For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவருக்கு கொரோனா வந்துட்டா, இந்த பிரச்சனையை வாழ்நாள் முழுக்க சந்திக்க வாய்ப்பிருக்காம்...

கொரோனா வைரஸ் சில நிரந்தர மற்றும் பாதகமான வீழ்ச்சிகளையும் உண்டாக்கலாம். குறிப்பாக, கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கும் ஏற்படலாம்.

|

கொரோனா வைரஸ் தொற்றிற்கு சிகிச்சை அளிக்க பல புதிய வழிகளை விஞ்ஞானிகள் மிகவும் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். இந்த கொடிய வைரஸ் தொற்றுநோய் குறைவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை மற்றும் இதைக் கட்டுப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் மீறி வைரஸ் பரவுவதாக தான் தெரிகிறது. அதோடு புதிய அறிகுறிகளும் தொடர்ந்து மருத்துவர்களால் கூறப்படுகின்றன. மேலும் புதிய சிக்கல்களைப் பற்றியும் அடிக்கடி மருத்துவர்களால் கூறப்பட்டும் வருகிறது.

Lung Scarring And Vascular Damage May Be The Permanent Fallouts Of COVID-19 Infection

இந்த வைரஸ் தொற்று வயதானவர்களுக்கு மற்றும் உடல்நல பிரச்சனைகளைக் கொண்டவர்களுக்கு மிகவும் மோசமான சிக்கல்களை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் தற்போது பரவும் கொரோனா வைரஸ் முன்னர் பரவியதைப் போன்ற அமைப்பில் இருந்து சற்று மாறுபட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

MOST READ: எப்படியோ கொரோனாவால் ஏற்படும் இறப்பைத் தடுக்க மருந்து கண்டுபிடிச்சாச்சு... இனி பயப்பட தேவையில்ல...

மேலும் இந்நோயின் மற்றொரு தனித்தன்மையாக பல நிபுணர்கள் கூறுவது, இந்த வைரஸ் தொற்று இருப்பதை சோதித்து நெகடிவ் வந்த பிறகும், சில சமயங்களில் அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும் என்பதே உண்மை. அதோடு இது சில நிரந்தர மற்றும் பாதகமான வீழ்ச்சிகளையும் உண்டாக்கலாம். குறிப்பாக, கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கும் ஏற்படலாம். கீழே எம்மாதிரியான பிரச்சனைகளை வரலாம் என்பது கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நுரையீரல் வடு

நுரையீரல் வடு

கொரோனாவில் இருந்து மீண்ட பல நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் தொடர்ந்து இருப்பதாக தெரிவிக்கின்றனர். அவர்களை பரிசோதித்ததில், அவர்களின் நுரையீரலில் வடுக்கள் இருப்பது தெரிய வந்தது. கொரோனாவில் இருந்து தப்பிய 70 நோயாளிகளுக்கு சிடி ஸ்கேன் செய்த போது, அவர்களுள் 66 பேருக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பதாக கதிரியக்கவியல் பற்றிய ஒரு அறிக்கை கூறுகிறது. இந்த பாதிப்பு வயதினரைப் பொருட்படுத்தாமல் யாருக்கும் ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தசை இழப்பு

தசை இழப்பு

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டர்களில் இருக்கும் பல நோயாளிகளுக்கு உடலில் குறிப்பிட்ட தசை இழப்பு ஏற்படக்கூடும். சில நேரங்களில், நிலைமை மிகவும் மோசமாக இருக்கலாம். அதாவது விழுங்குதல் மற்றும் குணமான பின்னர் நடப்பது போன்ற அடிப்படை செயல்பாடுகளுக்கு கூட உதவி தேவைப்படலாம். ஆனால் சரியான சிகிச்சையால், அவர்களின் தசை இழப்பைத் தடுக்கலாம். ஆகவே, இது உண்மையில் ஒரு நிரந்தர வீழ்ச்சி அல்ல. ஆனால் வயதானவர்களுக்கு, இது நிரந்தரமாக மாறக்கூடும்.

சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரக செயலிழப்பு

COVID-19 இல் இருந்து மீண்ட பிறகு வெண்டிலேட்டரில் இருந்த நோயாளிகளுக்கு நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட 30 சதவீதம் இருப்பதாக தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நோயாளிகளுக்கு தொற்றில் இருந்து மீண்ட பிறகு டயாலிசிஸ் அவசியமாக இருக்கலாம். இந்த நோயாளிகளின் உடலில் வைரஸை வெளியேற்றிய பின்னர் எவ்வளவு சிறுநீரக செயல்பாட்டை மீட்டெடுக்க முடியும் என்பது குறித்து விஞ்ஞானிகளுக்கு தெளிவாக தெரியவில்லை. ஆனால் சிறுநீரகத்தில் ஏற்படும் சேதம் மிகவும் வலுவானதாக இருக்க வாய்ப்புள்ளது.

கால்களில் வாஸ்குலர் சேதம்

கால்களில் வாஸ்குலர் சேதம்

இரத்த உறைவு என்பது கொரோனாவால் ஏற்படும் மற்றொரு சிக்கலாகும். கால்களில் இரத்த உறைவு ஏற்பட்டால், அது கால்களில் உள்ள நரம்புகளின் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும். கால்ளில் இரத்த ஓட்டம் குறைந்தால், கீல்வாதம் மற்றும் கால்களில் நிரந்தரமாக பலவீனப்படுத்தும் நிலைமைகளுக்கு வழிவகுத்துவிடும்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டால், சிறுநீரக பாதிப்பு ஒரு உண்மையான ஆபத்து. இந்த வைரஸ் தமனிகளுக்கான இரத்த நாளத்தில் சேதத்தை ஏற்படுத்தி, சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். மேலும் இது, உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய வேதியியல் எதிர்வினைகளின் சங்கிலியை இயக்கங்களில் அமைக்கிறது. இதய நோய் மற்றும் பக்கவாதம் தான் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இந்த சிக்கல்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

 கைகால்களில் உணர்வின்மை

கைகால்களில் உணர்வின்மை

கொரோனா தொற்றின் விளைவாக உடலில் இரத்த ஓட்டம் பலவீனமாகி, அடிக்கடி கைகால்களில் உணர்வின்மையை சந்திக்கலாம். மேலும் பல நோயாளிகள் இந்த பிரச்சனையை தெரிவித்துள்ளனர். அவர்களை பரிசோதித்ததில், சி.டி ஸ்கேன் மற்றும் நுரையீரல் எக்ஸ்-ரேயில் அவர்களுக்கு கூடுதல் தொற்று ஏற்பட்டிருப்பது எதுவும் காட்டப்படவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lung Scarring And Vascular Damage May Be The Permanent Fallouts Of COVID-19 Infection

Sometimes patients may experience symptoms even after they recover from the COVID-19 infection. This may indicate some permanent fallouts like lung scarring, kidney failure and more.
Desktop Bottom Promotion