For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வலது பக்க வயிறு வலிக்குதா? என்ன பிரச்சனை இருந்தா அங்க வலிக்கும் தெரியுமா?

உங்கள் அடிவயிற்றின் வலது பக்கத்தில் வலியை உணர்கிறீர்களா? ஒருவரது வலது பக்க அடிவயிற்று பகுதியில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

|

உங்கள் அடிவயிற்றின் வலது பக்கத்தில் வலியை உணர்கிறீர்களா? ஒருவரது வலது பக்க அடிவயிற்று பகுதியில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. லேசான வயிற்று வலியை சந்தித்தால் எளிதில் சிகிச்சை அளித்து சரிசெய்துவிடலாம். ஆனால் வலியானது மிகவும் தீவிரமாக தொடர்ந்து இருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் அது உடலில் உள்ள கடுமையான பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

Possible Causes Of The Pain In Your Lower Right Abdomen

கீழே அடிவயிற்றில் வலது பக்கத்தில் வலி எந்த காரணங்களுக்காக வலிக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, உங்களுக்கும் இம்மாதிரியான வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

MOST READ: கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடல்வால் அழற்சி/குடல் அழற்சி

குடல்வால் அழற்சி/குடல் அழற்சி

குடல்வால் அழற்சி இருந்தால், அடிவயிற்றின் வலது பக்கத்தில் வலியை சந்திக்கக்கூடும். எப்போது குடல் வால் பகுதியில் அழற்சி ஏற்பட்டு, சீழ் நிறைந்திருக்கிறதோ, அப்போது இம்மாதிரியான வலியை அனுபவிக்கக்கூடும். வழக்கமாக இம்மாதிரியான வலி அடிவயிற்றின் நடுப்பகுதியில் தொடங்கி, பின் மெதுவாக வலது பக்கத்தில் பயணித்து மிகவும் கடுமையானதாக்கிவிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் இருமல் மற்றும் சிறு நடைப்பயிற்சியை மேற்கொண்டாலும் அது கடுமையான வலியை உண்டாக்கும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்று உப்புசம், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை இதன் பிற அறிகுறிகளாகும்.

அஜீரண கோளாறு

அஜீரண கோளாறு

அடிவயிற்றின் வலது பக்கத்தில் வலியுடன், நெஞ்செரிச்சல் மற்றும் உப்புசத்தை சந்தித்தால், அஜீரண கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். இம்மாதிரியான அஜீரண பிரச்சனையானது உணவு அல்லது பானங்களால் ஏற்படும். லேசான அஜீரண கோளாறாக இருந்தால் எளிதில் சிகிச்சை அளித்து சரிசெய்யலாம். ஆனால் 2 வாரத்திற்கும் அதிகமாக அறிகுறிகளை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

குடலில் வாயு தேக்கம்

குடலில் வாயு தேக்கம்

குடல் பகுதியில் வாயு அதிகமாக தேங்கினால், அது உப்புசத்தை உண்டாக்குவதோடு, அடிவயிற்றுப் பகுதியில் வலியையும் ஏற்படுத்தும், வழக்கமாக இம்மாதிரியான அறிகுறிகளை தானாக சரியாகிவிடும். ஆனால் தொடர்த்து நீடித்திருந்தால், அது லாக்டோ சகிப்புத்தன்மை போன்ற சில தீவிரமான பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள்

சிறுநீரகங்களில் தாதுக்கள் மற்றும் உப்புக்களின் பெருக்கத்தினால் உருவாவது தான் சிறுநீரக கற்கள். வழக்கமாக சிறுநீரின் அடர்த்தி அதிகமாக இருக்கும் போது, சிறுநீரக கற்கள் உருவாகின்றன. இந்த கற்களின் அளவைப் பொறுத்து வலியின் தீவிரம் வேறுபடும். சிறுநீரக கற்களானது உடல் பருடன், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் சில மருத்துவ நிலைகளால் உண்டாகும்.

சிறுநீரக தொற்று

சிறுநீரக தொற்று

சிறுநீரகங்களில் தொற்று இருந்தால், அடிவயிற்றின் வலது பக்கத்தில் வலியை அனுபவிக்கக்கூடும். பெரும்பாலான நேரங்களில் வலி மிகவும் தீவிரமாக இருப்பதில்லை. இருப்பினும், சிக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், லேசான வலியை அனுபவிக்கும் போதே மருத்துவரை அணுகுவதே நல்லது. குமட்டல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, பசியின்மை, சிறுநீரில் இரத்தம், துர்நாற்றமிக்க சிறுநீர் போன்றவை சிறுநீரக தொற்றின் பிற அறிகுறிகளாகும்.

எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி

எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி

எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி என்பது பெருங்குடலை பாதிக்கும் ஒரு நாள்பட்ட கோளாறு ஆகும். வயிற்று வலி, வயிற்று உப்புசம், வாய்வு, வயிற்றுப்போக்கு போன்றவை இதன் பிற அறிகுறிகளாகும்.

ஹெர்னியா

ஹெர்னியா

உடலின் உள்பகுதி ஒரு தசை அல்லது திசு வழியாக வெளியே தள்ளி சிறிய கட்டி போன்றவை ஏற்படுத்தும் போது குடலிறக்கம் என்னும் ஹெர்னியா ஏற்படுகிறது. இவை பொதுவாக அடிவயிற்றுப் பகுதியைச் சுற்றி நிகழ்கின்றன மற்றும் இவை தீங்குவிளைவிக்காதவை. இருப்பினும், சிலருக்கு இது கடுமையான வலியை உண்டாக்கலாம்.

உடலியல் வேறுபாடு

உடலியல் வேறுபாடு

ஆண் மற்றும் பெண்களின் அடிவயிற்றுகளுக்கு இடையிலான உடற்கூறியல் வேறுபாடுகள் காரணமாக, பெண்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அடிவயிற்றின் வலது பக்கத்தில் வலியை அனுபவிக்கலாம். அதில் மாதவிடாய் பிடிப்புகள், கருப்பை நீர்க்கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ், இடுப்பு அழற்சி நோய், கருப்பை முறிவு மற்றும் எக்டோபிக் கர்ப்பம் ஆகியவை அடங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Possible Causes Of The Pain In Your Lower Right Abdomen

Mild stomach pain can be treated easily, but in severe cases, it could be an indication of a bigger problem. Here are the possible causes of the pain in your lower right abdomen.
Desktop Bottom Promotion