For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆலிவ் ஆயில் Vs வெஜிடபிள் ஆயில்: இவற்றில் உண்மையிலேயே ஆரோக்கியமானது எது?

பெரும்பாலானோர் தங்களது உணவுகளில் விரும்பி பயன்படுத்துவது வெஜிடபிள் ஆயில் மற்றும் ஆலிவ் ஆயிலை தான். இவை இரண்டு வகை எண்ணெய்களும் பலவகையான உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

|

நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் எண்ணெய் ஒரு குறிப்பிடத்தக்க முக்கிய இடத்தை வகிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதை போல, எண்ணெயும் ஒரு முக்கிய பொருளாக மாறிவிட்டது. அதிலும், பிற உணவுகளை விட எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அது தவிர, குழம்பு வகைகள் முதல் கேக் வகைகள் வரை அனைத்திலுமே எண்ணெய் இடம் பிடிக்கிறது. நாம் தயாரிக்கும் பல வகையான உணவுகளில் எண்ணெய் ஒரு பகுதியாக இருப்பதாலும் கூட, அதன் தரம் மற்றும் ஆரோக்கிய தன்மையை அறிந்து பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது.

Olive Oil vs. Vegetable Oil: Which One Is Healthier

தற்போது சந்தைகளில் ஏராளமான சமையல் எண்ணெய் வகைகள் கிடைக்கின்றன. சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், வெஜிடபிள் எண்ணெய், ஆலிவ் ஆயில் போன்ற ஏராளமான சமையல் எண்ணெய் வகைகள் உள்ளன. இருப்பினும், பெரும்பாலானோர் தங்களது உணவுகளில் விரும்பி பயன்படுத்துவது வெஜிடபிள் ஆயில் மற்றும் ஆலிவ் ஆயிலை தான். இவை இரண்டு வகை எண்ணெய்களும் பலவகையான உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த 2 எண்ணெய்களை பற்றி மேலும் சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்.

MOST READ: உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருக்கா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இல்லன்னா மோசமாயிடும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் என்பது ஆலிவ் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். அதன் பயன்பாடு 6,000 ஆண்டுகளுக்கு முப்பிருந்தே காணப்படுகிறது. குறிப்பாக, ஈரான், சிரியா மற்றும் பாலஸ்தீனத்தில் இருந்து, மத்தியதரைக் கடலுக்குச் செல்வதற்கு முன்பு வரை, அதன் ஆலிவ் தோட்டங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. வரலாற்று ரீதியாக, ஆலிவ் எண்ணெயானது மத விழாக்களிலும், மருத்துவத்திலும் கூட பயன்படுத்தப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் இது பல்வேறு கலாச்சாரங்களில் ஒரு முக்கிய உணவு ஆதாரமாகவும் மாறியுள்ளது என்றே கூற வேண்டும். தற்போது, மூன்று வகையான ஆலிவ் எண்ணெய் சந்தைகளில் கிடைக்கிறது. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில், ஆலிவ் ஆயில் மற்றும் லைட் டேஸ்டிங் ஆலிவ் ஆயில்.

தாவர எண்ணெய் (வெஜிடபிள் ஆயில்)

தாவர எண்ணெய் (வெஜிடபிள் ஆயில்)

தாவர எண்ணெய்கள் பெரும்பாலும், தாவரங்களின் சாற்றினை சுத்திகரிப்பதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. அவை அறை வெப்பநிலையில் திரவ வடிவில் இருக்கும். பல்வேறு வகையான தாவரங்களில் இருந்து எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், பொதுவாக தாவர விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. காய்கறி எண்ணெயானது ஒரு மூலப்பொருள் அல்லது பலவற்றின் கலவையிலிருந்தும் கூட தயாரிக்கப்படலாம். வெவ்வேறு எண்ணெய்களின் வகைகள் அவை எடுக்கப்படும் தாவர விதைகளைப் பொறுத்ததாகும். பனை, சோயாபீன், சூரியகாந்தி, வேர்க்கடலை, பருத்தி, தேங்காய், ஆலிவ், சோள எண்ணெய் போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டுகளாக கூறலாம்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் தாவர எண்ணெய்: வேறுபாடுகள்

ஆலிவ் எண்ணெய் மற்றும் தாவர எண்ணெய்: வேறுபாடுகள்

ஆதாரம்

தாவர எண்ணெய்களின் ஆதாரம் தாவர விதைகள் அல்லது கொட்டைகளாகும். மறுபுறம், ஆலிவ் எண்ணெய் ஆலிவ் பழங்களில் இருந்து பெறப்படுகிறது.

சுவை

சுவை

பொதுவாக, தாவர எண்ணெயில் சாதுவான அல்லது சுவையே இருக்காது என்பது தான் உண்மை. அதுவே, ஆலிவ் எண்ணெயை எடுத்துக் கொண்டால், அது பயன்படுத்தப்பட்ட உணவுகளில் எப்போதும் தனித்துவமான சுவையை கொண்டிருக்கும்.

வெப்பநிலை

வெப்பநிலை

புகை புள்ளியைப் பற்றி பேசும் போது (எண்ணெய் புகைக்கத் தொடங்கும் வெப்பநிலை), தாவர எண்ணெய் 200 டிகிரி செல்சியஸ் முதல் 250 டிகிரி செல்சியஸ் வரை புகைக்கத் தொடங்குகிறது. ஆலிவ் எண்ணெய்க்கான புகை புள்ளி 190 முதல் 240 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

பயன்பாடு

பயன்பாடு

ஆலிவ் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தப்படுவது மட்டுமின்றி சருமத்திற்கும் நல்லது. மேலும், பல்வேறு மருத்துவ நோக்கங்களுக்காகவும், மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது, சில மருந்துகளைத் தயாரிப்பது போன்ற சில பயன்பாடுகளையும் இது கொண்டுள்ளது. மறுபுறம், தாவர எண்ணெய்கள் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பிற பயன்பாடுகளில், எரிபொருள், அழகுசாதனப் பொருட்கள், மருத்துவம் மற்றும் தொழில்துறை நோக்கங்களும் அடங்கும்.

ஆரோக்கிய நன்மைகள்

ஆரோக்கிய நன்மைகள்

ஆலிவ் மற்றும் தாவர எண்ணெய்கள் இரண்டிலும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் (அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்) உள்ளன. ஆலிவ் எண்ணெயில் அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. காய்கறி எண்ணெயில் பெரும்பாலும் ஒமேகா -6 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அழற்சி எதிர்ப்பு மற்றும் இதய ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் ஒமேகா -6 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அழற்சியை ஏற்படுத்தக்கூடியவை மற்றும் அதிகமாக சாப்பிட்டால் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.

மேலும், ஒரு எண்ணெயை எந்த அளவிற்கு சுத்திகரிக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு, குறைவான நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கலவைகள் தக்க வைத்துக் கொள்கின்றன. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெயானது, குறைந்த அளவு பதப்படுத்தப்பட்ட வகை ஆலிவ் ஆயிலாகும். எனவே, அவற்றில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் நிறைந்துள்ளது. மறுபுறம், காய்கறி எண்ணெயை தயாரிக்க பயன்படும் அதிகப்படியான சுத்திகரிப்பு செயல்முறைகளால், நுண்ணூட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நன்மை பயக்கும் தாவர சேர்மங்கள் அழிக்கப்படுகின்றன.

சரி, எந்த எண்ணெய் ஆரோக்கியமானது?

சரி, எந்த எண்ணெய் ஆரோக்கியமானது?

ஆலிவ் ஆயிலின், எக்ஸ்ட்ரா வெர்ஜின் வகையானது, குறைந்த பதப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களில் ஒன்று. இதன் என்ன அர்த்தம்? அது அதிக அளவிலான ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தன்னுள் தக்க வைத்திருக்கிறது. ஆனால், காய்கறி எண்ணெய், அதன் சுவையை நடுநிலையாக்குவதற்காக நிறைய செயலாக்கங்களுக்கு உட்படுத்தப்படுவதோடு, பல்வேறு வகையான தாவர எண்ணெய்களின் கலவையாகவும் காணப்படுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், குறைந்த நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதிக கலோரிகளை இது கொண்டுள்ளது.

முடிவுரை

முடிவுரை

வெஜிடபிள் எண்ணெயுடன் ஒப்பிடும் போது, ஆலிவ் ஆயிலானது மிகவும் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒன்றாக தான் திகழ்கிறது. இருப்பினும், அவை அதிகப்படியான விலையில் விற்கப்படுவதால் தான் பெரும்பாலானோரால் அதனை உபயோகிக்க முடிவதில்லை. எனவே, நம் உடலை பாதுகாக்க எந்த எண்ணெயை பயன்படுத்தினாலும், சரியான விகித்தத்தில் அளவோடு பயன்படுத்துவோம். ஆரோக்கியமான வாழ்ந்திடுவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Olive Oil vs. Vegetable Oil: Which One Is Healthier

Two of the most common and preferred oils are olive oil and vegetable oil. Both of them are used in a variety of dishes and are an integral part of them. But which one is healthier? Read on...
Desktop Bottom Promotion