For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் 'கக்கா' டைட்டா வருதா? அப்ப இத செய்யுங்க.. உடனடி ரிலீப் கிடைக்கும்...

உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து, பின் நீருடன் அதனை சாப்பிட்டால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

|

நீங்கள் தினமும் மலம் கழிக்க கஷ்டப்படுகிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. பொதுவாக செரிமான பிரச்சனைகள் அசௌகரியத்தை உண்டாக்குவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையையும் உண்டாக்குகிறது. செரிமான பிரச்சனைகளுக்கு மத்திரைகளை எடுத்தால், அதனால் உடல் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். அதோடு மாத்திரையால் இந்த பிரச்சனை தற்காலிகமாக சரியாகுமே தவிர, முழுமையாக குணமாகாது.

How To Use Soaked Figs For Constipation

எனவே நாம் சந்திக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் எடுத்த உடனேயே மருந்து மாத்திரைகளை நாடாமல், நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில கை வைத்தியங்களைப் பின்பற்றுவது சிறந்த யோசனையாகும். ஒருவர் அன்றாடம் மலம் கழித்தால் தான் உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். வாரத்திற்கு 3 முறை கழிப்பவர்கள் அல்லது மலம் மிகவும் இறுக்கமானால், உடலின் செரிமான மண்டலம் மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம்.

MOST READ: 6 வகையான கொரோனா வைரஸை கண்டறிந்த விஞ்ஞானிகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மலச்சிக்கல் பிரச்சனைக்கு நம் முன்னோர்கள் எந்த வழிகளைப் பின்பற்றினார்கள் என்று நீங்கள் கேட்கலாம். இப்போது அவற்றில் ஒரு அற்புதமான வழியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எந்த பழம் மலச்சிக்கலைப் போக்கும்?

எந்த பழம் மலச்சிக்கலைப் போக்கும்?

பலரும் அதிகம் அறியாத அத்திப்பழம் செரிமான மண்டலத்திற்கு நன்மை அளிக்கக்கூடியது. அத்திப்பழம் ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் வளரக்கூடியது. இது பார்ப்பதற்கு ஊதா அல்லது பச்சை நிறத்தில் காணப்படும். இந்த பழத்தில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிரம்பியுள்ளது. இந்த பழம் உலர்ந்த வடிவிலும் கடைகளில் விற்கப்படுகிறது. ஆனால் உலர்ந்த பழத்தை விட நற்பதமான பழத்தில் தான் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. முக்கியமாக நற்பதமான அத்திப்பழத்தில் சர்க்கரை மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிட ஏற்றப் பழம்.

அத்திப்பழம் குடல் ஆரோக்கியத்திற்கு எதனால் நல்லது?

அத்திப்பழம் குடல் ஆரோக்கியத்திற்கு எதனால் நல்லது?

அத்திப்பழத்தில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ, பி போன்றவை அதிகம் உள்ளது. அதோடு அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிரம்பியுள்ளதால், இது வயிறு மற்றும் செரிமானத்திற்கு சிறப்பான உணவுப் பொருள். இதனால் தான் இது பல்வேறு வயிற்று பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுவதோடு, மலம் இறுக்கமடைவதைத் தடுக்கும் மற்றும் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். தினமும் இந்த பழத்தை உட்கொண்டு வந்தால் உடல் எடையிலும் மாற்றத்தைக் காணலாம்.

மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும் அத்திப்பழம்

மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும் அத்திப்பழம்

உடலில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் மலக்குடலிலேயே தங்கி வெளியேற்றுவதற்கு சிரமமாக இருக்கும் நிலை தான் மலச்சிக்கல். ஆய்வு ஒன்றில் சுமார் 22 சதவீத இந்தியவர்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுவதாக தெரிய வந்துள்ளது. அதோடு, நாள்பட்ட மலச்சிக்கல் பல்வேறு தீவிர பிரச்சனைகளான அரிப்பு, இரத்தக்கசிவு மற்றும் குத பிளவுகள் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். எனவே இந்த நிலையை அடையாமல் இருக்க நினைத்தால், ஆரம்பத்திலேயே இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயற்சிப்பதே நல்லது. அதோடு, உண்ணும் உணவுகளில் புரோபயோடிக் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உலர்ந்த அத்திப்பழம்

உலர்ந்த அத்திப்பழம்

நற்பதமான அத்திப்பழம் வருடம் முழுவதும் கிடைக்காது. எனவே உலர்ந்த அத்திப்பழத்தைத் தேர்ந்தெடுத்து அன்றாடம் உண்பது சிறந்த வழி. அதிலும் உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

அத்திப்பழம் ஊற வைத்த நீரை குடிக்கலாமா?

அத்திப்பழம் ஊற வைத்த நீரை குடிக்கலாமா?

அத்திப்பழம் ஊற வைத்த நீரை எதற்கு குடிக்க வேண்டுமெனில், அதில் தான் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இந்நீரைக் குடிக்கும் போது, அந்த நார்ச்சத்து எளிதில் உடலுக்கு கிடைத்து, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

செய்முறை:

செய்முறை:

* முதலில் 2-3 உலர்ந்த அத்திப்பழத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைந்தது 4-5 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

* முக்கியமாக ஒரு நாளைக்கு 2-3 உலர்ந்த அத்திப்பழத்திற்கு மேல் சாப்பிட வேண்டாம். இல்லாவிட்டால், வயிற்று பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

* இன்னும் சிறப்பான பலன் கிடைக்க வேண்டுமானால், ஆரோக்கியமான டயட் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேற்கொள்ளுங்கள்.

* குறிப்பாக நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Soaked Figs For Constipation

Figs or anjeer acts as a natural laxative that helps in treating constipation and diarrhea. Eat 2-3 overnight soaked figs to get relief.
Desktop Bottom Promotion