For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பானை மாதிரி இருக்க உங்க தொப்பை கொழுப்பை குறைக்க இஞ்சியோடு இந்த பொருளை சேர்த்து சாப்பிட்டா போதுமாம்!

|

கோடைக்காலத்தில் இஞ்சியை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றில் கோளாறு அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படும் என்பது பொதுவான கட்டுக்கதை. இஞ்சியில் ஒரு சூடான ஆற்றல் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இது செரிமான அமைப்பை பாதிக்கும் மற்றும் தேவைக்கு அதிகமாக உட்கொண்டால் உடல் சூட்டை அதிகரிக்கும். உண்மையில், எதையும் அதிகமாக உட்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். உடல் பருமன் அல்லது தொப்பை இன்றைய மக்களின் பெரிய பிரச்சனையாக உள்ளது.

தொப்பையை குறைக்க மக்கள் பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். உங்கள் உடல் இழப்பு பயணத்தில் இஞ்சி என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். வெப்பமான காலநிலையைப் பொருட்படுத்தாமல் அதிகப்படியான தொப்பை கொழுப்பை இஞ்சி கரைக்க முடியும். அவற்றை பற்றி தெரிந்துகொள்ள இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி கொழுப்பைக் கரைக்குமா?

இஞ்சி கொழுப்பைக் கரைக்குமா?

உயிரியல் ரீதியாக ஜிங்கிபர் அஃபிசினேல் என்று அழைக்கப்படும் இஞ்சி ஒரு பூக்கும் தாவரத்தின் சமையல் மசாலா ஆகும். இது தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தது. சமையல் மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக இஞ்சி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த சூடான மசாலா ஒரு சூடான ஆற்றலைக் கொண்டுள்ளது. இது சரியான முறையில் எடுத்துக்கொண்டால் எடை இழப்புக்கு உதவும். உண்மையில், இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொழுப்பைக் கரைக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், மலச்சிக்கலை சரிசெய்யவும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தவும் நன்றாக வேலை செய்கின்றன.

கோடைகாலத்தில் இஞ்சி சாப்பிடலாமா?

கோடைகாலத்தில் இஞ்சி சாப்பிடலாமா?

இஞ்சியில் பல்வேறு நன்மைகள் நிறைந்திருந்தாலும், கோடை காலத்தில் ஒருவர் 3-4 கிராமுக்கு மேல் இஞ்சியை எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், இது உடல் சூட்டை அதிகரிக்கும் மற்றும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், இஞ்சியில் ஜின்ஜெரால் என்ற கலவை உள்ளது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது சேதமடைந்த செல்களை சரிசெய்ய உதவுகிறது மற்றும் பல வகையான புற்றுநோய்களைத் தடுக்கிறது.

இஞ்சியுடன் தொப்பையை கரைக்கும் ரகசிய மூலப்பொருள்?

இஞ்சியுடன் தொப்பையை கரைக்கும் ரகசிய மூலப்பொருள்?

நீங்கள் இஞ்சி டீயை உட்கொண்டாலும் அல்லது சாலட், பானங்கள் அல்லது உங்கள் காய்கறிகளில் சேர்த்து பச்சையாக ருசித்தாலும், இஞ்சி அனைத்திலும் நன்றாக இருக்கும். ஆனால் நீங்கள் வயிற்று கொழுப்பைக் குறைக்கவும் எடையைக் குறைக்கவும் முயற்சிக்கிறீர்கள் என்றால், இந்த மசாலா மூலிகையை எலுமிச்சையுடன் இணைக்கவும். அப்போதுதான், இது அற்புதங்களைச் செய்யும்.

எடை இழப்புக்கு உதவுகிறது

எடை இழப்புக்கு உதவுகிறது

எலுமிச்சையில் வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது இஞ்சியுடன் இணைந்து விரைவாக உடல் எடையை குறைக்க உதவும். நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் ஒரு ஆய்வு மற்றும் அதன் 2017 மதிப்பாய்வின் படி, செயலில் உள்ள சேர்மங்கள் -- இஞ்சியில் உள்ள ஜிங்கரோன் மற்றும் ஷோகோல்ஸ் எடை இழப்புக்கு உதவக்கூடும் என்று தெரிவிக்கின்றன.

இஞ்சியை சாப்பிடுவதற்கான சரியான வழி

இஞ்சியை சாப்பிடுவதற்கான சரியான வழி

வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துவதன் மூலம் எடை இழப்பு செயல்முறையை அதிகரிக்க இரண்டையும் இணைக்க பல வழிகள் உள்ளன. தொப்பை கொழுப்புக்கு ஏற்ற சில சமையல் குறிப்புகள் பற்றி இங்கே காணலாம். இஞ்சி பானத்தை தயாரிக்க, 1 தேக்கரண்டி துருவிய இஞ்சியை எடுத்து 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் சேர்த்து, 1 லிட்டர் வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். அதை நன்றாக குலுக்கி, நாள் முழுவதும் பருகவும்.

உடல் எடையை குறைக்க எளிதான இஞ்சி ரெசிபிகள்

உடல் எடையை குறைக்க எளிதான இஞ்சி ரெசிபிகள்

இஞ்சி டீ

2 கப் தண்ணீர் எடுத்து 1 டீஸ்பூன் துருவிய இஞ்சியை சேர்க்கவும். தண்ணீரை கொதிக்கவைத்து, பானத்தை வடிகட்டி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை சேர்க்கவும். இதை நன்றாகக் கலந்து மதிய உணவிற்குப் பிறகு குடித்தால் வாயுத் தொல்லையும் குறையும்.

இஞ்சி மிட்டாய்கள்

இஞ்சி மிட்டாய்கள்

இந்த ஆரோக்கியமான சுவையான மிட்டாய் எப்போது வேண்டுமானாலும் சுவைக்கலாம். இஞ்சியை சிறிது தடிமனான துண்டுகளாக அல்லது சிறிய சிறிய க்யூப்ஸாக வெட்டவும். அடுத்து, ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து 1 கப் எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி கருப்பு மிளகு, 1 தேக்கரண்டி ஆம்சூர் தூள் மற்றும் கல் உப்பு சேர்க்கவும். பின்னர், இஞ்சி க்யூப்சை மசாலாவில் ஊற வைக்கவும். வெயிலில் காய வைக்கவும். இப்போது சுவையான இஞ்சி மிட்டாய் தயார். மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பின் இந்த இஞ்சி மிட்டாயை சாப்பிடவும்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

நீங்கள் ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது வயிற்றுப் புண்களால் அவதிப்பட்டால், இஞ்சி நிலைமையை மோசமாக்கும் என்பதால், இந்த வைத்தியங்களைச் சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. மேலும், ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்களும் இஞ்சி சேர்ப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lemon and ginger detox tea to burn belly fat naturally in tamil

Lemon and ginger detox tea recipe: Here we are talking how to make lemon ginger detox tea to melt belly fat naturally in tamil.
Story first published: Wednesday, June 8, 2022, 12:44 [IST]
Desktop Bottom Promotion