For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸின் பலவீனத்தை கண்டுபிடித்ததாக கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள் - அது என்னன்னு தெரியுமா?

கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியமான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் போட்டி நடந்து கொண்டிருக்கையில், ரஷ்ய விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் பலவீனத்தை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

|

கொரோனா வைரஸால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உலகமே இயல்பு வாழ்க்கையை வாழ முடியாமல் தத்தளித்து வருகிறது. இந்த கொடிய வைரஸால் 1.8 கோடியைத் தாண்டியது. இதுவரை இந்த தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 7 லட்சமாக உயர்ந்துள்ளது. உலகெங்கிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

Russian scientists claim to have discovered the weakness of coronavirus

உலகெங்கிலும் உள்ள சுமார் 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் கோவிட்-19 தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடும் நிலையில் மருத்துவ குழுக்களும், ஆராய்ச்சி குழுக்களும் ஒவ்வொரு நாளும் இந்த பெருந்தொற்று குறித்து புதிய விஷயங்களை தெரிந்து கொள்கின்றன. கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியமான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் போட்டி நடந்து கொண்டிருக்கையில், ரஷ்ய விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் பலவீனத்தை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதிய அறிக்கை

புதிய அறிக்கை

சமீபத்திய அறிக்கையின் படி, சைபீரியாவின் நோவோசிபிர்ஸ்கில் உள்ள ரஷ்யாவின் வெண்டர் மாநில ஆராய்ச்சி மையத்தின் வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி ஆய்வுக் குழு, அறை வெப்பநிலையில் உள்ள நீர் உண்மையில் பெருந்தொற்று நோய்களின் வளர்ச்சிக்கு இடைநிறுத்தத்தை ஏற்படுத்தும் என்பதைக் கண்டறிந்துள்ளது.

ஆய்வு கூறுவது என்ன?

ஆய்வு கூறுவது என்ன?

கொரோனா வைரஸின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த சாதாரண நீர் உதவும் என்று வெக்டர் மாநில ஆராய்ச்சி மையத்தின் வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வில், கொரோனா வைரஸின் 90 சதவீத துகள்கள் 24 மணிநேர இடைவெளியில் அறை வெப்பநிலை நீரில் இறந்துவிட்டதும், 72 மணிநேரத்தில் 99.9 சதவீதம் துகள்கள் கொல்லப்பட்டதும் கண்டறியப்பட்டது.

கொதிக்கும் நீர் உடனே கொல்லும்

கொதிக்கும் நீர் உடனே கொல்லும்

மேலும் நாவல் கொரோனா வைரஸ் சுடுநீரில் இறந்து விடும். அதிலும் கொதிக்கும் நீர் வைரஸை உடனடியாகவும், முழுமையாகவும் கொல்லும் என்றும் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

குளோரின் நீரும் வைரஸை கொல்லும்

குளோரின் நீரும் வைரஸை கொல்லும்

ஸ்புட்னிக் செய்தி அறிக்கையின் படி, ஆராய்ச்சியாளர்கள் குழுவும் குளோரினேட்டட் நீர் வைரஸைக் கொல்ல மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தது. மேலும் இந்த கொரோனா வைரஸ் குளோரின் தண்ணீர் மற்றும் கடல் நீரில் சிறிது நேரம் உயிர் வாழ முடியும் என்றாலும், பெருக்கமடையவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. ஆகவே தொற்றுநோயின் ஆயுட்காலம் நீரின் வெப்பநிலைப் பொறுத்தது.

2021-இல் மில்லியன் கணக்கான வைரஸ் தடுப்பு மருந்துகள்

2021-இல் மில்லியன் கணக்கான வைரஸ் தடுப்பு மருந்துகள்

ரஷ்யா தான் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியை அடுத்த மாதம் மாஸ்கோவில் உள்ள கமலேயா நிறுவனத்தில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

"எங்களால் ஒரு மாதத்திற்கு பல்லாயிரம் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும். மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் உற்பத்தி எண்ணிக்கை பல மில்லியனாக அதிகரிக்கும்" என்று தொழில்துறை அமைச்சர் டெனிஸ் மந்துரோவ் மாநில செய்தி நிறுவனமான TASS மூலமாக வெளியிடப்பட்ட பேட்டியில் கூறியுள்ளார்.

தடுப்பூசியை உருவாக்குவதில் ரஷ்யாவின் விரைவான அணுகுமுறை

தடுப்பூசியை உருவாக்குவதில் ரஷ்யாவின் விரைவான அணுகுமுறை

உலகமே கொரோனா தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்காக ஒரு தடுப்பூசியை உருவாக்குவதில் ரஷ்யா பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது. சமீபத்திய அறிக்கைகளின் படி, கொரோனா வைரஸிற்கு எதிராக அக்டோபர் மாதத்தில் ஒரு பெரிய தடுப்பூசி பிரச்சாரத்தை நடத்த அந்நாடு திட்டமிட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட முன்னணி தொழிலாளர்கள் தடுப்பூசியைப் பெறுவதற்கு வரிசை கட்டி இருப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.

அக்டோபரில் ரஷ்யாவால் தடுப்பூசியை வெளியிட முடியுமா?

அக்டோபரில் ரஷ்யாவால் தடுப்பூசியை வெளியிட முடியுமா?

கமலேயா நிறுவனம் உருவாக்கிய அடினோவைரஸ் அடிப்படையிலான தடுப்பூசியின் ஆரம்ப கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்ததாக ரஷ்ய விஞ்ஞானிகள் ஜூலை 15 அன்று அறிவித்திருந்தனர். ஊடக அறிக்கையின் படி, அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ அக்டோபரில் "விரிவான தடுப்பூசி" தொடங்க ஏற்கனவே ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை உலகளவில் நிபுணர்களிடம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Russian scientists claim to have discovered the weakness of coronavirus

In the study, it was found that 90 per cent particles of the coronavirus died in room temperature water in a span of 24 hours, while 99.9 per cent were killed in 72 hours.
Desktop Bottom Promotion