For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கு இந்த மாத்திரை அதிகமாக சாப்பிடுவதுதான் காரணமாம்…!

அதிக அளவு வைட்டமின் டி இருப்பது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். வைட்டமின் டி அதிக அளவு இருந்தால், அது இரத்தத்தில் கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது.

|

எந்தவொரு உணவையும், மருந்தையும் அளவோடு எடுத்துக்கொள்வது நம் உடலுக்கு நன்மையளிக்கிறது. அதை அளவுக்கு அதிகமாக நாம் எடுத்துக்கொள்ளும்போது, அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வைட்டமின் டி வழங்குகிறது. வைட்டமின் டி என்பது தசை, இதயம், நுரையீரல் மற்றும் மூளையின் சரியான செயல்பாட்டிற்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இந்த வைட்டமின் உங்கள் உடல் எலும்புகள் உருவாகத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை உறிஞ்ச உதவுகிறது.

side-effects-of-vitamin-d

உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் மூலம் வைட்டமின் டி உட்கொள்வது உடல் எடையை குறைத்தல், எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாத்தல், மனச்சோர்வைக் குறைத்தல், இதய நோய்களிலிருந்து பாதுகாத்தல் போன்ற பல வழிகளில் உங்கள் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கிறது. ஆனால், வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வது உங்கள் உடலுக்கு பல தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹைபர் கால்சீமியா

ஹைபர் கால்சீமியா

வைட்டமின் டி மாத்திரை அதிகமாக எடுத்துக்கொள்வது ஹைபர் கால்சீமியாவுக்கு வழிவகுக்கிறது. இது உங்கள் இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாக இருக்கும்போது ஏற்படும். அதிக அளவு வைட்டமின் டி உங்கள் உடல் உறிஞ்சும் கால்சியத்தின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. மேலும் இது பசியின்மை, குழப்பம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தும். இதன் அறிகுறிகள் மார்பு வலி, உயர் இரத்த அழுத்தம், எரிச்சல் மற்றும் பதட்டம் ஆகியவை ஆகும்.

MOST READ:உங்க பசி மற்றும் உடல் எடையை குறைக்க இந்த ஆரோக்கியமான திண்பண்டங்களை சாப்பிடுங்க போதும்...!

சிறுநீரக பாதிப்பு

சிறுநீரக பாதிப்பு

அதிக அளவு வைட்டமின் டி இருப்பது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். வைட்டமின் டி அதிக அளவு இருந்தால், அது இரத்தத்தில் கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது. இது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கிறது. வைட்டமின் டி நச்சுத்தன்மை கடுமையான சிறுநீரக பாதிப்பிற்கு வழிவகுக்கும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி அல்லது கடுமையான வயிற்று வலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

பலவீனமான எலும்புகள்

பலவீனமான எலும்புகள்

அதிக அளவு வைட்டமின் டி எலும்பு இழப்பு மற்றும் வலுவிழந்து உடையக்கூடிய எலும்புகளை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், அதிக அளவு வைட்டமின் டி இரத்தத்தில் வைட்டமின் கே2 குறைவாக இருக்கும். வைட்டமின் கே2-வின் முதன்மை செயல்பாடு எலும்புகளில் கால்சியத்தைப் பாதுகாப்பதும், வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வதும் வைட்டமின் கே2 இன் செயல்பாட்டைக் குறைக்கும். பலவீனமான எலும்புகளின் அறிகுறிகள் எலும்புகளில் அதிக வலி, கடுமையான முதுகு அல்லது மூட்டு வலி, எலும்பு முறிவுகளின் ஆபத்து மற்றும் உறுதியற்ற தன்மை ஆகியவை ஆகும்.

ஒழுங்கற்ற இதய துடிப்பு

ஒழுங்கற்ற இதய துடிப்பு

வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வது ஹைபர் கால்சீமியாவை ஏற்படுத்துகிறது. இதையொட்டி, இதயத்தின் உயிரணுக்களின் சரியான செயல்பாட்டை மாற்ற முடியும். இது ஒழுங்கற்ற இதய துடிப்புக்கு வழிவகுக்கிறது. அதிக அளவு கால்சியம் இதயத்தின் தமனிகளில் கால்சியம் படிவு உருவாக காரணமாகிறது. இது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும். மார்பு வலி, சோர்வு மற்றும் தலைச்சுற்றல் ஆகியவை இதன் அறிகுறிகள்.

MOST READ:இரவு தூங்குவதற்கு முன்னால் உங்க முகத்தை கழுவினால் என்ன அற்புதம் நடக்கும் தெரியுமா?

நுரையீரல் பாதிப்பு

நுரையீரல் பாதிப்பு

அதிகளவு வைட்டமின் டி இரத்தத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பேட் அளவை அதிகரிக்கிறது. அவை ஒன்றிணைந்து படிகங்களை உருவாக்குகின்றன. இந்த படிகங்கள் நுரையீரலில் சேர அதிக வாய்ப்புகள் உள்ளன. இது நுரையீரலின் செயல்பாட்டை பாதிக்கும். இதனால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். இருமல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மார்பு வலி ஆகியவை இதன் அறிகுறிகள்.

நீரிழப்பு

நீரிழப்பு

வைட்டமின் டி அதிகளவு எடுத்துக்கொள்வதால் இரத்தத்தில் கால்சியம் அளவை அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்தில் சிறுநீரை குவிக்கும் திறன் ஆபத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக கட்டுப்பாடில்லாமல் பெரிய அளவில் சிறுநீர் கழிக்கப்படுகிறது. இதனால் உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது.

குமட்டல் மற்றும் வாந்தி

குமட்டல் மற்றும் வாந்தி

குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் ஆகியவை வைட்டமின் டி அதிக அளவு எடுத்துக்கொள்வதன் பிற பக்க விளைவுகளாகும். இது இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கும் போது ஏற்படுகிறது.

MOST READ:எந்த வகை உணவு சாப்பிடுபவர்கள் உடலுறவில் சிறப்பாக செயல்படுவார்கள்... சைவமா? அசைவமா?

வயிற்று வலி

வயிற்று வலி

அதிகளவு வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் கால்சியம் அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது. இதன் விளைவாக கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது. இது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிற செரிமான பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.

கணைய அழற்சி

கணைய அழற்சி

வைட்டமின் டி அதிக அளவு உட்கொள்வது கால்சியம் அளவை உயர்த்துகிறது. இது கடுமையான கணைய அழற்சியை ஏற்படுத்தும். எடை குறைதல், வயிற்றின் மேல் பகுதியில் வலி மற்றும் காய்ச்சல் ஆகியவை கடுமையான கணைய அழற்சியின் அறிகுறிகளாகும்.

MOST READ:தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி உங்க உடல் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா?

பிற ஆபத்துகள்

பிற ஆபத்துகள்

வறண்ட வாய், பசியின்மை, சோர்வு, தொடர்ச்சியான தலைவலி, தசை பலவீனம், நடை மாற்றங்கள், உயர் இரத்த அழுத்தம், டின்னிடஸ், காது கேளாமை, கோமா மற்றும் இரைப்பை புண்கள் ஆகியவை வைட்டமின் டி அதிக அளவு எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பிற ஆபத்துகள் ஆகும்.

முடிவு

முடிவு

வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸை அதிக அளவு எடுத்துக்கொள்வது தீங்கு விளைவிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஒவ்வொரு நபரும் அறிகுறிகளைப் பொறுத்து வித்தியாசமாக உணரலாம். நீங்கள் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதற்கு முன், உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side Effects Of Vitamin D

Here we are talking about the side effects of vitamin d.
Story first published: Wednesday, March 11, 2020, 11:33 [IST]
Desktop Bottom Promotion