Latest Updates
-
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க!
கொரோனா குறித்த பிரியாங்கா சோப்ராவின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள உலக சுகாதார அமைப்பு!
செய்திகள்,வாப்ஸ் அப், ட்விட்டர் என எத்தனை இருந்தாலும், கொரோனா வைரஸ் குறித்த சந்தேகம் தீரவே தீராது. அந்த வகையில் நடிகை பிரியங்கா சோப்ரா நமக்கிருக்கும் சில கேள்விகளுக்கு WHO-விடம் பதில் கேட்டுள்ளார்.
ஒட்டுமொத்த உலகையே தனது கோரப்பிடியில் பிடித்து வைத்து, பயத்தின் விளிம்பில் தத்தளிக்க விட்டிருக்கும் இந்த கொடூர COVID-19 எனும் புதிய கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொத்து கொத்தாய் மக்கள் உயிரிழந்து வருவதால், உலக நாடுகளில் நாளுக்கு நாள் பீதி அதிகமாகி கொண்டே போகிறது.

தப்பிக்க வழி எதுவுமே இல்லையா என்பது தான் ஒட்டுமொத்த உலக மக்களின் கேள்வியாக உள்ளது. உலக மக்கள் என்பது சாதாரண மனிதர் முதல் வி.ஐ.பி.கள் வரை அனைவருமே தான். பெரிய பணக்காரர், சினிமா நட்சத்திரம், பிசினஸ் மேன் என்றெல்லாம் இந்த வைரஸ் பாரபட்சம் பார்க்காது. அனைவருமே இதற்கு இரை தான். அதனை வெளிகொணரும் வகையில் உலகளவில் அனைவருக்கும் தெரிந்த பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா ஒரு சிறந்த செயலை செய்துள்ளார்.
அவரும் ஒரு மனித உயிர் தானே. அவருக்கும் இந்த வைரஸ் கண்டு பயம் இருக்கத் தானே செய்யும். எவ்வித வித்தியாசமும் இல்லாமல் உலகில் உள்ள அனைவருமே தற்போது தனிமையில் இருப்பதே நல்லது என நினைத்து வீடுகளிலேயே தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
செய்திகள், மொபைல், வாப்ஸ் அப், ட்விட்டர் என எத்தனை இருந்தாலும், இந்த வைரஸ் குறித்த சந்தேகம் மட்டும் நமக்கு தீரவே தீராது. அந்த வகையில் நம்மில் ஒருவராக, நடிகை பிரியங்கா சோப்ரா நமக்கிருக்கும் சில கேள்விகளில் ஒன்றை உலக சுகாதார மையத்திடம் கேட்டு, பதிலும் பெற்றிருக்கிறார். அதனை படித்து நாமும் நமக்கிருக்கும் சில சந்தேகங்களை போக்கி கொள்ளலாம் வாருங்கள்...

யுனிசெப் பிராண்ட் தூதர்
யுனிசெப்பின் பிராண்ட் தூதராக இருக்கும் உலகளாவிய பிரபல பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ஒரு கோவிட் -19 கேள்வி பதில் சுற்றுக்கு WHO உடன் கைகோர்த்தார். தனது இசையமைப்பாளர் கணவர் நிக் ஜோனாஸுடன் அவர் WHO இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் மற்றும் WHO ஆல் நியமிக்கப்பட்ட கோவிட் -19 க்கான தொழில்நுட்ப முன்னணி இயக்குனர் டாக்டர் மரியா வான் கெர்கோவ் ஆகியோரிடம் சில முக்கியமான கேள்விகளைக் கேட்டார். பிரியங்காவும் நிக் கேட்ட அனைத்து கேள்விகளும் அவற்றின் பதில்களும் இதோ உங்கள் பார்வைக்கு....

பிரியங்கா கணவர் நீரிழிவு நோயாளி
பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ் டைப்-1 நீரிழிவு நோயாளியாவார். தொடக்கத்திலிருந்தே, இந்த சந்தேகம் அனைவருக்குமே உள்ளது. அதாவது, உடலில் ஏற்கனவே ஏதாவது பிரச்சனை உள்ளவர்கள் போன்றவர்களுக்கு கொரானாவின் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பது தான் அது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 80% பேர் ஏற்கனவே உடலில் நீரிழிவு, இதய நோய் போன்ற பிரச்சனை இருந்தவர்களும், வயதானவர்களும் தான்.
அதுமட்டுமல்லாது, இந்த வைரஸ் சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் தான் இதன் முதலாவது இலக்காக அமைந்திடுகின்றனர். பிரியங்கா மற்றும் நிக் கேட்ட கேள்விகளும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்களும் இதோ..

கேள்வி # 1 : முன்பே உடல் நல குறைவு உள்ளவர்கள் பாதுகாப்பிற்காக என்ன செய்ய வேண்டும்?
பதில்: பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு அல்லது முன்பே உடலில் பிரச்சினை உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸின் தாக்கம் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் மோசமானதானவே இருக்கும். இப்போது செய்ய வேண்டிய ஒரே விஷயம் வீட்டிலேயே இருப்பது தான். அனைவருக்கும் புரிந்திருப்பதன் அடிப்படையில், இந்த வைரஸ் தொற்றை யார் கொண்டு வருகிறார்கள் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது என்பதால், இந்த நாட்களில் சுய தனிமைப்படுத்தல் மிகவும் அவசியம். இதனை யாராலும் வெல்ல முடியாது என்பதால் இளைஞர்கள் கூட வீட்டிலேயே இருப்பது தான் நல்லது.

கேள்வி # 2 : கொரோனா வைரஸ் காற்றில் பரவக்கூடியதா?
பதில்: இந்த வைரஸ் காற்று வழியாக பரவுகிறது என்ற தகவல் கூறப்படுகிறது. ஆனால் அது முற்றிலும் தவறு. இது காற்றில் பரவும் வைரஸ் அல்ல. ஆனால் பரவுதல் பிற பொருட்கள் மூலம் நிகழலாம். அதாவது, இந்த வைரஸ் எந்த மேற்பரப்பின் மீதும் வாழ முடியும், ஆனால் அந்த மேற்பரப்பைத் தொட்டால் நீங்கள் நிச்சயமாக பாதிக்கப்பட முடியாது. இது உங்களது நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றலை அடிப்படையாக கொண்டது. இதைத் தடுக்க, WHO வகுத்த சுகாதாரம் மற்றும் கை கழுவுதல் நெறிமுறைகளை ஒருவர் முறையாக பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு இதுவேயாகும்.

கேள்வி # 3 : கொரோனா வைரஸ் மீண்டும் தாக்குமா?
பதில்: குணமடைந்த பிறகு ஒருவரை கொரோனா வைரஸ் மீண்டும் தாக்குமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், அவை தொற்றுநோய்க்குப் பிறகு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடும்.

கேள்வி # 4 : இந்த வைரஸ் அதிக வெப்பநிலையில் கூட பரவ முடியுமா?
பதில்: இந்த கேள்விக்கு உறுதியான பதிலை அளிக்க ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். இந்த வைரஸ் குளிர் மற்றும் ஈரப்பதம் உள்ளிட்ட வெவ்வேறு காலநிலைகளில் பரவியுள்ளது. மேலும், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், அதற்கு இன்னும் 12 முதல் 18 மாதங்கள் ஆகலாம்.



Click it and Unblock the Notifications