரியாக சாப்பிட இயலாது. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், பீஸ்ஸா, சாண்ட்விச்கள் அல்லது பிற ரொட்டி சார்ந்த உணவுகள் போன்றவை உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்து சில மணிநேரங்களுக்குப் பிறகு உங்களை செயலிழக்கச் செய்யும் என்று மருத்துவர் டானியா டெம்ப்சே, எம். டி விளக்குகிறார்.

அதே மாதிரி குறைந்த சர்க்கரை அளவு ஹைப்போக்ளைசீமாவை ஏற்படுத்தி சோர்வை யும், தூக்கத்தையும் வரவழைக்கும். உடனே நீங்கள் காபி, டீ போன்றவற்றை நாடுவீர்கள். ஆனால் அப்படி செய்வதை தடுத்து உங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க புரதம், கொழுப்பு, நார்ச்சத்து அதிகமான காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும் என்கிறார் அவர்.

இந்த மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் உடலுக்கு கூடுதல் பராமரிப்பு அவசியம். எனவே உடலின் மொழியை புரிந்து கொண்டு செயலாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Silent Signs You’re Not Taking Good Care of Yourself

Here are some silent signs that you are not taking good care of yourself. Read on...