Latest Updates
-
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. -
'இனிப்புகளின் ராஜா' என்று அழைக்கப்படும் ஸ்வீட் எது தெரியுமா? எதுனா சொன்ன நம்பவே மாட்டிங்க -
ஆண்கள் இறுக்கமான உள்ளாடை அணிந்தால் உண்மையில் விந்தணு பாதிக்கப்படுமா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க.. -
பச்சை மிளகாயை வைச்சு இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா நச்சுனு இருக்கும் -
Vijayadashami 2026: விஜய தசமியில் இந்த பொருட்களை வாங்குங்க.. ஆண்டு முழுவதும் வீடு செல்வ செழிப்போடு இருக்கும்!
அதிகமாக பசிக்குதா? அப்ப இந்த முக்கியமான ஊட்டச்சத்து உங்க உடலில் ரொம்ப குறைவாக இருக்காம்... ஜாக்கிரதை!
புரதம் என்பது அமினோ அமிலங்களால் ஆன ஒரு மேக்ரோநியூட்ரியண்ட் ஆகும். இது உங்கள் உடலுக்கு இன்றியமையாதது மற்றும் பெரும்பாலும் தசைகளுக்கான கட்டுமானத் தொகுதிகள் என்று அழைக்கப்படுகிறது. புரோட்டின்கள் தசைகளின் பழுது மற்றும் பராமரிப்பிற்கு இன்றியமையாதது மட்டுமல்லாமல், உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துகிறது. மேலும், இது இரசாயன எதிர்வினைகளை துரிதப்படுத்தும் என்சைம்களாக செயல்படுகிறது, செல் சவ்வுகள் முழுவதும் பொருட்கள் செல்வதை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் நோய்களுக்கு எதிராக பாதுகாக்கிறது.

ஆய்வுகளின் படி, சராசரியாக உட்கார்ந்த வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் வயது வந்தவருக்கு புரோட்டின் குறைபாட்டைத் தடுக்க பரிந்துரைக்கப்பட்ட புரோட்டின் அளவு ஒரு கிலோ உடல் எடையில் 0.8 கிராம் ஆகும். இருப்பினும், பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் உங்கள் உடலில் புரோட்டின் குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம். உங்கள் புரோட்டின் உட்கொள்ளலை உடனடியாக அதிகரிக்க வேண்டும்.

பலவீனம், தசைஇழப்பு மற்றும் சோர்வு
உங்கள் உணவில் புரதம் இல்லாமல் இருந்தால் பலவீனம், சோர்வு மற்றும் தசை இழப்பு ஏற்படலாம். ஏனென்றால், உடலில் புரதம் குறைவாக இருக்கும்போது, எலும்பு தசைகளிலிருந்து உடல் தனது புரதத் தேவையை பூர்த்தி செய்கிறது. காலப்போக்கில், இது தசை இழப்புக்கு வழிவகுக்கிறது, இது உங்கள் வலிமையை குறைக்கிறது மற்றும் உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் குறைக்கிறது. எனவே பலவீனம் மற்றும் சோர்வு ஏற்படுகிறது.

காயங்கள் மெதுவாக குணமடைவது
நீங்கள் சமீபத்தில் விபத்தால் அல்லது தீவிர பயிற்சியால் காயம் அடைந்திருந்தால் அல்லது அறுவை சிகிச்சை செய்து அதிலிருந்து மீண்டு வருகிறீர்கள் என்றால், உங்கள் உடலில் புரோட்டின் குறைபாடு இருந்தால் அது குணப்படுத்தும் செயல்முறையை மெதுவாக்கும். புதிய செல்கள் மீண்டும் உருவாக்க பல ஆண்டுகள் ஆகலாம், இதனால் காயங்கள் குணமடைய நீண்ட காலம் தேவைப்படும்.

அதிக பசி
நீங்கள் எப்போதும் பசியாக உணர்ந்தால், உணவுக்காக ஏங்கினால் அல்லது சிற்றுண்டிகளை அதிகமாக சாப்பிடுவதைக் கண்டால், அது புரதக் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். புரோட்டின் மிகவும் திருப்திகரமான மேக்ரோநியூட்ரியண்ட் ஆகும், இது உங்களை நீண்ட காலத்திற்கு முழுமையாக வைத்திருக்கும். எனவே உங்களிடம் புரதக் குறைபாடு இருக்கும்போது, பசியின்மை உங்களை கடுமையாக தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

நோயெதிர்ப்பு பலவீனமாக மாறுவது
புரதச் சத்து குறைபாடு உங்களை பல நோய்களுக்கு ஆளாக்கலாம். உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு புரதம் இன்றியமையாதது மற்றும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிடம் இருந்து உங்களை பாதுகாக்க தேவையான ஊக்கத்தை அளிக்கிறது. மேலும், நோயெதிர்ப்பு செல்கள் அமினோ அமிலங்களால் ஆனவை, அவை அடிப்படையில் ஒரு புரதமாகும். அதாவது, உங்கள் புரத உட்கொள்ளலை அதிகரித்து உங்களை வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களிடம் இருந்து தப்பிக்கலாம்.

முடி மற்றும் நகத்தில் பிரச்சினைகள்
பலவீனமான, உடையக்கூடிய நகங்கள், வறண்ட சருமம் மற்றும் முடி உதிர்தல் ஆகியவை உடலில் குறைந்த புரத அளவுகளின் பிற ஆரம்ப அறிகுறிகளாகும். நமது தோல், முடி மற்றும் நகங்கள் எலாஸ்டின், கொலாஜன் மற்றும் கெரட்டின் போன்ற சில வகையான புரதங்களால் ஆனது. நமது முடி, தோல், நகங்கள் போன்றவற்றில் புரதச்சத்து குறைபாட்டால் பலவீனமாகலாம்.



Click it and Unblock the Notifications
