For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெய்ல் பாலிஸ் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து…!

நெய்ல் பாலிஸை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

|

உலகமயமாதலுக்கு பிறகு குறிப்பாக எல்லாரும் அழகு, ஆடைகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். செயற்கையான ரசாயனம் பொருந்திய முக அழகு க்ரீம்கள், தலை முடிக்கு ஷாம்பு, நகத்திற்கு நெயில் பாலிஷ் என்று கெமிக்கல் கலந்த பொருட்களை அழகு என்று கருதி நாம் செய்து கொண்டிருக்கிறோம். இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் ரசாயனம் கலந்த பொருட்களை நம் மிருதுவான உடலுக்கு பயன்படுத்துகிறோம். நகங்களுக்கு நெயில் பாலிஷ் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

Side effects of nail polish

பெண்கள் அனைவரும் தங்களுடைய அழகுக்காக செயற்கை அழகு பொருட்களையே அதிகளவு விரும்பி உபயோக படுத்துகிறார்கள். குறிப்பாக தாங்கள் உடுத்தும் ஆடைகளுக்கு ஏற்ப நகப்பூச்சுகளை பெண்கள் பயன்படுத்துவது தற்போது ஃபேஷன் ஆகி வருகிறது. கைவிரல் நகங்கள் மற்றும் கால் விரல் நகங்களுக்கு அழகு சேர்க்கும் விதமாக விதவிதமான வண்ணங்களில் மட்டும் அல்லாமல் ஒரே நகத்தில் பல்வேறு வண்ண நெயில் பாலிஷ் பயன்படுத்துக்கின்றனர். கண்களை கவரக்கூடிய வகையில், இருப்பதால் அனைத்து பெண்களும் இதுபோன்ற நெயில் பாலிஷ் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு பயன்படுத்துவதால் அழகுடன், உடல் ஆரோக்கியமும் சேர்ந்து பாதிக்கப்படும் என்பதை பெண்கள் உணரவேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெயில் பாலிஷால் ஏற்படும் பிரச்சனைகள்

நெயில் பாலிஷால் ஏற்படும் பிரச்சனைகள்

நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சில வகை நெயில் பாலிஷ்களை அடிக்கடி பயன்படுத்தும் போது நகங்கள் உலர்ந்து மஞ்சள் நிறத்திற்கு மாறத் தொடங்கிவிடும். அதில் சேர்க்கப்படும் பார்மாலிடிகைடு, டிபூட்டல் பத்தாலேட், டோலுன் போன்ற ரசாயனங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை.

நுரையில் பாதிப்பு

தலைவலி

மன அழுத்தம்

தொற்றுகிருமி ஏற்பட வாய்ப்பு

மூளை பாதிப்பு

நகம் தன்னுடைய தன்மையை இழக்கும்

புற்று நோயை ஏற்படுத்தும்

தலைவலி

தலைவலி

நகங்களின் மென்மை தன்மையை தக்கவைப்பதற்கும், நிறங்களின் பொலிவுக்கும் நெயில் பாலிஷில் டோலுன் என்ற ரசாயணம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இது நகத்தின் வழியே ஊடுருவி உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

நகப்பூச்சை தொடர்ந்து பயன்படுத்தும்போது தலைவலி, மயக்கம், தலைச்சுற்று, குமட்டல், உடல் பலவீனம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

MOST READ: ஆண்களே உங்களின் விந்தணுக்களுக்கு எது சக்தி தருகிறது தெரியுமா?

மன அழுத்தம்

மன அழுத்தம்

நெயில் பாலிஷ்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு பார்மாலிடிஹைடு எனும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வாமை பிரச்சினை கொண்டவர்கள் பார்மாலிடிகைடு கலந்திருக்கும் நகப்பூச்சுகளை தவிர்ப்பது நல்லது. மேலும், மன அழுத்தம், புற்றுநோய், இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிகமாக நகப்பூச்சு பயன்படுத்துபவர்களுக்கு மனஅழுத்தம், கருத்தரிதல் தாமதம், கருவுற்ற பெண்களின் வளரும் கருவில் பாதிப்பு, குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக பிரசவம் போன்றவை ஏற்படுவதாக ஆய்வில் கூறப்படுகிறது.

நுரையில் பாதிப்பு

நுரையில் பாதிப்பு

செயற்கை நகப்பூச்சில் உள்ள வேதிபொருட்களூம், அதன் வாசனையும் நகங்கள், தோல், நுரையீரல் மற்றும் மூளைவரை பாதிப்பை உண்டாக்கும். நரம்பு மண்டலம், மூளை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் நகப்பூச்சுகளை தவிர்ப்பது நல்லது.

தொற்றுநோய் ஏற்படும்

தொற்றுநோய் ஏற்படும்

செயற்கையான நகப்பூச்சுகளை அதிகமாக பயன்படுத்தும்போது, நகத்தினை சுற்றியும், தசைபகுதியையும் பாதிக்கிறது. இதனால் நகங்கள் தங்களுடைய பளபளப்பு தன்மை இழந்து, எளிதில் உடையும் படி ஆகிவிடும். இவை நகத்தினை மெலிதாக்கி தொற்றுநோய் கிருமிகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

புற்று நோய் ஏற்படுத்தும்

புற்று நோய் ஏற்படுத்தும்

நெயில் பாலிஷில் இருந்து வெளிவரும் வாசனை நிறைய பெண்களுக்கு பிடிக்கும். நிறைய பெண்கள் இந்த வாசனையை அதிகமாக நுகர்வார்கள். இது உடலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நகப்பூச்சியில் இருந்து வெளிவரும் வாசனை மூக்கு மற்றும் நுரையீரலையும் பாதிக்கும்.

இவ்வாசனையால் மூளை செல்கள் அடிமையாகும் வாய்ப்பும் உள்ளது. இதிலிருந்து வெளிவரும் வாசனையிலுள்ள பார்மால்ஹைடு புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

நகம் தன்மையை இழக்கும்

நகம் தன்மையை இழக்கும்

முதலில் நககண்களை குறைத்து, நகங்களை தேய்த்து பின் அதன் மேல் நகப்பூச்சையும், அல்லது நகத்தில் வரைவதோ போன்றவை செய்கின்றனர். இதனால் நகம் வண்மையும், பொலிவும் இழந்து எளிதில் உடைய கூடியவையாகவும் மற்றும் எளிதில் நோய்தொற்றுகளும் ஏற்படும். தோல் நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நகப்பூச்சு மற்றும் செயற்கை நகங்களை வைப்பது, அதில் வேலைபாடுகளுடன் கூடிய நகப்பூச்சை பயன்படுத்த நகங்களை தேய்த்து வைக்கின்றனர். இதனால் நகங்கள் வழுவிழந்து உடையும். எனவே இதுபோன்ற பாதிப்புகளை உண்டாக்கும் செயற்கை நகப்பூச்சுகளை விட்டு விட்டு இயற்கை நகப்பூச்சுகளை பயன்படுத்தலாம்.

சுவாச கோளாறு பிரச்சனை

சுவாச கோளாறு பிரச்சனை

டிபூட்டல் பத்தாலேட் என்ற ரசாயனம் கலந்த நகப்பூச்சுகள் நகத்திற்கு பொலிவு சேர்க்கும் தன்மை கொண்டது. இந்த ரசாயணங்கள் நாளமில்லா சுரப்பிகள், சுவாச கோளாறுகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆதலால் இத்தகைய ரசாயனங்கள் கலந்த நகப்பூச்சுகளை தவிர்க்க வேண்டும்.

MOST READ: இந்த எண்ணெய் உங்களின் பாலுணர்வை அதிகரிக்கும் தெரியுமா?

நகங்களை பராமரித்தல்

நகங்களை பராமரித்தல்

நகங்களை பெரிதாக வளர்க்கும்போது அதில் அழுக்கும், கிருமிகளும் சேர்த்து, வயிற்று வலி, வாந்தி, பேதி, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் நகங்களை அடிக்கடி சரியான அளவு வெட்ட வேண்டும். இரவு நேரங்களிலும், பிளேடு போன்றவற்றால் வெட்டாமல், நகவெட்டியை கொண்டு நகத்தை வெட்ட வேண்டும்.

பாத்திர சோப்புகள் மற்றும் பவுடர்கள், வேதிப்பொருட்களின் பயன்பாடு, மலம் கழித்த பின்னர், உணவு உண்ணும் முன்பு கைகளை பலமுறை சோப்புபோட்டு கழுவவேண்டும். நககண்களில் உள்ள அழுக்கை அகற்ற வேண்டும். பின்பு மஞ்சள் கலந்த நீரில் நனைத்து எடுத்தால் நல்லது.

அதிக நேரம் தண்ணீரில் வேலை செய்யும்போது நகச்சொத்தை, நகமுடைதல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இதிலிருந்து நகங்களை பாதுகாக்க ஈரத்தினை துடைத்துவிட்டு நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை நகங்களில் பயன்படுத்தலாம்.

இயற்கை நகப்பூச்சின் நன்மைகள்

இயற்கை நகப்பூச்சின் நன்மைகள்

இயற்கை நகப்பூச்சை பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் இயற்கை நகப்பூச்சை உபயோகிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. உடல் ஆரோக்கியம் கூடும். இயற்கை நகப்பூச்சு என்பது மருதாணி தான். மருதாணியை நகங்களில் பூசுவதால் பூஞ்சை போன்ற நோய்கிருமிகளில் இருந்து நகங்களையும், விரல்களையும் பாதுகாக்கலாம்.

பித்தம் மற்றும் எரிச்சலை குறைக்கும்

நகங்களை வலிமையாக்கும்

நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்

தூக்கத்தை தூண்டும்

மன நிம்மதியளிக்கும்

விரல் நுனிகளுக்கு சக்தியளிக்கும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side effects of nail polish

Read to know the side effects of nail polish and how it affects our health.
Desktop Bottom Promotion