Just In
- 19 min ago
திருமணத்துக்கு முன்னாடி உங்களுக்கு இருக்கும் இந்த பிரச்சனையை எப்படி கையாளுனும் தெரியுமா?
- 1 hr ago
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி உங்கள் காதின் வடிவம் உங்களை பற்றி கூறும் ரகசியம் என்ன தெரியுமா?
- 2 hrs ago
ஒரு நாளில் 1000 கலோாிகளை எாிப்பது எப்படி தெரியுமா?
- 7 hrs ago
இன்றைய ராசிப்பலன் (27.02.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது…
Don't Miss
- Sports
அதிகாரபூர்வ புகார் அளிக்க முடிவு.. சாட்டையை சுழற்றும் இங்கிலாந்து.. தீவிரமடையும் அகமதாபாத் சர்ச்சை
- Finance
முகேஷ் அம்பானி மீண்டும் நம்பர் 1.. இனி யாராலும் அசைக்க முடியாது..!
- Automobiles
புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு!
- News
அதிமுக, திமுக விரித்த வலையில் சிக்காத கமல்.. 3ஆவது அணி அமைகிறதா.. "அவர்" இருந்தா நல்லாயிருக்குமே!
- Movies
நான் ஒரு ஜிம் பாடி.. வெளிச்சம் போட்டுக் காட்டிய ஷிவானி.. தூக்கம் தொலைத்த ரசிகர்கள்
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொரோனா வைரஸ் போலவே காட்சி தரும் கடம்ப மர பூக்கள் - காய்ச்சல் குணமாக கசாயம் குடிங்க...
கடம்ப மரம் தெய்வீக மரமாகும். முருகனை "கடம்ப மாலையை இனி விட நீ வரவேணும்" என்று அருணகிரிநாதர் வேண்டுவதிலிருந்து இதன் பெருமையை அறியலாம். கடம்ப மரப்பட்டை இருமல் மற்றும் கர்ப்பப்பைக் கோளறுகளில் இருந்து நம்மை காக்கும் உடல் சூட்டைத்தணிக்கும். ஜுரத்தின்போது ஏற்படும் தாகம் தணிக்க சாறு பயன்படும். கடம்ப மரத்தில் பூக்கள் மஞ்சள் வண்ணத்தில் பூத்திருக்கும் அப்போது இளம் வண்ணத்துப் பூச்சிகள் தேன் உறிஞ்ச வட்டமிட்டு, மரமெங்கும் பட்டாம் பூச்சிகள் நிறைந்து கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இப்போ கொரோனா வைரஸ் எல்லோரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்த கடம்ப பூக்களை பார்க்கும் போது கொரோனா வைரஸ் போல காட்சி அளித்தாலும் இது காய்ச்சலை குணமாக்கும் அற்புத மருந்தாகும்.
கடம்ப மாலை போர் களத்திற்குச் செல்லும் போர் வீரர்கள் அணிவார்கள் என்று அறிகிறோம். அன்னை காமாட்சி கடம்பவனத்தில், காஞ்சி புரத்தில் தவக் கோலத்தில் எழுந்தருளியிருப்பதால் அன்னைக்கும் பிரிய மரமாகி, சந்திர மௌளீஸ்வரரை அடைய உதவியிருக்கிறது.
MOST READ: 60, 70-களில் சளி, காய்ச்சலைப் போக்க நம் முன்னோர்கள் குடித்த கசாயம் இதாங்க...
கடம்ப மரம் தமிழர்களோடு ஆதி காலத்திலிருந்தே பின்னிப் பிணைந்துள்ளது. தமிழ்க்கடவுளான முருகனுக்கு கடம்பா என்றும் ஒரு பெயருண்டு. கடம்ப மரத்தின் பெருமையை நமக்கு உணர்த்த, முருக பக்தரான அருணகிரி நாதர்.
தகட்டிற் சிவந்த கடம்பையு நெஞ்சையுந் தாளிணைக்கே
புகட்டிப் பணியப் பணித்தரு ளாய்புண்டரீகனண்ட
முகட்டைப் பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை முட்டவெட்டிப்
பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே
என்று கடம்ப மரத்தைப் பற்றி கந்தர் அலங்காரம் நூலில் பெருமையோடு குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், கடம்ப மரத்தைப் பற்றி, திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிலப்பதிகாரம், மணிமேகலை, கலித்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு என அனைத்து சங்க காலப்பாடல்களிலும் பெருமையோடு குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், கடந்த 1977ஆம் ஆண்டு மத்திய அரசு கடம்ப மரம் பொறிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பு சேர்த்தது.
MOST READ: இந்த பழக்கத்தை உடனே கைவிடுங்க.. இல்ல கொரோனா உங்களே தேடி சீக்கிரம் வரும்...

கடம்ப மரம் மருத்துவ குணம்
கடம்ப பூக்கள் அருமையான நறுமணம் கொண்டவை. அத்தர் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தின் வேர், பட்டை, இலை, காய், கனி, விதை அனைத்துமே மருத்துவ குணம் மிகுந்தவை. சிறுநீரகக் கோளாறுகளைப் போக்குகிறது. சிறுநீர் பிரச்னைகள், இரத்த சோகை, தோல் நோய்கள் ஆகியவற்றை போக்க உதவுகின்றன. மரத்தின் இலைச் சாறு வாய்ப் புண்ணை குணப்படுத்துவதோடு, தொண்டை அழற்சியையும் போக்கி, வயிற்றுப் பிரச்னையை தீர்ப்பதுடன், ஜீரண மண்டல உறுப்புகள் சீராக செயல்பட உதவும்.

காய்ச்சல் தணிக்கும் கடம்ப மரம்
தண்டின் பட்டை வாய் குழறுதலை தடுக்கும். பித்தமாற்றானது சிறுநீர்ப்பை அழற்றியைத் தடுக்கும். ஜூரத்தைத் தடுக்கும். காய்ச்சல் தணிக்கும். கடம்ப மரப்பட்டையை தண்ணீரில் ஊற வைத்து காய்ச்சி அந்த நீரை குடித்தால் காய்ச்சல் குணமாகும். கடம்ப விதைகளை அரைத்து நீரில் கலந்து குடித்தால் விஷம் முறியும். கஷாயம் வாய்ப்புண்ணுக்கு வாய் கொப்பளிக்க உதவும்.

முருகனுக்கு உகந்த கடம்ப மரம்
கடம்ப மரம் முருகனுக்கு மட்டுமல்ல, திருமாலுக்கும் உகந்த மரமாகும். பகவான் கிருஷ்ணருக்கு மஞ்சள் நிறமுடைய கடம்ப பூக்கள் மிகவும் பிடித்தமான ஒன்றாகும் என விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடம்ப மரம் நீரோட்டம் அதிகமுள்ள இடங்களில் தான் செழித்து வளரும் தன்மை கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் இவை அதிகம் காணப்படுகின்றன.

கடம்ப வனம்
நாம் இப்போது பார்க்கும் மதுரை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு கடம்ப மரங்களால் சூழப்பட்ட அடர்ந்த வனப்பகுதியாகும். அதனால் தான் மதுரைக்கு கடம்பவனம் என்று ஒரு பெயரும் உண்டு. அன்னை மீனாட்சியை கடம்பவனவாசினி, கடம்பவனபூவை என்றும் அழைப்பதுண்டு. இதன் காரணமாகவே, மீனாட்சியம்மன் கோவிலில் கடம்ப மரம் தலவிருட்சமாக உள்ளது. சொக்கநாதர் சன்னதிக்கு அருகில் பல நூறு ஆண்டுகள் பழமையான கடம்ப மரத்தை வெள்ளித் தகடு போர்த்தி பக்தர்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.

கடம்ப மரத்தின் மருத்துவ குணம்
கடம்ப மரத்தின் வேர், பட்டை, இலை, காய், மலர் என அனைத்துமே மருத்துவ பலன்களை அளிக்கின்றன. இதன் இலை மற்றும் பட்டைகளில் இருந்து காடமைன், ஐசோகாடமைன், கடம்பைன் ஆகிய அல்கலாய்டுகள் தயாரிக்கப்பட்டு அதிலிருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. கடம்பமர இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் குளோராஜெனிக் அமிலம் மருத்துவ குணம் நிறைந்தது.

கருப்பை கோளாறு நீங்கும்
இம்மரத்தின் பூக்களை வேகவைத்து அதன் நீராவியை வடிகட்டி தயாரிக்கப்படும் தைலம் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுகிறது. இதன் பட்டைகள் பெண்களின் கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையை கொண்டது. பிரசவித்த பெண்களுக்கு சரியான முறையில் தாய்ப்பால் சுரக்காமல் அவதிப்படும்போது, இதை மருந்தாக பயன்படுத்தலாம்.

குளிர்ச்சி தரும் கடம்ப மரம்
கடம்ப மரம் அதிக குளிர்ச்சியை தருவதால், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் வீடுகளில் கடம்ப மரத்தை வளர்த்து வருகிறார்கள். இதன் இலைச் சாறுகள் வாய் புண்ணை குணப்படுத்துவதோடு, தொண்டை அழற்சி மற்றும் வயிற்று உபாதைகளை போக்குவதோடு, நமது ஜீரண மண்டல உறுப்புகள் சீராக செயல்பட வைக்கிறது. கடம்ப இலை சாறுடன் சிறிது சர்க்கரை மற்றும் சீரகத்தை சேர்த்து குடித்தால் வயிற்றுப் பொருமல் பிரச்சனை தீரும். இலைகளை சூடுபடுத்தி காயம்பட்ட இடத்தில் வைத்து கட்டினால் வலி நீங்கி விரைவில் குணமாகும்.