For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்லீரலில் கொழுப்பு தேங்குவதால் எந்த மாதிரியான பிரச்சனைகள் உண்டாகும் தெரியுமா?

கல்லீரலில் கொழுப்பு தேங்குவதால் கல்லீரலில் அழற்சி, சேதம் மற்றும் வடுக்களை உண்டாக்க வாய்ப்புள்ளது. இந்த சேதமே பின்னாளில் கல்லீரல் செயலிழப்புக்கு காரணமாகிவிடுகின்றன.

|

நம் உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு இந்த கல்லீரல். கல்லீரல் தான் நம் உடலில் ஏகப்பட்ட வேலைகளை செய்கிறது. ஆனால் அப்படிப்பட்ட கல்லீரலில் கொழுப்பு படிந்தால் என்னவாகும்? கல்லீரலில் கொழுப்பு படியும் நிலையை கல்லீரல் ஸ்டீடோசிஸ் என்று அழைக்கின்றனர். கல்லீரலில் சிறிய அளவு கொழுப்பு இருப்பது இயல்பான ஒரு விஷயம். ஆனால் அதுவே அதிகப்படியான கொழுப்பு காணப்பட்டால் உடல்நலப் பிரச்சினையாக மாறிவிடும்.

Problems From Fatty Liver

கல்லீரலில் கொழுப்பு தேங்குவதால் கல்லீரலில் அழற்சி, சேதம் மற்றும் வடுக்களை உண்டாக்க வாய்ப்புள்ளது. இந்த சேதமே பின்னாளில் கல்லீரல் செயலிழப்புக்கு காரணமாகிவிடுகின்றன.

MOST READ: இரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா? அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..

கல்லீரலில் ஏற்படும் நோய்களை இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர். நிறைய ஆல்கஹால் குடிக்கும் ஒருவருக்கு ஏற்படும் நோய் ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய் ஆகும். இதுவே மதுப்பழக்கம் இல்லாத ஒருவருக்கு கல்லீரலில் கொழுப்பு படிந்தால், அதை ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்று கூறுகின்றனர்.

MOST READ: கொரோனாவை உணர்த்தும் மற்றொரு மோசமான அறிகுறி! அசால்ட்டா இருக்காதீங்க...

இந்த கல்லீரல் நோயால் வயதானவர்கள் பாதிக்கப்பட்ட காலம் போய் இப்பொழுது தவறான உணவுப் பழக்கத்தால் இளம் வயதினர் கூட பாதிப்படையும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரல் கொழுப்பு நோயின் அறிகுறிகள்:

கல்லீரல் கொழுப்பு நோயின் அறிகுறிகள்:

ஆரம்ப நிலையில் கல்லீரல் கொழுப்பு நோய் எந்தவித பாதிப்பையும் வெளிப்படுத்துவது இல்லை. நாளடைவில் சிலருக்கு கல்லீரல் ஃபைரோஸிஸ், கல்லீரல் சிரோஸிஸ் போன்ற பிரச்சினைகளை உண்டாக்குகிறது இதனால் அவர்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் தோன்றலாம்.

* பசியின்மை

* வயிற்று வலி

* வயிற்று வீக்கம்

* சோர்வு

* பலவீனம்

* எடை இழப்பு

* தோலில் அரிப்பு, நமைச்சல்

* மஞ்சள் நிற தோல் மற்றும் கண்கள் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

கல்லீரலில் கொழுப்பு தேங்க என்ன காரணங்கள்?

கல்லீரலில் கொழுப்பு தேங்க என்ன காரணங்கள்?

நாம் உணவில் சாப்பிடும் கொழுப்பை சரியாக வளர்ச்சிதை மாற்றம் செய்யாத போது கொழுப்பு கல்லீரல் ஏற்படுகிறது. இந்த கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்பட கீழ்கண்ட காரணிகள் காரணமாகின்றன.

* மதுப்பழக்கம்

* உடற்பயிற்சியின்மை

* அதிக உடல் பருமன்

* தவறான உணவுப் பழக்கம்

* அதிக இரத்த சர்க்கரையை கொண்டிருப்பது

* இன்சுலின் சுரப்பு பிரச்சினைகள்

* இரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் அதிகமாக தேங்கி இருத்தல்

* ஹெபடைடிஸ் சி போன்ற கல்லீரல் சம்பந்தமான நோய்த்தொற்றுகள்

* கல்லீரலில் நச்சுத்தன்மை உண்டாதல், மருந்துகளின் பக்க விளைவுகள் போன்றவை கல்லீரலில் கொழுப்பு தேங்க காரணமாக அமைகின்றன.

கல்லீரலில் கொழுப்பு நோயை கண்டறியும் முறைகள்:

கல்லீரலில் கொழுப்பு நோயை கண்டறியும் முறைகள்:

* உங்களுடைய பழக்கவழக்கங்கள், மதுப்பழக்கம் குறித்து மருத்துவர் கேட்பார்கள்.

* கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்கனவே உங்க குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருக்கிறதா என்பதை அறிதல்

* உடல் சார்ந்த பரிசோதனைகளாக வயிற்றை அழுத்தி பார்த்தல், தொடுதல் போன்ற முறைகளால் கல்லீரல் வீக்கமடைந்து உள்ளதா என்பதை கண்டறிதல்.

* இரத்த பரிசோதனைகள் மூலம் கல்லீரல் என்சைம்களை சரிபார்த்தல்

* அல்ட்ரா சவுண்ட், சி. டி ஸ்கேன் மற்றும் எம். ஆர். ஐ போன்ற ஸ்கேனிங் முறைகளை செய்தல்

* மேலும் கல்லீரலில் பாதிப்படைந்த திசுக்களின் மாதிரியை ஊசியின் மூலம் எடுத்து கல்லீரல் பயாப்ஸி மூலம் கல்லீரல் கொழுப்பு நோயை கண்டறியலாம்.

கொழுப்பு கல்லீரல் நோய்க்கான சிகிச்சைகள்:

கொழுப்பு கல்லீரல் நோய்க்கான சிகிச்சைகள்:

கொழுப்பு கல்லீரல் நோயை சரிசெய்ய மருந்துகளை கொடுப்பதை விட சில வாழ்க்கை முறை மாற்றங்களையே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே நீங்கள் செய்யும் வாழ்க்கை முறை மாற்றங்கள் கல்லீரல் கொழுப்பு நோயை விரட்ட உதவி செய்யும். அவையாவன:

* மதுப்பழக்கத்தை தவிருங்கள்

* உடல் பருமன் இருந்தால் எடையை கட்டுக்குள் வைக்க முற்படுங்கள்

* உணவுப் பழக்கத்தை மாற்றுங்கள். கெட்ட கொழுப்புகளை அதிகரிக்கும் உணவுகளை தவிருங்கள்.

* தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் ஆவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

* கல்லீரல் சிரோஸிஸ் போன்ற பிரச்சினைகள் இருந்தால் உங்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார்.

* பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் என்று சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

* கல்லீரலை பாதிக்கக் கூடிய கார்போஹைட்ரேட்டுகள் உணவுகள், குளிர் பானங்கள், செயற்கை பானங்கள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்றவற்றை தவிருங்கள்.

* ஜங்க் ஃபுட், எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகள் இவற்றை எடுத்துக் கொள்வதை தவிருங்கள்.

* மதுப்பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.

* டிரான்ஸ் கொழுப்பு உணவுகளை தவிருங்கள்

* சிவப்பு இறைச்சி போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளாதீர்கள்

* அதிகமாக உணவில் உப்பு சேர்ப்பது கூட இரத்த சர்க்கரை அளவை உயர்த்தி கல்லீரல் கொழுப்பு நோய், டயாபடீஸ் போன்ற பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது.

* அதிக கிளைசீமிக் குறியீடு கொண்ட உணவுகளை தவிருங்கள். இது உங்க இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து கல்லீரல் கொழுப்பு நோயை உண்டாக்க வாய்ப்புள்ளது.

கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவும் உணவுகள்:

கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவும் உணவுகள்:

மீன்

மீனில் ஓமேகா 3 மற்றும் ஓமேகா 6 போன்ற கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது. இது கல்லீரலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. எனவே சால்மன், கானாங்கெளுத்தி போன்ற மீன் வகைகளை சாப்பிடலாம்.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

வால்நட்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் உள்ளன. இவை கல்லீரலில் தேங்கும் ட்ரை கிளிசரைடு போன்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

காய்கறிகள் மற்றும் பழங்கள்

தினசரி உங்க உணவில் 5 விதமான காய்கறிகள் 3 விதமான பழங்களை சேர்த்து வாருங்கள். காய்கறிகள் மற்றும் பழங்களில் நார்ச்சத்துகள் அதிகளவில் உள்ளன. இது கல்லீரலில் தேங்கும் கொழுப்பை கரைக்க உதவுகிறது.

பூண்டு

பூண்டு

பூண்டில் அல்லிசின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது அழற்சி, நச்சுக்களை வெளியேற்றுதல், கெட்ட கொழுப்புகளை குறைத்தல் போன்ற வேலைகளை செய்கிறது. எனவே உணவில் பூண்டு சேர்ப்பது உங்க கல்லீரலுக்கு சிறந்தது.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இது உங்க உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. எனவே ஒரு நாளைக்கு 3-4 கப் வரை டீ பருகி வரலாம். இதன் மூலம் உங்க கொழுப்புகளை கரைக்க முடியும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ப்ராக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது கல்லீரலில் தேங்கி இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது உங்க கல்லீரலில் அழற்சியை ஏற்படுத்தும் வைரஸ்களில் இருந்தும் கல்லீரலின் கொழுப்பை குறைக்கவும் உதவி செய்கிறது. இதன் மூலம் உங்க கல்லீரலை நீங்கள் ஆரோக்கியமாக வைக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Problems From Fatty Liver

Here are some problems from fatty liver. Read on...
Story first published: Friday, May 15, 2020, 19:54 [IST]
Desktop Bottom Promotion