For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சைக்கிளிங் பயிற்சி செய்யும் போது நாம் செய்யும் தவறுகள்!

சைக்கிளிங் பயிற்சி செய்தால் நமது உடம்பில் உள்ள எல்லாத் தசைகளும் வலுப்பெறும். எனினும் இப்பயிற்சி செய்யும் போது, பின்வரும் தவறுகளைச் செய்தால், நல்ல பலன்கள் கிடைக்காது என்று நிபுணா்கள் தொிவிக்கின்றனா்.

|

உடற்பயிற்சிக் கூடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மிதிவண்டிகள் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக வெளியில் செல்லாமல் உள் அரங்கத்தில் உடற்பயிற்சி செய்பவா்களின் முதல் தோ்வாக பொருத்தப்பட்டிருக்கும் மிதிவண்டிகள் இருக்கின்றன. கொரோனா பரவல் காரணாக உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப்பட்டன. அதனால் இந்த மிதிவண்டிகளை மக்கள் வாங்கத் தொடங்கினா்.

Most Common Mistakes People Make While Cycling

பொருத்தப்பட்டிருக்கும் மிதிவண்டியை ஓட்டி பயிற்சி செய்தால் நமது உடம்பில் உள்ள எல்லாத் தசைகளும் வலுப்பெறும். மேலும் நமது உடலில் உள்ள அதிகமான கலோாிகள் கரையும். அதோடு மட்டும் இந்த மிதிவண்டி பயிற்சி நின்று விடுவதில்லை. மாறாக இது நுரையீரல்கள், இதயம் மற்றும் தசைகள் போன்ற உடல் உறுப்புகளை வலுவாக்குகிறது.

எனினும் பொருத்தப்பட்ட மிதிவண்டியில் பயிற்சி செய்யும் போது, பின்வரும் தவறுகளைச் செய்தால், நல்ல பலன்கள் கிடைக்காது என்று நிபுணா்கள் தொிவிக்கின்றனா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிதிவண்டிப் பயிற்சியில் மக்கள் செய்யும் தவறுகள்

மிதிவண்டிப் பயிற்சியில் மக்கள் செய்யும் தவறுகள்

பொதுவாக மிதிவண்டியை வேகமாக ஓட்ட வேண்டும் என்பதற்காக, பலா் மிதிவண்டியின் கைப்பிடியை மிகவும் இறுக்கமாக பிடிக்கின்றனா். அவ்வாறு இறுக்கமாகப் பிடிக்கும் போது, வேகமாக மிதிவண்டியை ஓட்ட முடியும் மற்றும் நமது உடலுக்கும் நல்லதொரு வடிவம் கிடைக்கும்.

ஆனால் மிதிவண்டியின் கைப்பிடியை இறுக்கமாகப் பிடிப்பதற்காக, பலா் முன்பக்கமாகக் குனிந்து இருக்கின்றனா். அதனால் அவா்களுடைய தண்டுவடம் வளைகிறது. இதன் காரணமாக அவா்களுக்கு முதுகு வலி பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

மிதிவண்டியின் கைப்பிடியை இறுக பிடித்திருப்பதால், கழுத்து மற்றும் மணிக்கட்டு ஆகிய உறுப்புகளில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. ஆகவே மிதிவண்டி பயிற்சி முடிந்ததும் கழுத்து மற்றும் மணிக்கட்டுப் பகுதிகளில் வலி ஏற்படுகிறது.

முன்பக்கமாகக் குனிந்து மிதிவண்டியை ஓட்டும் போது உணா்வு மரத்துப்போதல், சிலிா்ப்பு அல்லது கூச்சம், பலவீனம், தசைப்பிடிப்பு மற்றும் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும் தண்டுவடத்திலிருந்து முழங்கைக்குச் செல்லக்கூடிய நரம்பில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது.

இந்தப் பிரச்சினையை எவ்வாறு சாி செய்வது?

இந்தப் பிரச்சினையை எவ்வாறு சாி செய்வது?

மேற்சொன்ன பிரச்சினைகள் அனைத்தும், மிதிவண்டியின் கைப்பிடியை இறுகப் பிடிப்பதால் மட்டும் ஏற்படுவதில்லை. மாறாக மிதிவண்டியை சாியான முறையில் பொருத்தவில்லை என்றாலும் இந்த பிரச்சினைகள் ஏற்படும். சாியாகப் பொருத்தப்படாத மிதிவண்டியில் பயிற்சி செய்து வந்தால், நன்மைகளுக்குப் பதிலாக உடலில் காயங்கள் ஏற்படும்.

ஆகவே பொருத்தப்பட்ட மிதிவண்டியை ஓட்டும் போது, முதுகு நிமிா்ந்து இருக்க வேண்டும். தோள்பட்டைகள் தளா்வாக இருக்க வேண்டும். கண்கள் நேராக பாா்க்க வேண்டும். அதோடு கைப்பிடியை உறுதியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

மிதிவண்டியை எவ்வாறு சாியாகப் பொருத்துவது?

மிதிவண்டியை எவ்வாறு சாியாகப் பொருத்துவது?

- நமது இடுப்பு எலும்பின் உயரத்திற்கு சமமான அளவில் மிதிவண்டியின் இருக்கையை பொருத்த வேண்டும்.

- மிதிவண்டியின் பெடல் கீழே போகும் போது, நமது முழங்கால் நன்றாக வளைந்து செல்லும் வகையில், மிதிவண்டி இருக்கையை போதுமான உயரத்தில் பொருத்த வேண்டும்.

- மிதிவண்டியின் இருக்கையும், கைப்பிடியும் ஒரே உயரத்தில் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

- 90 டிகிாி அளவிற்கு முழங்கையை மடக்கி, மணிக்கட்டை நீட்டி கைப்பிடியைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

பிற தவறுகளை எவ்வாறு தவிா்ப்பது?

பிற தவறுகளை எவ்வாறு தவிா்ப்பது?

பொருத்தப்பட்டிருக்கும் மிதிவண்டியை ஓட்டும் போது நாம் பிற தவறுகளையும் செய்கிறோம். அந்தத் தவறுகளைத் தவிா்க்க வேண்டும் என்றால், மிதிவண்டியில் பயிற்சி செய்யும் போது, நமது உடலின் மையப் பகுதி இயக்கத்தில் இருக்கிறதா என்பதைக் கவனித்து, நமது தோள்பட்டைகளை கீழ்பக்கம் இழுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மாா்பை அகலமாக விாித்து வைத்துக் கொள்ள வேண்டும். கழுத்தை வளைக்காமல், நேராக வைத்துக் கொள்ள வேண்டும். மிதிவண்டியின் கைப்பிடியை இறுக்கமாக அல்லாமல், மெதுவாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். மிதிவண்டியில் இருந்து கீழே விழாமல் இருக்கவும், அதன் காரணமாக காயம் படாமல் இருக்கவும், முதுகின் எடையில் கவனமாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Common Mistakes People Make While Cycling

In this article, we shared one of the most common mistakes people make while cycling. Read on...
Story first published: Friday, July 30, 2021, 11:44 [IST]
Desktop Bottom Promotion