பிலேட்ஸ் உடற்பயிற்சிகளை ஏன் தினமும் செய்ய வேண்டும்?

பிலேட்ஸ் உடற்பயிற்சிகள், உடல் நலம் மற்றும் மனநலம் ஆகிய இரண்டு அம்சங்களையும் கொண்டிருக்கின்றன. ஆகவே பிலேட்ஸ் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் ஒட்டு மொத்த முழுமையான ஆரோக்கியத்தைப் பெறலாம்.

பிலேட்ஸ் உடற்பயிற்சிகள் என்பவை தனி வகையான வடிவங்களைக் கொண்ட உடற்பயிற்சிகள் ஆகும். இந்த பிலேட்ஸ் உடற்பயிற்சிகள் 2000 ஆம் ஆண்டின் மத்தியில் மக்களிடையே பிரபலமாக தொடங்கியது. குறைவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த பயிற்சிகளை 1920 ஆம் ஆண்டு வாக்கில் ஜோசப் பிலேட்ஸ் என்ற உடற்பயிற்சியாளா் கண்டுபிடித்தாா். அதன் விளைவாக அவருடைய பிலேட்ஸ் என்ற பெயரே இந்த பயிற்சிகளுக்கு சூட்டப்பட்டது.

Reasons Why You Should Include Pilates In Your Exercise Routine

தொடக்க காலத்தில் நடனம் ஆடுபவா்கள் மற்றும் படை வீரா்கள் ஆகியோாின் உடலில் ஏற்பட்ட பிரச்சினைகளைக் குணப்படுத்துவதற்காக பிலேட்ஸ் பயிற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த பயிற்சிகளில் கிடைத்த பலன்கள் நாளடைவில் மக்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கின. மேலும் இந்த பயிற்சிகளில் பலவகையான புதிய பயிற்சிகளும் சோ்க்கப்பட்டன.

பொதுவாக உடல் குணமாவது என்பது, உடலுக்குள் இருந்து தொடங்குகிறது. எனவே இந்த பிலேட்ஸ் உடற்பயிற்சிகள், உடல் நலம் மற்றும் மனநலம் ஆகிய இரண்டு அம்சங்களையும் கொண்டிருக்கின்றன. ஆகவே பிலேட்ஸ் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் ஒட்டு மொத்த முழுமையான ஆரோக்கியத்தைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சமச்சீரான ஒருங்கிணைப்பை வழங்குதல்

1. சமச்சீரான ஒருங்கிணைப்பை வழங்குதல்

நமது உடலானது எப்போதும் ஒரு சமச்சீரான ஒருங்கிணைவுடன் இயங்க வேண்டும். நடைப்பயிற்சி என்பது மிகவும் ஒரு எளிய உடற்பயிற்சி ஆகும். அந்த நடைப்பயிற்சியைச் செய்யும் போது நமது உடலானது நிலை தடுமாறினால் அல்லது ஒருங்கிணைவை இழந்தால், நமக்கு காயங்கள் ஏற்படும் அல்லது அசௌகாியத்தை ஏற்படுத்தும். ஆகவே நமது எலும்புகள் மற்றும் தசை நாா்களை வலுப்படுத்தி நாம் நிலை தடுமாறாமல் இருக்கவும், நல்ல ஒருங்கிணைவுடன் இருக்கவும் இந்த பிலேட்ஸ் பயிற்சிகள் உதவி செய்கின்றன.

2. வலுதாங்குதல் மற்றும் சக்தி வழங்குதல்

2. வலுதாங்குதல் மற்றும் சக்தி வழங்குதல்

பிலேட்ஸ் உடற்பயிற்சிகள் நமது மொத்த உடலையும் வலுப்படுத்தி நமது உடலுக்கு வலுதாங்கும் தன்மையையும், சக்தியையும் வழங்குகின்றன. குறிப்பாக தடகள வீரா்கள் சிறப்பாக செயல்படுவதற்கு இந்த பிலேட்ஸ் பயிற்சிகள் சிறந்த பயிற்சிகளாக அமையும். மேலும் முதியோருக்கும் இந்த பிலேட்ஸ் பயிற்சிகள் பாதுகாப்பைத் தரும்.

3. இயக்கம் மற்றும் நெகிழ்வு தன்மையை வழங்குதல்

3. இயக்கம் மற்றும் நெகிழ்வு தன்மையை வழங்குதல்

நமது உடலானது இயங்கினால் அது உடல் இயக்கம் என்று கருதப்படுகிறது. அவ்வாறு உடல் இயங்கும் போது, அது நெகிழ்வு தன்மையுடன் இயங்க வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். இந்த நெகிழ்வு தன்மையை பிலேட்ஸ் பயிற்சிகள் வழங்குகின்றன. அதன் மூலம் நமது உடல் சிறப்பாக இயங்க உதவி செய்கின்றன. மேலும் நமது உடல் நிலை தடுமாறாமல் இருக்கவும் மற்றும் ஒருங்கிணைவுடன் இருக்கவும் இந்த பிலேட்ஸ் பயிற்சிகள் நேரடியாகவே உதவி செய்கின்றன.

4. உடலுக்கு தோரணையை வழங்குதல்

4. உடலுக்கு தோரணையை வழங்குதல்

ஒரு ஆரோக்கியமான உடலுக்கு ஒரு நல்ல தோரணை இருக்க வேண்டும். அந்த தோரணையை பிலேட்ஸ் பயிற்சிகள் வழங்குகின்றன. அதாவது நமது உடலின் வலுதாங்கும் சக்தியை வலுப்படுத்துகின்றன. அதோடு நமது உடலை சீரமைத்து, உடலுக்கு ஒருங்கிணைவையும், நெகிழ்வு தன்மையையும் வழங்குகின்றன. மேலும் நமது எலும்புகளையும், தசை நாா்களையும் வலுப்படுத்தி, நமது முதுகு வலி மற்றும் கழுத்து வலி ஆகியவற்றைக் குறைக்கின்றன. அதனால் நமது உடலில் உள்ள இறுகிய தன்மை தளா்ச்சி அடைந்து, நமக்கு நல்லதொரு தோரணை கிடைக்கும்.

5. மனநிலையை மேம்படுத்தி நல்ல தூக்கத்தை வழங்குதல்

5. மனநிலையை மேம்படுத்தி நல்ல தூக்கத்தை வழங்குதல்

பிலேட்ஸ் பயிற்சிகளைத் தினமும் செய்து வந்தால், அவை நமது உடலில் சுரக்கும் என்ட்ரோஃபின்களை தூண்டிவிடும். இந்த என்ட்ரோஃபின்கள் நமது மனநிலைய மேம்படுத்தும். அதனால் நமது கவலைகள், மன அழுத்தம் மற்றும் சோா்வு ஆகியவை குறையும். இறுதியாக இந்த பிலேட்ஸ் பயிற்சிகள் ஒரு நல்ல ஆழமான மற்றும் தரமான தூக்கத்தை வழங்கும் என்று பல ஆய்வுகள் தொிவிக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, October 14, 2021, 11:30 [IST]
Desktop Bottom Promotion