Latest Updates
-
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம்
மக்களே உஷார்! கொரோனாவின் அறிகுறி வெறும் காய்ச்சல், சளி மட்டுமல்ல… இதுவும் கொரோனாவோட அறிகுறி தானாம்…
பொதுவாக கொரோனா வைரஸ் அறிகுறி மூச்சு விடுவதில் சிரமம், தும்மல், தொண்டை வலி, இருமல், காய்ச்சல், சளி போன்றவை. ஆனால், திடீரென நாவில் சுவை தெரியாமல் அல்லது மூக்கில் வாசனை தெரியாமல் போவதும் அதன் அறிகுறிகளே.
கண்டம் விட்டு கண்டம் பரவி உலக மக்களை அச்சத்தின் உச்சத்தில் ஆழ்த்தி இருக்கும் கொரோனா வைரஸ், மிக வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டிவிட்டது. பொதுவாக கொரோனா வைரஸ் அறிகுறி என்று கூறப்படுவது மூச்சு விடுவதில் சிரமம், தும்மல், தொண்டை வலி, இருமல், காய்ச்சல், சளி போன்றவை.

ஆனால், திடீரென நாவில் சுவை தெரியாமல் அல்லது மூக்கில் வாசனை தெரியாமல் போவது, லேசான வயிற்று வலி போன்றவை கூட கொரோனாவின் மறைமுகமான அறிகுறிகள் தானாம். வாருங்கள் விரிவாக தெரிந்து கொள்வோம்...

வயிற்று வலி
கொரோனாவின் அறிகுறிகளாக விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது என்னவென்றால், வயிற்று வலி, அதிப்படியான காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் போன்றவை. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜி ஆய்வின் ஒரு ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுவது என்னவென்றால், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பது தான்.

ஆய்வு
சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 204 நபர்கள் வைத்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் படி, ஆய்வு ஒன்று நடைபெற்றது. அதன்படி ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால், அந்த 204 நபர்களில் 48.5% நபர்களுக்கு செரிமான பிரச்சனைக்கான அறிகுறிகளான வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலி போன்றவை ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது போன்ற அறிகுறிகள் சுவாச பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பு ஏற்பட்டிருக்கலாம்.

கொரோனாவின் பிற அறிகுறிகள்
திடீரென நாவில் சுவை தெரியாமல் போவது கூட கொரோனவின் அறிகுறி தான். திடீர் சுவை அல்லது வாசனை இழப்பு, அனோஸ்மியா அல்லது ஹைப்போஸ்மியா என அழைக்கப்படுகிறது. சீனா, தென்கொரியா மற்றும் இத்தாயில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அங்கு பாதிக்கப்பட்டவர்கள் பலர் மற்ற பொதுவான அறிகுறிகள் இல்லாமல், வாசனை இழப்பு பிரச்சனையால் மட்டும் அவதிப்பட்டது தெரியவந்துள்ளது. அதே சமயம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான அறிகுறிகள் எதுவும் காட்டாமல் கூட இளைஞர்கள் பலர் வைரஸால் பாதிக்கப்படலாம் என்பதை பிரிட்டிஷ் ஓட்டோஹினோலரிங்காலஜி சங்கம் புரிந்து கொண்டுள்ளது.

சீனா, இத்தாலி மற்றும் ஈரான்
இங்கிலாந்தில் உள்ள முன்னணி ரைனோலாஜிஸ்ட் தொகுத்த சான்றுகளின்படி, வாசனை அல்லது சுவை திடீரென குறைந்த எவரும் வேறு எந்த அறிகுறிகளும் இல்லாவிட்டாலும், கொரோனா வைரஸின் "மறைக்கப்பட்ட நோய்கடத்தியாக" இருக்கலாம் என்று தெரிகிறது. பிரிட்டிஷ் ரைனோலாஜிக்கல் சொசைட்டியின் பேராசிரியரும், பிரிட்டிஷ் அசோசியேஷன் ஓட்டோரினோலரிங்காலஜி தலைவருமான பேராசிரியர் நிர்மல் குமார் வெளியிட்ட ஓர் கூட்டு அறிக்கையில், "தென்கொரியாவில், மிக விரிவாக நடத்தப்பட்ட சோதனையில், 30% நோயாளிகளுக்கு அனோஸ்மியா அல்லது ஹைப்போஸ்மியா இருந்தது தெரிய வந்துள்ளது. உலகளவில், கொரோனா வைரஸுக்கு சாதகமாக வந்த பரிசோதனை முடிவுகளில், வாசனை மற்றும் சுவை இழப்பதற்கான அறிகுறிகள் பலருக்கு இருந்தது தெரிகிறது (இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இல்லாமலேயே) என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

புறக்கணிக்கப்படக்கூடிய அறிகுறிகள்
"ஈரான், தனது நாட்டில் அனோஸ்மியா அல்லது ஹைபோஸ்மியா வழக்குகள் திடீரென அதிகரித்து இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் வடக்கு இத்தாலியில் உள்ள பல நட்பு நாடுகளும் இதே அனுபவத்தைப் பெற்றுள்ளன." இந்த நிகழ்வுகளில் அங்கீகரிக்கப்பட்ட பிற அறிகுறிகள் இல்லாத காரணத்தால், பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கான அவசியம் இல்லை என கருதி புறக்கணிக்கப்படுகின்றன. இது உலக அளவில் கொரோனா அதி விரைவாக பரவுவதற்கான வாய்ப்பை பல மடங்கு அதிகரித்துவிடுமோ என்ற எண்ணம் பரவலாக ஆராய்ச்சியாளர்களிடையே நிலவுகிறது.



Click it and Unblock the Notifications
