For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கீட்டோ டயட் மேற்கொள்ளும் முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பக்கவிளைவுகள்!

கீட்டோ டயட் உடல் எடையை வேகமாக குறைக்க பயன்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த டயட் நிறைய பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது என்று எச்சரிக்கை விடுக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

|

கீட்டோ டயட் என்பது சமீப காலமாக பிரபலமாகி வரும் டயட் முறையாகும். பிரபலங்கள் முதல் நடுத்தர மக்கள் வரை தங்கள் எடையை குறைக்க இந்த கீட்டோ டயட்டை தான் பின்பற்றி வருகிறார்கள். கீட்டோ டயட் குறைந்த கார்ப் உணவுகளை கொண்ட டயட் முறையாகும். இது உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க பயன்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த டயட் நிறைய பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது என்று எச்சரிக்கை விடுக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

Side Effects Of Keto Diet

ஒரு கீட்டோ உணவில் 80% கொழுப்பு, 15% புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து 5% கலோரிகள் உள்ளன. இது சில பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் இந்த டயட்டை ஆரம்பிப்பதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கீட்டோ ப்ளூவால் பாதிப்படையலாம்

கீட்டோ ப்ளூவால் பாதிப்படையலாம்

நீங்கள் கார்ப்ஸ் உணவுகளை தவிர்த்து உண்ணும் முறை என்பதால் உடலில் உள்ள கொழுப்பை எரித்து ஆற்றலை பெற வேண்டியது அவசியமாகிறது. இதனால் உங்களுக்கு தலைவலி, குமட்டல், சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும். ஏனெனில் உடலானது கார்ப்ஸிலிருந்து ஆற்றலை பெறாமல் மூலதனமாக கொழுப்பை புதியதாக எடுக்கிறது. இந்த மாற்றத்தை உடம்பு ஏற்றுக் கொள்ளும் வரை சிக்கல் உண்டாகும்.

ஆரம்ப எடை இழப்பு இருந்தாலும் மீண்டும் எடை உயர்வு ஏற்படும்

ஆரம்ப எடை இழப்பு இருந்தாலும் மீண்டும் எடை உயர்வு ஏற்படும்

கார்ப்ஸ் கொழுப்பு மற்றும் புரதத்தை விட தண்ணீரை நிறைய வைத்திருக்கிறது. எனவே கீட்டோ உணவில் கார்ப்ஸை குறைக்கும் போது ஆரம்ப நிலையில் உடம்பு மெலிதானதாக தோன்றும். நீங்கள் கார்ப்ஸ் சாப்பிடுவதை நிறுத்தும் போது, ​​அனைத்து கூடுதல் நீரும் சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. எனவே தான் கீட்டோ டயட் இருக்கும் போது ஆரம்பத்தில் மெலிந்த மாதிரி தோன்றும். எனவே இதுவே இந்த டயட்டை எப்போதாவது பின்பற்றுவதை நிறுத்தினால் மீண்டும் எடை போட ஆரம்பித்து விடுவீர்கள்.

மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்

மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்

நீங்கள் கார்ப்ஸ் உட்கொள்ளலை கடுமையாக கட்டுப்படுத்துவதால், பீன்ஸ், முழு தானியங்கள் மற்றும் பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உயர் நார்ச்சத்து உணவுகளுக்கு பை-பை சொல்லுகிறீர்கள் என்று அர்த்தம். இதனால் உடலில் நீர்ச்சத்தும் குறைகிறது. எனவே மலச்சிக்கல் ஏற்பட ஆரம்பிக்கும். மலம் கழிப்பது சிரமமாகும். எனவே கீட்டோ டயட் இருக்கும் போது மலச்சிக்கலைக் குறைக்க நட்ஸ் வகைகள், வெண்ணெய் மற்றும் மாவுச்சத்து இல்லாத காய்கறிகளை உங்கள் கீட்டோ நட்பு உணவாக சேர்க்கலாம்.

நீங்கள் எப்போதுமே தாகத்தை உணர ஆரம்பிப்பீர்கள்

நீங்கள் எப்போதுமே தாகத்தை உணர ஆரம்பிப்பீர்கள்

நீங்கள் கீட்டோ டயட்டில் இருக்கும் போது உடல் நீர் இழப்பு ஏற்படுகிறது. எனவே போதுமான நீர்ச்சத்தை எடுக்க தாகம் அடிக்கடி ஏற்படும். உங்க சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சள் நிறமாக இருக்க நீங்கள் நிறைய தண்ணீர் எடுக்க வேண்டும்.

பசியின்மையை உணரலாம்

பசியின்மையை உணரலாம்

கீட்டோ டயட்டில் இருக்கும் போது உங்களுக்கு பசிக்காது. குறைவான பசியையே உணர்வீர்கள். குறைந்த கார்ப் உணவு கிரெலின் போன்ற பசி ஹார்மோன்களின் உற்பத்தியை அடக்குகிறது. இதனால் உங்களுக்கு பசி எடுக்காது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

தோல் அமைப்பில் மாற்றம் உண்டாகும்

தோல் அமைப்பில் மாற்றம் உண்டாகும்

நீங்கள் கீட்டோ டயட்டை பின்பற்றும் போது தோல் அமைப்பில் மாற்றத்தை உணர்வீர்கள். அதிக கார்ப் உணவுகளை உட்கொள்வது முகப்பரு மற்றும் உங்க பருக்களை மோசமாக்கும். ஆனால் கார்ப்ஸ் உணவு குறைவாக எடுக்கும் கீட்டோ டயட்டில் உங்க முகப்பரு மற்றும் பருக்கள் குறையத் தொடங்கும்.

குழப்பமான மனநிலை

குழப்பமான மனநிலை

சர்க்கரை தானியங்கள், வெள்ளை பாஸ்தா, ரொட்டி அல்லது இனிப்பு பானங்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. இதுவே கீட்டோ டயட்டில் கார்ப்ஸ் உணவுகளை குறைவாக எடுக்கும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல், தெளிவாக முடிவு எடுக்க முடியாமல் தவித்தல் மற்றும் உடலின் ஆற்றலை பாதிப்பது போன்றவற்றை உண்டாக்குகிறது.

எனவே கீட்டோ டயட்டில் சில நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் உள்ளன. உங்களுக்கு எது ஏற்றது என்பதை உணர்ந்து அந்த டயட்டை பின்பற்றுங்கள். ஆரோக்கியமாக வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side Effects Of Keto Diet

Before you start with a Keto Diet, you must know about these side effects. Read on...
Desktop Bottom Promotion