For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவை விரட்டும் கபசுர குடிநீரில் இத்தனை மூலிகைகள் இருக்கா - மருத்துவ பயன்கள்!

|

மனிதனின் சுவாச குழாயில் நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் கிருமிகள் நுரையீரல் செல்களை தாக்கி அழிக்கும் தன்மையை கொண்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்களில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கப சுர சுடிநீர் குடிக்கலாம் என சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சேரி வேரி, அக்ரகாரம், முள்ளிவேர், ஆடாதோடா இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் தண்டு, சிறுதேக்கு, நிலவேம்பு சமூலம், வட்டத்திருப்பி வேர், கோரைக்கிழங்கு, கடுக்காய் தோல் ஆகிய 15 வகையான மூலிகைகள் இருக்கின்றன.

உடலில் நோய் எதிா்ப்பு சக்தி போதிய அளவு இருந்தாலே போதும், எந்த வைரஸாலும் செயல்பட முடியாது. அதனால் உடம்பில் எதிா்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள வேண்டும். கொரோனா போன்ற வைரஸ் தொற்றை தடுக்கவும் சித்த மருத்துவத்தில் தீர்வு நிச்சயம் உண்டு.. காய்ச்சல், சளி, இருமல், தும்மல், முக்கடைப்பு, மூக்கில் இருந்து நீா் வடிதல் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சித்த மருந்துகளை எடுத்துக்கொண்டால் பலன் நிறைய உண்டு என சித்த மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளதால் கபசுர குடிநீர் மூலிகையை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வருமுன் காப்போம் முறையை கையாண்டுதான் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற நோய்களில் இருந்து தப்பியுள்ளோம்.

MOST READ: மே 29-ல் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் - இது நிஜம் தானா? உண்மை என்ன?

செம்பு பாத்திரங்களின் உண்மையான பயன்களை அறிந்து தான் தமிழர்கள் பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். பழங்காலத்தில் வாழ்ந்து வந்த சித்தர்களும், முனிவர்களும் கூட பெரும்பாலும் செம்பு பாத்திரங்களையே பயன்படுத்தி வந்துள்ளனர். இதே போல கபசுர குடிநீரில் உள்ள முக்கிய மூலிகைகளின் பயன்களை அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செம்பு பாத்திரங்கள்

செம்பு பாத்திரங்கள்

கொரோனா வைரஸ்கள் பீங்கான், கண்ணாடி, ரப்பர், சிலிக்கான், டஃப்ளான் போன்ற பொருட்களில் அதிக நாட்கள் உயிர்வாழும் தன்மையை கொண்டுள்ளது. ஆனால், செம்பு பாத்திரங்களில் இருந்த கொரோனா வைரஸ் கிருமிகள் இரண்டு மணி நேரத்திலேயே செயலிழந்துவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. செம்பு பாத்திரங்களில் குடிநீரை பிடித்து வைத்து 24 மணி நேரம் கழித்து அந்த நீரை பரிசோதித்து பார்த்ததில் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிர் கிருமிகள் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

சுக்கு

சுக்கு

சுக்குவில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக பலரும் இதனை சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்த மட்டும் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த சுக்கு பொடியைக் கொண்டு வேறு சில ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். இருமலுக்கு சுக்கு பயன்படுத்தினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

லவங்கப்பட்டை

லவங்கப்பட்டை

டைப் 2 வகை நீரிழிவுநோயை சமாளிப்பதில் இலவங்கப்பட்டை உதவுகிறது என்று சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இது இரத்த அழுத்தம் மற்றும் இன்சுலின் எதிர்ப்புப் பண்புகளைக் குறைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

திப்பிலி

திப்பிலி

‘ஈளை யிருமல் இரைப்பு பசப்பிணிகள்... நாசிவிழி காதிவை நோய் நாட்புழுநோய்...' எனத் திப்பிலி சார்ந்து பாடப்பட்டுள்ள தேரையரின் பாடல்கள், இருமல், இரைப்பு, சுவையின்மை, மயக்கம், தலைவலி, தொண்டை நோய் போன்ற பல நோய்களுக்குத் திப்பிலி எதிரி என்பதைத் தெளிவுபடுத்துகிறது. நுரையீரல் பாதைத் தொற்றுகளை அழிக்கும் சக்தி திப்பிலிக்கு உண்டு. கோழையை வெளியேற்றும் செய்கை இருப்பதால், `கோழையறுக்கி' என்னும் பெயரைச் சுமக்கும் திப்பிலி, ஆஸ்துமாவுக்கான சிறந்த மருந்து. தொண்டைக் கரகரப்பும், இருமலும் அதிகரிக்கும்போது மூன்று விரல் அளவு திப்பிலிப் பொடியை வெற்றிலையில் வைத்துக் கடித்துச்சாப்பிடலாம்.

ஆடாதொடை

ஆடாதொடை

கபத்தால் உண்டாகும் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்பட்டு வரும் மூலிகை ஆடாதொடை ஆகும். பழங்கால நூல்களில், இந்த தாவரம் ஒரு முக்கியமான மூலிகையென குறிப்பிடப்படுகிறது. சமீபகால ஆராய்ச்சிகளில் ஆடாதொடை யிலிருந்து கிடைக்கும் 'வாசிசைன்' பற்றிய பல பயன்கள் தெரிய வந்துள்ளன. இந்த காரத்தன்மையுடைய வாசிசைன் மூச்சுக்குழாய் அடைப்புகளை போக்குகிறது.

கோரை கிழங்கு

கோரை கிழங்கு

கோரை கிழங்கு எந்தவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக, மலேரியா காய்ச்சலை குணப்படுத்த கூடியது. ரத்தச் சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்யும். சளி தொந்தரவுகளை போக்கும்.

சீந்திரல் தண்டு

சீந்திரல் தண்டு

சீந்தில் தண்டு மருத்து குணங்கள் கொண்டது. காய்ச்சலின் அறிகுறிகளையும் முறியடிக்கிறது. மிகவும் தீவிர காய்ச்சல்களான டெங்கு, மலேரியா மற்றும் ஸ்வைன் ஃப்ளூ ஆகியவற்றை விரட்டி அடிக்கிறது. இதிலுள்ள ஆன்டி கிளைசமிக் குணங்கள், குளுகோஸ் ரத்தத்தில் அதிகமாவதை தடுத்து, கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதே போல், ஆஸ்துமா மற்றும் மூச்சிரைப்பு , வறட்டு இருமல் ஆகியவற்றை சரிப்படுத்துகிறது.

கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி

மார்புச்சளி நீங்கவும், ஆடிக்கடி மூச்சு விட முடியாமல் சிரமப்படுபவர்களும் கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி சாறு எடுத்து. 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்புச்சளி குணமடையும். சளி தொந்தரவுகளை போக்கும் இத்தகைய மூலிகைகளை கலந்த மருந்துகளை கசாயமாக காய்ச்சி குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kabasura Kudineer Prevent Coronavirus Affect - Siddha Herbal Remedy

The novel coronavirus strain has no known cure or preventive vaccine yet, according to health experts around the world. Kabasura Kudineer is a potential siddha herbal remedy for infections from viruses like corona.
Story first published: Tuesday, March 31, 2020, 13:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more