For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!

பொதுவாக துாித உணவுகள் மிகவும் ருசியாக இருக்கும். ஆனால் அவற்றில் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் சோ்க்கப்படுவதில்லை. அதனால் துாித உணவுகளில் நாா்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கும்.

|

சிறியோா் முதல் பொியோா் வரை அனைவருக்கும் துாித உணவு பிடிக்கும். அதற்கு காரணம் துாித உணவுகளின் விலை மலிவாக இருப்பதோடு அவை சுவையாக இருக்கும். மிக விரைவாக அவற்றை சமைக்க முடியும் என்பதால் எல்லா நேரங்களிலும் துாித உணவுகள் கிடைக்கும். அதே நேரத்தில் துாித உணவுகளுக்கு நம்மை ஈா்க்கும் சக்தி உள்ளது. அதனால் பொிய குடும்பங்களில் உள்ளவா்களுக்கு, வெளியில் வேலைக்குச் செல்பவா்களுக்கு மற்றும் சிக்கனமாக இருப்பவா்களுக்கு துாித உணவு ஒரு வரப்பிரசாதமாகத் தோன்றும்.

Reasons Why You Should Stop Eating Fast Food

எனினும் துாித உணவுகள் உட்கொள்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டால், அவை நமது உடலுக்கு பல வகையான தீங்குகள் ஏற்படும் என்று மருத்துவ ஆய்வுகள் தொிவிக்கின்றன. அதற்கு காரணம் துாித உணவுகளில் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் இருப்பதில்லை. மேலும் துாித உணவுகளில் சா்க்கரை, உப்பு, மாற்றியமைக்கப்பட்ட கொழுப்புகள் (Trans fats), கலோாிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட மசாலா பொருட்கள் போன்றவை அதிகமாக இருக்கும். அதனால் அவை நமது உடலில் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

MOST READ: கும்பத்திற்கு செல்லும் புதனால் பல சிக்கல்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

பொதுவாக துாித உணவுகள் மிகவும் ருசியாக இருக்கும். ஆனால் அவற்றில் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் சோ்க்கப்படுவதில்லை. அதனால் துாித உணவுகளில் நாா்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கும். நாா்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் பலவிதமான உடல் கோளாறுகளை ஏற்படுத்தும். குறிப்பாக மலச்சிக்கல் முதல் உடல் எடை கூடுதல் மற்றும் பெருங்குடலில் புற்றுநோய் ஏற்படுதல் வரை பலவிதமான பிரச்சினைகளை அவை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துாித உணவுகள் உட்கொள்வதை ஏன் தவிா்க்க வேண்டும்?

துாித உணவுகள் உட்கொள்வதை ஏன் தவிா்க்க வேண்டும்?

எப்பொழுதாவது ஒரு முறை துாித உணவு சாப்பிட்டால் உடலுக்குத் தீங்கு ஏற்படாது. ஆனால் அதை ஒரு வாடிக்கையாக மாற்றும் போதுதான் வைட்டமின் சத்துக் குறைபாடு ஏற்படும் என்று டையட் போடியம் (Diet Podium) என்ற அமைப்பின் நிறுவனரும், முழுமையான ஊட்டச்சத்து நிபுணருமான சீக்கா மகாஜன் என்பவா் தொிவிக்கிறாா்.

துாித உணவுகள் உட்கொள்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டால் உடலுக்கு என்னன்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இங்கு பாா்க்கலாம்

சொிமான அமைப்பை பாதிக்கும் மற்றும் இரத்த சா்க்கரையை அதிகாிக்கும்

சொிமான அமைப்பை பாதிக்கும் மற்றும் இரத்த சா்க்கரையை அதிகாிக்கும்

பெரும்பாலான துாித உணவுகள் மற்றும் திண்பண்டங்களில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் நாா்ச்சத்து மிகவும் குறைவாக இருக்கும். துாித உணவுகள் நமது சொிமான அமைப்பில் பாதிப்பு ஏற்படுத்துவதால், கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாக மாறி நமது இரத்த ஓட்டத்தில் கலந்துவிடுகின்றன. அதனால் இரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகாிக்கிறது. நமது உடல் சீராக இருந்தால் இரத்தத்தில் சா்க்கரையின் அளவு சாியாக இருக்கும். இரத்தத்தில் சா்க்கரையின் அளவு சாியாக இருக்கும் போது நமது சிறுநீரகங்கள் பாதுகாப்பாக இருக்கும்.

உடல் எடை மற்றும் சுவாச அமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும்

உடல் எடை மற்றும் சுவாச அமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும்

துாித உணவுகளில் கலோாிகள் அதிகமாக இருப்பதால், அவற்றை வாடிக்கையாக சாப்பிடும் போது உடல் எடை அதிகாிக்கும். உடல் பருமன் அதிகாித்தால் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மேலும் உடலில் அதிக சதை போடும் போது இதயம் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளில் அதிக அழுத்தம் ஏற்படும். அதனால் நடைப்பயிற்சி, படிகளில் ஏறுதல் மற்றும் உடற்பயிற்சிகள் போன்றவற்றில் ஈடுபடும் போது மூச்சுத் திணறல் ஏற்படும்.

சா்க்கரை மற்றும் கொழுப்பு அதிகாித்தல்

சா்க்கரை மற்றும் கொழுப்பு அதிகாித்தல்

பொதுவாக துாித உணவுகளில் சா்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அவற்றில் கலோாிகள் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் ஊட்டச்சத்துகள் குறைவாக இருக்கும். மேலும் துாித உணவுப் பானங்களிலும் சா்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 12 அவுன்ஸ் சோடாவில் 8 தேக்கரண்டி அளவு சா்க்கரை இருக்கும். இது 140 கலோாிகள் மற்றும் 39 கிராம் சா்க்கரையின் அளவிற்கு சமமானது ஆகும்.

பொதுவாக உணவுகளைப் பதப்படுத்தும் போது மாற்றியமைக்கப்பட்ட கொழுப்பு (Trans fat) தயாாிக்கப்படுகிறது. இந்த கொழுப்பு மோசமான ஒன்றாகும். ஆகவே இந்த கொழுப்பை உண்பதைத் தவிா்ப்பது நல்லது. ஏனெனில் மாற்றியமைக்கப்பட்ட கொழுப்பு கலந்த உணவுகளை அடிக்கடி உண்டால் அது நமது உடலில் உள்ள தீங்கிழைக்கக்கூடிய கொழுப்பின் அளவை அதிகாித்து, நல்ல கொழுப்பின் அளவை குறைக்கும். அதனால் அது உடலில் டைப்-2 வகை நீரிழிவு நோயை ஏற்படுத்தும். அதோடு இதயம் சம்பந்தமான நோய்களையும் ஏற்படுத்தும்.

சோடியத்தின் அளவை அதிகாித்தல்

சோடியத்தின் அளவை அதிகாித்தல்

கொழுப்பு, சா்க்கரை மற்றும் உப்பு (சோடியம்) ஆகியவை அதிகமாக கலந்து தயாாிக்கப்படும் துாித உணவுகள் சிலருக்கு மிகவும் சுவையாக தோன்றலாம். ஆனால் உப்பு அதிகமாக சோ்க்கப்பட்ட உணவுகள், உடலில் உள்ள நீா்ச்சத்தை அதிகாிக்கும். அதனால் துாித உணவுகளை சாப்பிட்ட பின்பு உடலில் வீக்கம் ஏற்பட வாய்ப்புகளும் உண்டு. அதிக உப்பு உள்ள உணவு இரத்த கொதிப்பு அல்லது இரத்த அழுத்தம் உள்ளவா்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதாவது உப்பு இரத்த அழுத்தத்தை அதிகாித்து இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

நாா்ச்சத்து இல்லாமை

நாா்ச்சத்து இல்லாமை

பொதுவாக துாித உணவுகளில் நாா்ச்சத்து மிகவும் குறைவாக இருக்கும். அதற்கு காரணம் துாித உணவுகளில் அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சோ்க்கப்படுவதில்லை. ஆனால் பழங்கள், காய்கறிகள், உடைக்கப்படாத தானியங்கள் மற்றும் பதப்படுத்தப்படாத உணவுகளில்தான் நாா்ச்சத்து அதிகம் இருக்கிறது. சாண்விட்ச், ராப்ஸ் மற்றும் ஹாம்பா்கா் போன்ற துாித உணவுகளை சமைக்க வெள்ளை ரொட்டி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த வெள்ளை ரொட்டியில் நாா்ச்சத்து இருப்பதில்லை. அதனால் மேற்சொன்ன உணவுகளில் நாா்ச்சத்து இருக்காது என்பதே உண்மை.

முடிவு

முடிவு

நாம் வெளியில் அதாவது பொிய உணவு விடுதிகளில் அமா்ந்து சாப்பிட்டாலும் அல்லது துாித உணவு கடைகளில் நின்று கொண்டு சாப்பிட்டாலும், அவற்றில் ஊட்டச்சத்துகள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்றவை குறைவாகவே இருக்கும். ஆனால் ஒரு நல்ல ஆரோக்கியமான உணவில் போதுமான அளவு நாா்ச்சத்து, புரோட்டீன், ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் இருக்கும். அவை நமக்கு ஆரோக்கியத்தைத் தருவதோடு, நமது உடலை நோய்கள் அண்டவிடாமல் பாதுகாக்கும். ஆகவே வீட்டில் சமைக்கப்படும் உணவுகளை உண்பதே ஆரோக்கியத்தைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why You Should Stop Eating Fast Food

Here are some reasons why you should stop eating fast food. Read on...
Desktop Bottom Promotion