For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்தில் கடலைமிட்டாய் சாப்பிடுவது ரொம்ப நல்லது - ஏன் தெரியுமா?

குளிர்காலத்திற்கு ஏற்ற திண்பண்டமாக நிலக்கடலையைக் கருதலாம். ஏனெனில் நிலக்கடலை நமது உடலுக்கு வெதுவெதுப்பைத் தருகிறது. அதோடு நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது.

|

நாம் இப்போது குளிர்காலத்தில் இருக்கிறோம். குளிர்காலம் என்றாலே ஏதாவது ஒரு நமக்குப் பிடித்த திண்பண்டத்தைக் கொரிக்க வேண்டும் என்று ஆசை வரும். பலரும் பல திண்பண்டங்களை விரும்பி கொரிப்பர். அந்த வகையில் குளிர்காலத்திற்கு ஏற்ற திண்பண்டமாக நிலக்கடலையைக் கருதலாம். ஏனெனில் நிலக்கடலை நமது உடலுக்கு வெதுவெதுப்பைத் தருகிறது. அதோடு நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது.

Reasons To Include Peanuts In Your Winter Diet

நிலக்கடலையுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடலாம், அல்லது வட இந்திய திண்பண்டமான கஜாக் செய்தும் சாப்பிடலாம். அது மிகவும் ருசியாக இருக்கும். ஆகவே நாம் ஏன் இந்த குளிர்காலத்தில் நிலக்கடலையை நமது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

MOST READ: நற்செய்தி! இந்த டயட் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாம் - ஆய்வில் தகவல்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவிற்கு சுவை சேர்க்கும் நிலக்கடலை

உணவிற்கு சுவை சேர்க்கும் நிலக்கடலை

சட்னி முதல் மசாலா கலவை வரை எல்லா உணவுப் பொருட்களிலும் நிலக்கடலையைச் சேர்த்துக் கொள்ளலாம். நிலக்கடலை நமது உணவுக்கு தனி சுவையைக் கொடுக்கிறது. நிலக்கடலையை வறுத்து நிலக்கடலை வெண்ணெயைத் (peanut butter) தயாரிக்கலாம் அல்லது உப்புமாவில் (poha) நிலக்கடலையை பரப்பி அதை அலங்கரிக்கலாம்.

நிலக்கடலையை வறுக்கலாம் அல்லது நிலக்கடலை மசாலா செய்யலாம். மேலும் நிலக்கடலை லட்டு செய்யலாம். நமது பற்கள் உறுதியாக இருந்தால் இனிப்பான கடலைமிட்டாய் செய்து சாப்பிடலாம். பிஸ்கட்டுகள் (cookies) அல்லது இனிப்பு வடைகள் போன்ற எந்த உணவாக இருந்தாலும் அவற்றில் நிலக்கடலையைச் சேர்த்தால் அவை நமது நாவில் எச்சில் ஊறும் அளவிற்கு சுவையைக் கொடுக்கும்.

புரோட்டீன்களை பொதிந்து வைத்திருக்கும் நிலக்கடலை

புரோட்டீன்களை பொதிந்து வைத்திருக்கும் நிலக்கடலை

பொதுவாகவே நிலக்கடலை புரோட்டீன்களை அதிக அளவில் வைத்திருக்கிறது. அதாவது 100 கிராம் நிலக்கடலையில் 25.8 கிராம் புரோட்டீன் உள்ளது. நிலக்கடலை வெண்ணெயை (peanut butter) உண்டால், அது இனிப்பு மீது நாம் கொண்டிருக்கும் ஆசையை நிறைவு செய்வதோடு நமக்கு போதுமான அளவு புரோட்டீனையும் வழங்குகிறது. ஆனால் நிலக்கடலையை அளவோடு சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமானால் நமது உடல் எடை அதிகரித்துவிடும்.

இரத்த சர்க்கரையின் அளவை பராமரிக்கும் நிலக்கடலை

இரத்த சர்க்கரையின் அளவை பராமரிக்கும் நிலக்கடலை

நிலக்கடலையில் குறைவான அளவே குளுக்கோஸ் உள்ளதால் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவாக நிலக்கடலை இருக்கிறது. மேலும் நிலக்கடலையில் மாங்கனீசு (manganese) இருப்பதால் அது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கவிடாமல் தடுக்கிறது. ஆகவே நமது உணவில் நிலக்கடலையைச் சேர்த்துக் கொண்டால் அதற்கான நல்ல பலன்களைப் பெறலாம்.

மாரடைப்பைக் குறைக்கும் நிலக்கடலை

மாரடைப்பைக் குறைக்கும் நிலக்கடலை

நிலக்கடலையில் அதிகமான அளவு தாதுக்கள் இருக்கின்றன. அதோடு ஆக்ஸிஜனேற்றிகளை எதிர்க்கும் துகள்களையும் அதிகம் வைத்திருக்கின்றன. நிலக்கடலையில் போதுமான அளவு டிரிப்டோபன் (Tryptophan) இருப்பதால் அது நம்மிடம் உள்ள சோர்வு, கவலை, மன அழுத்தம் மற்றும் மனதை அலைபாய விடுதல் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவி செய்கிறது.

ஊட்டச்சத்துக்களை சேமித்து வைத்திருக்கும் சேமிப்பு கிடங்கு நிலக்கடலை

ஊட்டச்சத்துக்களை சேமித்து வைத்திருக்கும் சேமிப்பு கிடங்கு நிலக்கடலை

நமது உடலுக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களை நிலக்கடலை சேமித்து வைத்திருக்கிறது. குறிப்பாக புரோட்டீன், ஒமேகா-3, ஒமேகா-6, நார்ச்சத்து, பயோட்டின், தாமிரம், ஃபோலேட் (folate), வைட்டமின் ஈ, தயமின் (thiamine), பாஸ்பரஸ் மற்றும் மங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்களை வைத்திருக்கிறது. 250 கிராம் நிலக்கடலையானது, 250 கிராம் இறைச்சி வழங்கும் அளவைவிட அதிகமான அளவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது.

சருமத்தை மெருகேற்றும் மற்றும் கூந்தலை பராமரிக்கும் நிலக்கடலை

சருமத்தை மெருகேற்றும் மற்றும் கூந்தலை பராமரிக்கும் நிலக்கடலை

நமது அன்றாட உணவில் நிலக்கடலையை சேர்த்துக் கொண்டால், நமது சருமம் மெருகேறும் மற்றும் நீண்ட கூந்தல் கிடைக்கும். பொதுவாக குளிர்காலத்தில் நமது சருமம் எளிதாக வறண்டுவிடும். அந்த சரும வறட்சி பிரச்சனையை சமாளிப்பது கடினமான ஒன்றாகும். ஆனால் நிலக்கடலையில் இருக்கும் அதிக அளவிலான அமிலங்களும் சேர்மங்களும் நமது சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை வழங்குவதோடு, சருமத்திற்கு பளபளப்பையும் அளிக்கிறது.

நிலக்கடலையில் இருக்கும் எல் ஆர்ஜினைன் (L-arginine) என்ற வேதிப்பொருள் நீளமான கூந்தலைப் பெற உதவி செய்கிறது. அதோடு முடியின் பலவீனமான வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்வதையும் தடுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons To Include Peanuts In Your Winter Diet

Here are some reasons to include peanuts in your winter diet. Read on...
Desktop Bottom Promotion